செய்திகள் :

"மதுவிலக்கு துறையில் தவறு செய்பவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை" - அமைச்சர் விக்னேஷ் உறுதி

post image

கோவை - பொள்ளாச்சி சாலையில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் அமைச்சர்கள் மதன்ராஜா, விக்னேஷ் ஆகியோர் இரு சக்கர வாகனத்தில் சென்று ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் மதன்ராஜா, ”மூலப் பொருட்கள் விலை உயர்வு என்பது இந்திய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டது அல்ல, அது உலகளாவிய விஷயம். அண்மையில் நடந்த போர் காரணமாகவும், மூலப்பொருட்கள் விலை அதிகரித்தது.

அமைச்சர்கள் மதன்ராஜா, விக்னேஷ்
அமைச்சர்கள் மதன்ராஜா, விக்னேஷ்

அது நிலையானது அல்ல, நிச்சயமாக அதுவும் மாறும். மின்சார நிலை கட்டணத்தைக் குறைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பெண் தொழில் முனைவோர்களுக்காக 10 தொழில் பேட்டைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. கோவை தங்க நகை தொழில் பூங்கா கட்டுமான பணிகள் குறித்து ஒரு மாதத்திற்கு முன்பே ஆய்வு செய்தோம். சிட்கோ தொழில் பேட்டையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுமார் 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதனால் பல்வேறு இடங்களில் பராமரிப்பு வேலைகள் செய்ய வேண்டிள்ளது. பராமரிப்புப் பணிகளால் சில இடங்களில் மின்தடை ஏற்படலாம். பராமரிப்புப் பணிகள் முடிந்தவுடன் அங்கு மின்சாரம் மிகவும் நன்றாக இருக்கிறது” என்றார்.

அமைச்சர்கள் மதன்ராஜா, விக்னேஷ்
அமைச்சர்கள் மதன்ராஜா, விக்னேஷ்

தொடர்ந்து பேசிய அமைச்சர் விக்னேஷ், ”மதுவிலக்கு துறையில் தவறு செய்ததால் சஸ்பெண்ட் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தவறு செய்தது நிரூபிக்கப்பட்டால் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்.

அதில் பாரபட்சம் காட்டப்படாது. ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகள் முன்வைக்க வேண்டும். சிலர் கடைநிலை தொழிலாளர்களிடம் மிரட்டி பணம் பறிப்பதற்காக வீடியோ எடுப்பதாக தொழிலாளர்கள் தரப்பிலிருந்து புகார்கள் வருகிறது.

எனக்கு அழுத்தம் வருகிறதா எனத் தெரியாது. ஆனால் நல்லது செய்கிறபோது, சும்மா இருப்பவர்கள் அழுத்தங்கள் கொடுக்கத்தான் செய்வார்கள். முடிந்ததை அவர்கள் செய்யட்டும் பார்த்துக் கொள்ளலாம். தி.மு.க-வினர் முதல்வரைக் கடுமையாக விமர்சித்ததை வன்மையாகக் கண்டிக்கிறோம். அதே சமயம் இதைப்பற்றி பேசுவதற்கு கட்சியிலிருந்து செய்தி தொடர்பாளர்கள் இருக்கிறார்கள், அவர்கள் அதைப் பற்றி பேசுவார்கள்” எனத் தெரிவித்தார்.

இடைத்தேர்தல்: "கனத்த இதயத்துடன் ஏற்கிறோம்" - இடதுசாரிகளின் முடிவு குறித்து மாணிக்கம் தாகூர்

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் இன்று (செப்.15) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.அப்போது அவரிடம் இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகள் தனித்து போட்டியிடுவது குறித்து கேள்வி எழுப்... மேலும் பார்க்க

UPI பரிவர்த்தனைகளுக்கு ரூ.2,000 வரை 'நோ' கட்டணம் - மத்திய அரசு விளக்கம்; அதற்கு மேல்?

காசு, பணத்தையெல்லாம் மறந்து, டிஜிட்டல் பேமென்ட்டுக்கு பெரும்பான்மையான இந்தியர்கள் மாறி பல காலமாகிவிட்டது.இந்த நேரத்தில், யுபிஐ பேமென்ட்டுகளுக்குக் கட்டணம் என்கிற பேச்சு எழுந்து, இந்திய மக்களிடம் ஒரு ‘... மேலும் பார்க்க

`விஜய் சேதுபதியின் விமர்சனத்திற்கு பதில் சொல்ல தேவையில்லை; பார்வையாளர்களைக் கவர...'- அமைச்சர் சம்பத்

கோவை மாநகராட்சி வ.உ.சி. மைதானம் அருகே உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனை தொடக்க விழா நடைபெற்றது. இதனை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார்... மேலும் பார்க்க

தாராபுரம் இடைத்தேர்தல்: வரிசை கட்டும் பெண் வேட்பாளர்கள்; சூடுபிடிக்கும் பிரசாரக் களம்!

தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி நடைபெற இருக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் தாராபுரம் தனி தொகுதியி... மேலும் பார்க்க

BRICS: ஒன்றுகூடிய இந்தியா, சீனா, ரஷ்யா; ட்ரம்பிற்கு சொல்லும் Lesson! De Dollarisation புது வடிவிலா?

இந்தியாவின் தலைமையின் கீழ், டெல்லியில் 18-வது பிரிக்ஸ் மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான், தென்னாப்பிரி... மேலும் பார்க்க

"சினிமாவில் நடித்தவர் இப்போது மக்கள் முன் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார்"- விஜய் குறித்து டிடிவி

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சென்னையில் இன்று (செப்.15) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போது முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.அதற்கு பதிலளித்த... மேலும் பார்க்க