வருசநாடு 98 கிராம மக்கள் போராட்டம்: ``ஆட்சியாளர்களுக்கு உறுத்தவில்லையா?" - சீமான...
"மாட்டுக் கறி குறித்து தமிழகத்தில் இனி எவரும் வாய் திறக்கக் கூடாது" - டாக்டர் கிருஷ்ணசாமி
"மாட்டுக் கறி குறித்து தமிழகத்தில் இனிமேல் எவரும் வாய் திறக்காத அளவிற்கு, எங்களின் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியோடும் உற்சாகத்தோடும் நடக்கும்" என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு மாட்டுக் கறி வழங்குவது குறித்து எவ்வித முன்யோசனையுமின்றி வன்னியரசு கொடுத்த அறிவிப்பை வாபஸ் பெறக் கோரி புதிய தமிழகம் கட்சியினுடைய முன்னெடுப்பில் நாளை சென்னையைத் தவிர, அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக, காலை 11:00 மணி முதல் மதியம் நண்பகல் 01:00 மணி வரையிலும், அந்தந்த மாவட்ட புதிய தமிழகம் கட்சியினுடைய ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்களுடைய தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்திட ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, அதற்கான அனைத்து விதமான ஆயத்தப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இது ஏதோ ஒரு வாய்தவறி வந்த வார்த்தை என்று யாரும் கருதிவிடக் கூடாது. இந்த மாட்டுக் கறி அறிவிப்புக்குப் பின்னால் சாதி, மதம், அரசியல் மற்றும் சர்வதேச சதி ஆகிய பல்வேறு விதமான உள்நோக்கங்கள் புதைந்திருக்கின்றன.
தமிழ்நாட்டில் எந்த ஒரு அரசியல் கட்சி அல்லது சமூக இயக்கங்கள் இதுபோன்ற ஒரு கருத்தைச் சொல்வதற்குத் துணிவில்லாத நிலையில், நிலையற்ற அரசியல் சூழ்நிலை காரணமாகத் தங்களுக்குக் கிடைத்த அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, ஒரு சிறிய அமைப்பு நீண்ட நாள் மறைத்து வைக்கப்பட்ட தங்களுடைய கோட்பாட்டை, தீயக் கொள்கையை ஒட்டுமொத்த தமிழக மக்கள் மீது திணிக்கும் இம்முயற்சியை நாம் வேரோடு பிடுங்கி எறிய வேண்டிய தருணம் இது.

எனவே, நாளை நடக்கக்கூடிய இந்த முதற்கட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில், இனிமேல் ’மாட்டுக் கறி’ குறித்து தமிழகத்தில் எவரும் வாய் திறக்காத அளவிற்கு, ஒரு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய வகையில், இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியோடும் உற்சாகத்தோடும் நடந்திட வேண்டும்.
இது ஒரு சடங்கிற்கான ஆர்ப்பாட்டம் அல்ல. ஒரு சத்தியத்தை நிலைநாட்டுவதற்கான போராட்டத்தின் துவக்கம் இது.
எனவே, நாளை நடக்கக்கூடிய போராட்டத்தில் புதிய தமிழகம் கட்சியினர் திரளாகக் கலந்துகொண்டு, ஒத்த கருத்துள்ள அனைத்து அமைப்புகளையும் அழைத்து, இதில் தமிழகம் ஒன்றுதிரண்டு நிற்கும் என்பதை உறுதிப்படுத்திட வேண்டுகோள் விடுக்கிறேன். அமைதியாக, அதே சமயத்தில் எழுச்சியாக, அனைவரும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பிக்கக் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb














