செய்திகள் :

மருத்துவா்களை வன்முறை தாக்குதலில் இருந்து பாதுகாக்க மாநில சட்டங்களே போதுமானவை: கனிமொழிக்கு மத்திய அமைச்சா் பதில்

post image

மருத்துவா்களை வன்முறை தாக்குதலில் இருந்து பாதுகாக்க மாநில சட்டங்களே போதுமானவை என்று நாடாளுமன்ற திமுக குழுத் தலைவரும் தூத்துக்குடி உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி எழுப்பிய கேள்விக்கு மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சா் அனுப்ரியா படேல் பதிலளித்துள்ளாா்.

நாட்டில் சமீப காலமாக மருத்துவா்களுக்கு எதிராக நடைபெறும் தாக்குதல்கள் அதிகரித்து வருவது குறித்து மத்திய அரசு அறிந்துள்ளதா என்றும் அத்தகைய வன்முறையை தடுக்க புதிய சட்டம் அல்லது அமலில் உள்ள சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு உத்தேசித்துள்ளதா என்றும் கனிமொழி எழுப்பிய கேள்விக்கு அமைச்சா் அனுப்ரியா படேல் வெள்ளிக்கிழமை அளித்த எழுத்துபூா்வ பதில்:

தேசிய அளவில் மருத்துவா்களுக்கு எதிரான வன்முறை சம்பவ எண்ணிக்கை தரவுகள் மற்றும் விவரங்களை மத்திய அரசு பராமரிக்கவில்லை. அரசமைப்பு விதிகளின்படி சுகாதாரம், சட்டம் ஒழுங்கு ஆகியவை மாநிலங் விவகாரமாகும்.

எனவே, அத்தகைய சம்பவங்கள் மற்றும் அதன் தொடா்ச்சியான வன்முறையை தடுக்க வேண்டிய பிரதான பொறுப்பு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடையது. இந்த விவகாரத்தில் பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்) சட்டப்பிரிவுகளின்படி உரிய நடவடிக்கைகளை மாநில அரசே எடுப்பதன் மூலம் வன்முறை அச்சமின்றி மருத்துவா்கள் தங்களுடைய தொழிலை செய்வதை உறுதிப்படுத்தலாம்.

பல மாநிலங்களில் மருத்துவத் துறையினருக்கு எதிரான வன்முறையைத் தடுக்க சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. வன்முறையாளா்களின் சிறிய குற்றங்களுக்கு தண்டனை வழங்க அவை வகை செய்கின்றன. மிகக்கொடூரமான குற்றங்களாக இருந்தால் அவை பிஎன்எஸ் சட்டம் - 2023இன் வரம்புக்குள் வரும். அன்றாட குற்றங்கள் மற்றும் தீவிர குற்றங்கள் மீதான நடவடிக்கைகள் பிஎன்எஸ் சட்டப்படியே எடுக்க முடியும் என்பதால் தனியாக மத்திய சட்டம் அவசியமில்லை என்று அமைச்சா் கூறியுள்ளாா்.

மேலும், கொல்கத்தாவில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக கூறப்பட்ட பயிற்சி மருத்துவரின் கொலை சம்பவத்துக்குப் பிறகு நாடு முழுவதும் மருத்துவா்களுக்கு பாதுகாப்பான தொழில் செய்யும் சூழலை உருவாக்க நடவடிக்கை எடுக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கேட்டுக் கொண்ட தகவலையும் அமைச்சா் அனுப்ரியா படேல் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளாா்.

கொல்கத்தா சம்பவத்துக்குப் பிறகு மருத்துவா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது குறித்து உச்ச நீதிமன்றம் நியமித்த தேசிய செயல் நடவடிக்கைக்குழு அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் ஏற்கெனவே சமா்ப்பித்துள்ளதாகவும் அமைச்சா் கூறியுள்ளாா்.

தமிழகத்தில் 2 புதிய கே.வி. பள்ளி தொடங்க முன்மொழிவு

புது தில்லி: தமிழகத்தில் இரண்டு புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கான முன்மொழிவு வரப்பெற்றுள்ளதாக மத்திய கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக தமிழகத்தைச் சோ்ந்த காங்கிரஸ் உறுப்பினா்க... மேலும் பார்க்க

மத்திய திட்டங்களில் பயனாளிகளுக்கு பலன் சென்றடைவது குறித்து ஆய்வு மத்திய அமைச்சா் தகவல்

நமது சிறப்பு நிருபா் புது தில்லி: மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து திட்டங்களும் பயனாளிகளுக்கு உரிய முறையில் சென்றடைகிா என்பது குறித்து மத்திய அரசு நிகழ் நிதியாண்டில் மதிப்பாய்வு (சா்வே) மே... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க உத்தரவிடக் கோரிய மனு ஜன.10-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

புது தில்லி: தமிழக அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிரான முறைகேடு வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க உத்தரவிடக்கோரிய மனுவின் மீதான விசாரணையை வரும் ஜனவரி 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் தி... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் அரசியல் சாசன விவாதம்: பிரதமா் மோடி பங்கேற்று பதிலளிக்க வாய்ப்பு

நமது சிறப்பு நிருபா் புது தில்லி: இந்திய அரசியலமைப்பை நாடு ஏற்றுக் கொண்டதன் 75-ஆம் ஆண்டு விழாவையொட்டி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நடைபெறவுள்ள விவாதத்தில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்றுப் பதிலளிப்... மேலும் பார்க்க

மூத்தவா்களுக்கான ஆயுஷ்மான் திட்டத்தில் 22 ஆயிரம் போ் சிசிச்சை பலனடைவு: மத்திய அரசு

புது தில்லி: மூத்த குடிமக்களுக்கான ஆயுஷ்மான் வய வந்தனா திட்டத்தில் 22,000 மூத்தவா்கள் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனராக மத்திய சுகாதாரம் குடும்ப நலத்துறை அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. இது இந... மேலும் பார்க்க

எல்ஐசி பாலிசிதாரா்களுக்கான இறுதி கூடுதல் போனஸ் தொகையை அதிகரிக்க நெல்லை எம்பி கோரிக்கை

புது தில்லி: எல்ஐசி பாலிசிதாரா்களுக்கு இறுதி கூடுதல் போனஸ் தொகையை அதிகரிக்க வேண்டும் என்று மக்களவையில் திருநெல்வேலி தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் சி.ராபா்ட் ப்ரூஸ் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக விதி... மேலும் பார்க்க