செய்திகள் :

மதுரை மீனாட்சியம்மன் கோவில்: "அபிஷேக தீர்த்த கிணறு அருகிலேயே குப்பைகள் தேக்கம்" - அண்ணாமலை புகார்

post image

மதுரையில் வீ த லீடர்ஸ் அமைப்பின் சார்பாக வைகை ஆற்றைச் சுத்தப்படுத்தும் பணிகள் இன்று நடைபெற்றன. இதில் கலந்துகொண்ட அண்ணாமலை குப்பைகளை அகற்றும் பணிகளில் ஈடுப்பட்டார்.

இதைத் தொடர்ந்து தூய்மைப் பணியில் ஈடுபட்ட வீ த லீடர்ஸ் அமைப்பினரிடையே பேசிய அண்ணாமலை, “இன்று 500 முதல் 1000 பேர் வரை பங்கேற்றுள்ளனர். அடுத்த வாரம் கல்லூரி மாணவர்கள், நண்பர்கள், நடைபயிற்சி குழுவினர் உள்ளிட்ட புதியவர்களை அழைத்து வர வேண்டும். ஒவ்வொரு வாரமும் புதிய தன்னார்வலர்கள் இணைந்தால்தான் இந்தப் பணியை மக்கள் இயக்கமாக மாற்ற முடியும்.

சிங்கப்பூர், துபாய் போன்ற நாடுகளில் யாரும் குப்பை கொட்டுவதில்லை. காரணம், அங்கு சுற்றுப்புறம் சுத்தமாக இருப்பதால் பொதுமக்களிடையே பொறுப்புணர்வு உருவாகியுள்ளது. அதே உணர்வை மதுரையிலும் உருவாக்க வேண்டும். சுத்தமான சூழலை உருவாக்கினால், மக்கள் தாமாகவே குப்பை கொட்டும் பழக்கத்தைக் கைவிடுவார்கள்.

அரசியல் மேடைகளில் பேசுவதைவிட களத்தில் இறங்கி பணியாற்றுவதே சமூக மாற்றத்தை ஏற்படுத்தும். கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தமிழகம் முழுவதும் 602 இடங்களில் நடத்தப்பட்டு, சுமார் 40 லட்சம் மக்களைச் சென்றடைந்துள்ளது.

குப்பைகளை அகற்றும் பணியில் அண்ணாமலை
குப்பைகளை அகற்றும் பணியில் அண்ணாமலை

அதேபோல், கன்னியாகுமரி முதல் தூத்துக்குடி வரை 175 கிலோமீட்டர் கடற்கரையை ஓராண்டுக்குள் சுத்தப்படுத்தும் இலக்குடன் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதே மாதிரி வைகை ஆற்றையும் 52 வாரத்திற்குள் சுத்தப்படுத்த வேண்டும்.

தேனி மாவட்டத்தில் தோன்றி திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் வழியாக சுமார் 258 கிலோமீட்டர் பயணிக்கும் வைகை ஆறு, 8,000 சதுர கிலோமீட்டர் ஆற்றுப்படுகையைக் கொண்ட முக்கிய நதி.

முல்லைப்பெரியாறு அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் குப்பைகளை முழுமையாக அடித்துச் செல்லாது; மண்ணுக்கடியில் பல ஆண்டுகளாக குப்பைகள் புதைந்து கிடக்கின்றன. குப்பைகளை அகற்றும் தன்னார்வலர்கள் பாதுகாப்பு உபகரணங்களுடன் பணியாற்ற வேண்டும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் அபிஷேக தீர்த்தம் எடுக்கப்படும் பழமையான கிணறு அருகிலேயே குப்பைகள் தேங்கி இருக்கின்றன. அவை நிலத்தடி நீரை மாசுபடுத்தும்.

குப்பைகளை அகற்றும் பணியில் அண்ணாமலை
குப்பைகளை அகற்றும் பணியில் அண்ணாமலை

வயதானவர்கள் மற்றும் பெண்கள் அதிக நேரம் உழைக்காமல் அவர்களால் முடிந்த அளவு வேலை செய்தால் போதும். அடுத்த வாரம் நடைபெறும் தூய்மைப் பணிக்கு ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ஒருவரையாவது புதிய தன்னார்வலராக அழைத்து வர வேண்டும்.

இதில் கல்லூரி மாணவர்களை அதிகளவில் பங்கேற்கச் செய்ய வேண்டும். மேடைகளில் பேசுவதற்குப் பதிலாக களத்தில் இறங்கி பணியாற்றுவோம். மாறுவோம், மாற்றுவோம். நமது ஊர், நமது வைகை, நமது பொறுப்பு என்பதை உணர்ந்து அனைவரும் இந்த மக்கள் இயக்கத்தில் இணைய வேண்டும்" என்றார்.

பழனி: "திமுக-வை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே தவெக-வுக்கு ஆதரவு" - எஸ்.பி. வேலுமணி

பழனியில் சட்டமன்ற உறுப்பினர் ரவிமனோகரன் அவர்களின் புதிய அலுவலகத் திறப்பு விழா நடைபெற்றது. இதில் அ.தி.மு.க மூத்த தலைவர்களும் முன்னாள் அமைச்சர்களுமான எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், கே.பி. அன்பழகன்,... மேலும் பார்க்க

காவிரி நீர் விவகாரம்: கர்நாடகாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு; தமிழ்நாடு அரசு சொல்வது என்ன?

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் (CWRC) உத்தரவுகளின்படி கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடாத நிலையில் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழ... மேலும் பார்க்க

”பிரச்னை வரும்போது ரீல்ஸ் போட்டு மக்களை டைவர்ட் செய்கிறார் முதல்வர்” - உதயநிதி ஸ்டாலின் சாடல்

விவசாயக் கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யவும், டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வலியுறுத்தியும், மேகதாதுவில் அணை கட்டுவதைத் தடுக்க தவறிய தவெக அரசைக் கண்டித்தும் திமுக சார்பில் சட்டமன்ற எ... மேலும் பார்க்க

பீகார் இடைத்தேர்தல்: பிரசாந்த் கிஷோர் வெற்றி உறுதி; பாஜக பின்னடைவு; தற்போதைய நிலவரம் என்ன?

பீகார் மாநிலத்தின் பங்கிப்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாகப் பதவிவகித்தவர் பா.ஜ.க-வைச் சேர்ந்த நிதின் நபின். இவர் மாநிலங்களவை எம்.பி.யாகப் பதவியேற்றார். இதனால் அவரது தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. மத்தி... மேலும் பார்க்க

CWG 2026: 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் - 39 பதக்கங்களுடன் 4-வது இடம் பிடித்த இந்தியா!

கிளாஸ்கோவில் நடைபெற்ற 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நேற்றோடு (ஆகஸ்ட் 2 ) நிறைவடைத்துள்ளது. இப்போட்டி இந்தியாவுக்கு நம்பிக்கை தரும் விதமாக அமைந்துள்ளது. இந்தியாவிலிருந்து 122 வீரர், வீராங்கனைகள்... மேலும் பார்க்க

"என் சர்டிபிகேட்டைக் காண்பிக்கிறேன்; பேரரசர் தன் டிகிரியைக் காட்டுவாரா?"- யாரைச் சொல்கிறார் அபிஜித்?

''டெல்லி மாணவர்கள் போராட்டத்தை வழிநடத்தி முன்னெடுத்த காக்ரோஜ் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே அமெரிக்காவிற்குச் சென்று படிக்க பணம் எப்படி கிடைத்தது? அவர் வெளிநாட்டிலிருந்து பணம் பெற்றுதான் இந்த... மேலும் பார்க்க