செய்திகள் :

மருத்துவப் படிப்பு டு குடிமைப் பணி; தென்காசியின் முதல் பெண் ஆட்சியர் - யாரிந்த மோனிகா ராணா ஐ.ஏ.எஸ்?

post image

தென்காசி மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக டாக்டர் மோனிகா ராணாவை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் மாவட்ட ஆட்சியர் என்ற பெருமையை இவர் பெறுகிறார்.

உத்தரகாண்ட் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட டாக்டர் மோனிகா ராணா, சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பை முடித்தவர். மருத்துவத் துறையிலிருந்து குடிமைப் பணிக்குத் தேர்வாகி, தற்போது மாவட்ட ஆட்சியர் பொறுப்பை எட்டியிருப்பது அவரது பணிப் பயணத்தில் முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது.

2018-ஆம் ஆண்டு தமிழ்நாடு கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரியான இவர், தனது பயிற்சிக் காலத்தில் சேலம் மாவட்டத்தில் சார் ஆட்சியராகப் பணியாற்றியுள்ளார்.

மோனிகா ராணா

தொடர்ந்து, மலைப்பகுதி மற்றும் சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ் திட்ட இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். பின்னர், மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மற்றும் திட்ட இயக்குநராகப் பொறுப்பு வகித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளராகப் பணியாற்றிய அவர், தற்போது தென்காசி மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மாவட்டத்தின் எட்டாவது ஆட்சியராகப் பொறுப்பேற்க உள்ள டாக்டர் மோனிகா ராணா, தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார்.

மருத்துவப் படிப்பு, ஐ.ஏ.எஸ் பயிற்சி, பல்வேறு நிர்வாகப் பொறுப்புகள் எனப் படிப்படியாக உயர்ந்து வந்துள்ள அவரது அனுபவம், தென்காசி மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிகளில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற ஏதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

`நான் இல்லை என்றாலும் தொண்டர்கள் பணியாற்றுவார்கள்; திசை திருப்பவே இந்தச் சோதனை!' - கே.என்.நேரு

முன்னாள் தி.மு.க அமைச்சர் கே.என்.நேருவின் திருச்சியில் உள்ள வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்குப் பின்னர் கே.என்.நேரு செய்தியாளர்களைச் சந்தித... மேலும் பார்க்க

``அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் நான் போட்டியிடுகிறேன்" - சீமான் அறிவிப்பு!

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் தான் போட்டியிடப் போவதாக நாம் தமிழர் கட்சியினர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருக்கிறார்.தான் அனைவருக்குமான பொது வேட்பாளர் என்றும் கூறியிருக்கிறார். மேலும் பார்க்க

கே.என்.நேரு வீட்டில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு; பரபரக்கும் திருச்சி மாவட்ட திமுக!

தி.மு.க முதன்மைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேருவின் திருச்சி தில்லை நகரில் உள்ள இல்லத்தில், இன்று காலை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இன்று காலை 3 பொலிரோ வாக... மேலும் பார்க்க

பிரேசில் தேர்தலில் லுலா வெற்றி! அமெரிக்காவிற்கு தப்பிச்சென்ற போல்சோனாரோ 'நானே அதிபர்' என அறிவிப்பு!

பிரேசிலில் நான்காவது முறையாக ஆட்சியில் அமர்ந்துள்ளார் அந்த நாட்டின் அதிபர் லுலா டா சில்வா.தேர்தல் வெற்றிகடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 25), பிரேசிலில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. ஆரம்பக் கட்ட வா... மேலும் பார்க்க

பேராசிரியர் கலையரசன் கைது விவகாரம்: தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யைச் சந்தித்த கலையரசன்

சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வரும் பிரபல பொருளாதார நிபுணரும், 'The Dravidian Model' நூலின் ஆசிரியர்களில் ஒருவருமான கலையரசன், நேற்று அதிகாலை 5 மணியளவில் போலீ... மேலும் பார்க்க

தாய்மாமன் தங்க மோதிர திட்டம்; அரசு மருத்துவமனைகளில் அதிகரிக்கும் அட்மிஷன்- பெட்கள் அதிகரிக்கப்படுமா?

தமிழ்நாட்டில் கடந்த மாதம் தொடங்கப்பட்ட 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தால் தாய்மார்கள் பலரும் தற்போது பிரசவத்துக்கு அரசு மருத்துவமனைக்கு வரத் தொடங்கியிருக்கிறார்கள்.இதனால் அரசு மருத்துவமனைகளின் பிரசவ... மேலும் பார்க்க