செய்திகள் :

மார்க்கெட் எங்கே போனா நமக்கு என்ன? பணத்தைப் பெருக்க இந்த சிம்பிள் வழி போதும்!

post image

மாசம் பொறந்ததும் சம்பளம் வருது... ஆனா கைக்கு வர்றதுக்குள்ள வாடகை, இ.எம்.ஐ, கரண்ட் பில், வீட்டுச் செலவுனு எல்லாமே காலி ஆயிடுது.

மனசுக்குள்ள ஒரே பயம்: "நாம கரெக்ட்டாதான் சேமிக்கிறோமா? திடீர்னு ஒரு பெரிய செலவு வந்தா என்ன பண்றது?

ஷேர் மார்க்கெட் ஒரே இடத்துல நிக்குதே, நாம போடுற பணம் வீணா போகுமோ?" இந்த மாதிரி பயமும் குழப்பமும் எல்லாருக்குமே வர்றது ரொம்ப இயல்பான விஷயம்தான்.

ஆனா உண்மையிலேயே, பெரிய அளவில செல்வம் சேர்க்குறதுக்கு மார்க்கெட் எப்ப ஏறும், எப்ப இறங்கும்னு ஜோசியம் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை.

மார்க்கெட்டைக் கணிக்கிறதை விட, நாம மாசம் மாசம் ஒழுங்கா செய்யுற சில சின்ன நல்ல பழக்கங்கள் தான் நம்ம பணத்தைப் பெருக்கும்.

பணத்தைச் சேர்க்க ரொம்ப சிம்பிளான 6 வழிகள்:

வருமானத்தை அதிகமாக்குங்க: உங்க திறமையை வளர்த்துட்டு சம்பாத்தியத்தைப் பெருக்க வழியைப் பாருங்க.

முதல்ல பாதுகாப்பு: 6 மாச செலவுக்கு அவசர கால பணமும், நல்ல மெடிக்கல் இன்சூரன்ஸும் கண்டிப்பா இருக்கணும்.

செலவைக் குறைங்க: கைக்கு பணம் வந்ததும் முதல்ல சேமிப்பு, அப்புறம்தான் செலவு.

எஸ்.ஐ.பி (SIP) போடுங்க: மாசம் ₹5,000 அல்லது ₹10,000-னு மியூச்சுவல் ஃபண்ட்ல ஒழுங்கா முதலீடு பண்ணுங்க.

அப்படியே தொடருங்க: சம்பளம் உயரும் போது முதலீட்டையும் கூட்டுங்க. மார்க்கெட் ஒரே இடத்துல நின்னாலும் பயந்து முதலீட்டை நிறுத்தாதீங்க!

வாய்ப்பைப் பயன்படுத்துங்க: மளிகை சாமான் முதல் தங்கம் வரை விலை குறைஞ்சா அதிகம் வாங்குறோம். அதேமாதிரி சந்தை கீழே இறங்கும்போதும் நல்ல மியூச்சுவல் ஃபண்ட்ஸ்ல முதலீட்டை அதிகரிக்கணும்.

Investment

இப்போதைய இந்திய பங்குச்சந்தை ஒரே இடத்துல நகராம நிக்கலாம் (Sideways market). இதைப் பார்த்து நிறைய பேருக்குச் சலிப்பு வரலாம்.

ஆனா உண்மையில, மார்க்கெட் ஒரே இடத்துல நிக்கும் போது தான் நமக்கு கம்மி விலையில அதிகமான யூனிட்டுகள் (Units) கிடைக்கும். 7 முதல் 10 வருஷம் கழிச்சு பார்க்கும்போது, இந்தக் கூட்டு வளர்ச்சி (Compounding) உங்களுக்கு ஒரு பெரிய தொகையைக் கொடுக்கும்.

முதலீடு பண்றதுக்கு முன்னாடி உங்ககிட்ட கேட்க வேண்டிய 7 கேள்விகள்:

  1. அவசர தேவைக்கு பணம் எடுத்து வச்சிட்டீங்களா?

  2. வீட்டுக்குத் தேவையான இன்சூரன்ஸ் எடுத்துட்டீங்களா?

  3. தெளிவான ஒரு நீண்டகால லட்சியம் இருக்கா?

  4. இந்தப் பணம் உங்களுக்கு 5 அல்லது 7 வருஷத்துக்கு அப்புறம்தான் தேவையா?

  5. மாசம் மாசம் தவறாம எஸ்.ஐ.பி (SIP) பண்ண முடியுமா?

  6. மார்க்கெட் இறங்கினாலும் பயப்படாம தொடர்ந்து முதலீடு செய்வீங்களா?

  7. பிளான் பண்ணி ஒழுக்கமா முதலீடு செய்யுறீங்களா?

கடைசியா ஒரு வார்த்தை: உங்க நிதி எதிர்காலம்ங்கிறது இன்னைக்கு மார்க்கெட் என்ன ஆகும்னு கணிக்கிறதுல இல்லை. அடுத்த 10 அல்லது 15 வருஷத்துல நீங்க எவ்வளவு ஒழுக்கமா முதலீடு செய்றீங்கங்கிறதுலதான் இருக்கு.

Labham Workshop on Market Udpdates, October 04, 2026

பங்குச் சந்தையில் இப்போது முதலீடு செய்யலாமா?

இப்போது SIP ஆரம்பிக்கலாமா?

Lumpsum தொகையை முதலீடு செய்யலாமா?

ஏற்கெனெவே செஞ்ச முதலீட்டை என்ன பண்ணனும்?

பணத்தை எந்தெந்த இடங்களில் முதலீடு செய்தால், அது வளர நல்ல வாய்ப்புள்ளது?

அனைத்தையும் அறிந்துகொள்ள வரும் அக்டோபர் 04, 2026 ஞாயிறு காலை 11 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தவறாதீர்கள்!

புகழ்பெற்ற பங்குச் சந்தை நிபுணர் 'ரெஜி தாமஸ்' இந்நிகழ்ச்சியில் பேசுகிறார். உங்கள் சந்தேகங்களை நேரடியாக அவரிடம் கேட்கலாம்.100 பேருக்கு மட்டுமே அனுமதி. ரெஜிஸ்டர் செய்ய: https://labham.money/events/webinar-oct04-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_oct04_2026

பொறுப்புத் துறப்பு: பரஸ்பர நிதி (Mutual Fund) முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்யும் முன் ஆவணங்களைக் கவனமாகப் படிக்கவும்.

30-ல் ஓடியாச்சு... 50-ல் அமைதி வேண்டுமா? NRI-களுக்கான மாத வருமான வழிகாட்டல்!

இரவு 11 மணி. நீங்கள் வேலை பார்க்கும் நாட்டின் கடும் குளிரில் வீட்டின் பால்கனியில் நின்றபடி, "இன்னும் எத்தனை வருஷம் இந்த ஓட்டம்? எப்ப ஊருக்குப் போய் நிம்மதியா வாழ்றது?" - இப்படி என்றாவது யோசித்ததுண்டா?... மேலும் பார்க்க

40+... உழைப்பை நிறுத்துங்கள்... உங்களை உயர்த்தும் 'Leverage Point'ஐப் பிடிப்பது எப்படி?

இரவு 11 மணி. வீடே அமைதியில் மூழ்கியிருக்க, உங்கள் மடிக்கணினியின் மெல்லிய வெளிச்சத்தில் கணக்கு வழக்குகளைப் பார்க்கிறீர்கள். 40 வயதைத் தொட்டுவிட்டீர்கள். “நாம் இன்னும் மாபெரும் செல்வத்தைச் சேர்க்கவில்லை... மேலும் பார்க்க

`இப்ப தேவை 1 கோடி; ஆனா 10 ஆண்டுகள் கழித்து 1.79 கோடி தேவை' பணவீக்கத்தை புரிஞ்சிக்கிட்டா தப்பிக்கலாம்

இன்றைக்குப் பல பேருடைய டார்கெட் ஒரு கோடி ரூபாயை முதலீட்டின் மூலமாகச் சேர்க்க வேண்டும் என்பதுதான். சொந்தமாக இருக்கும் வீடு, பீரோவில் இருக்கும் தங்க நகை இவற்றை எல்லாம் தாண்டி ரூ.1 கோடி உங்கள் முதலீட்டில... மேலும் பார்க்க

₹1 Crore Portfolio: உங்களுக்கான சரியான அசெட் அலொகேஷன் எது?

"கையில் ₹1 கோடி ரூபாய் இருக்கிறது. இதில் எவ்வளவு தொகையை ஈக்விட்டி (Equity)-யில் போடுவது? எவ்வளவு தொகையை டெப்ட் (Debt)-ல் ஒதுக்குவது?"40 வயதைத் தாண்டிய பல முதலீட்டாளர்களும், வெளிநாடு வாழ் இந்தியர்களும்... மேலும் பார்க்க

'நாளை IT வேலை போனால் என்ன செய்வது?' - நிம்மதியாக இருக்க நீங்க செய்ய வேண்டிய 5 விஷயங்கள் என்னென்ன?

இதைப் படித்துக்கொண்டிருக்கும்போது,சென்னை ஓஎம்ஆர் வீதியிலும், சிறுசேரி ஐடி பூங்காவிலும் ஒரு அமைதியான புயல் வீசிக்கொண்டிருக்கிறது.நேற்று வரை ‘ஆன்சைட் ஆஃபர்’ வந்துகொண்டிருந்த மின்னஞ்சல் பெட்டியில், இன்று... மேலும் பார்க்க

RBI-க்கு கிடைத்த 12.50 லட்சம் கோடி! வங்கி FD-யே சரணாகதி என்று இருந்தால் பெரும் பணக்காரர் ஆகமுடியுமா?

பணம், சேமிப்பு என்று வந்துவிட்டாலே, நம்மில் பெரும்பாலானவர்கள் அதை பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். கொஞ்சம் ரிஸ்க் எடுத்து, எதிலாவது முதலீடு செய்து அதிக லாபம் பார்க்க நம்மவர்கள் ... மேலும் பார்க்க