செய்திகள் :

மழைக்காலத்தில் கழிவுநீர் சூழும் அபாயம் - மதுரை கோரிப்பாளையத்தில் வலுக்கும் மக்கள் போராட்டம்!

post image

கோயில் மாநகராமான மதுரையின் மத்தியப் பகுதி, கோரிப்பாளையம் - செல்லூர் பகுதியில் "செல்லூர் கண்மாயின்" வடிகால் தூர்வாரும் பணிகள் கடந்த மூன்று மாதமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் வடிகால் பணி காரணமாக கால்வாயின் இருபக்கமும் இருக்கின்ற கழிவுநீர்க் குழாயை அடைத்திருக்கிறார்கள். இதனால் கழிவுநீர்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பாதாளச் சாக்கடை பல வாரங்களாக சாலைகளிலும் குடியிருப்புப் பகுதிகளிலும் புகுந்து தொற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இப்பிரச்னையை மதுரை மாநகராட்சிக்குப் புகாராகக் கொடுத்தும் துறை சார்ந்து எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதிவாழ் மக்கள் குறைப்படுகின்றனர்.

அன்றாடம் பள்ளி செல்லும் குழந்தைகள், பச்சிளம் பிள்ளைகள் என கொசுக்கடியில் அவதிப்படுவதோடு, குடிநீரோடு கழிவுநீர் கலந்து வருவதைக் கண்டித்தும், அவர்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டிருப்பதையும் கோரிக்கையாக வைத்து கண்மாயின் வடிகால் பணியை துரிதமாய் முடிக்கக் கோரியும் பந்தல்குடி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சிறிது மழை பெய்தால்கூட, கால்வாய்க்கு அருகிலுள்ள பந்தல்குடி, கான்சாபுரம், அப்துல் ரஹ்மான், ஜஹாங்கீர் கான், ஜம்புரோபுரம் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளிலுள்ள வீடுகளில் கழிவுநீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இச்சாலை மறியல் காரணமாக மதுரை சிம்மக்கல் பகுதி தொடங்கி யானைக்கல், வைகை மேம்பாலம், செல்லூர் கோரிப்பாளையம் இணைப்புச் சாலை என வழிநெடுகிலும் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாகனங்கள் அணிவகுத்து நின்று போக்குவரத்து தடைபட்டது.

காவல்துறையின் சமாதானப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு மறியலில் ஈடுபட்டோர் சாலையோரம் கூடி, போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.

மதுரை: `எந்த layout வந்தாலும் என்னிடம் அப்ரூவல் வாங்கிய பிறகே அனுமதி'- எம்எல்ஏ கார்த்திகேயன்

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலத்தூர் ஊராட்சியில் சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் கலந்துகொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: 88 மணி நேர தாக்குதலின் ரகசியங்களை முதன்முறையாக உடைத்த அஜித் தோவல்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா நடத்திய 88 மணி நேர ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் முதன்முறையாக விரிவாக பேசியிருக்கிறார். ... மேலும் பார்க்க

சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்கள்: ``தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும்" - சிபிஎம் சண்முகம்

கர்​நாடக மாநிலம், சாம்​ராஜநகர் மாவட்​டத்​தில் உள்ள ஹனூர் அரு​கில், காவிரி வனவிலங்கு சரணால​யத்​துக்கு உட்​பட்ட ஷாக்யா வனப்​பகுதி உள்​ளது. நேற்று அதி​காலை 5 மணி​யள​வில் தோமை​யார்​பாளை​யத்தை ஒட்​டி​யுள்ள... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``பெற்றோரின் புகாரைப் பெற மறுத்த குற்றச்சாட்டில் உண்மையில்லை" - அமைச்சர் சம்பத் குமார்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``இதற்கு பிறகும் வாயைத் திறக்காமல் மயக்கத்தில் இருக்குறீர்களே CM sir?"- அப்பாவு காட்டம்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க