செய்திகள் :

'முதல்வர் விஜய்யின் எம்.பிக்கள் கூட்ட அழைப்பை புறக்கணிக்கும் திமுக, அதிமுக?' - பின்னணி என்ன?

post image

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழகத்தை சேர்ந்த அனைத்துக் கட்சி எம்.பிக்களின் கூட்டத்துக்கு முதல்வர் விஜய் அழைப்பு விடுத்திருந்தார். நாளை மாலை கலைவாணர் அரங்கத்தில் நடக்கவிருக்கும் இந்த கூட்டத்தில் திமுக, அதிமுக என இரு கட்சிகளின் எம்.பிக்களும் கலந்து கொள்ளப்போவதில்லை எனும் தகவல் வெளியாகியிருக்கிறது.

Udhayanidhi
Udhaynidhi

தொகுதி மறுவரையறை தொடர்பாக தமிழகத்தின் நிலைப்பாட்டை ஆலோசிக்க அனைத்துக் கட்சிகளின் எம்.பிக்களுக்கும் டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் மூலம் தமிழக முதல்வர் விஜய் நேற்றிரவு அழைப்பு விடுத்திருந்தார். இன்று சட்டமன்றத்திலும் 'திமுக அந்த எம்.பிக்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளுமா?' என தவெக அமைச்சர்கள் மாறி மாறி கேள்வி எழுப்பியிருந்தனர்.

'எங்களின் தலைவர் ஆலோசித்து முடிவெடுப்பார்' என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி அவையில் பேசியிருந்தார். அதேமாதிரி, 'மேகதாது விவகாரத்துக்கு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட சொன்னால், சம்பந்தமே இல்லாமல் தொகுதி மறுவரையறை பற்றி பேசி வாதத்தை திசைதிருப்புவதாகவும் உதயநிதி குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்நிலையில், முதல்வர் தலைமையிலான எம்.பிக்கள் கூட்டத்தில் திமுக, அதிமுக எம்.பிக்கள் கலந்துகொள்ளப் போவதில்லை என அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கின்றனர். இதுதொடர்பாக இரு கட்சியினர் வட்டாரத்திலும் விசாரிக்கையில், 'தவெகவின் அனைத்துக் கட்சி கூட்ட அழைப்பே வினோதமாக இருக்கிறது. எம்.பிக்களே இல்லாத இந்த கட்சி எம்.பிக்களின் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கிறது.

EPS
EPS

ஒரு அனைத்துக்கட்சி கூட்டமென்றால் முறைப்படி கட்சிகளின் தலைவர்களுக்குதான் அழைப்பு விடுக்க வேண்டும். ஆனால், இவர்கள் கட்சித் தலைமையை விட்டுவிட்டு எம்.பிக்களுக்கு தமிழ்நாடு இல்லத்தின் மூலம் தனியாக அழைப்பு விடுத்திருக்கின்றனர். இதுவே மரபை மீறிய முறையற்ற செயல். மேலும், எதிர்க்கட்சிகள் அத்தனையும் ஒருமித்த குரலில் மேகதாது விவகாரத்துக்கு அனைத்துக்கட்சி கூட்டத்தை கேட்கையில், அதை செய்யாமல் சம்பந்தமே இல்லாமல் தொகுதி மறுவரையறைக்கு ஒரு டம்மி கூட்டத்தை கூட்டுகிறார்கள். இவர்கள் மனம் போன போக்கில் கூட்டும் கூட்டத்தில் நாங்கள் ஏன் கலந்துகொள்ள வேண்டும்' என்கின்றனர்.

ஏற்கனவே காவிரி விவகாரத்தில் எந்த கட்சிகளின் கருத்தையும் கேட்காமல் கர்நாடகா கிளம்புகிறேன் என முதல்வர் எடுத்த முடிவு புஸ்வாணமாகியிருந்தது. இப்போது அனைத்துக் கட்சி கூட்டம்தானே கேட்டீர்கள்... இதோ கூட்டுகிறேன் என ஒரு டிசைனாக ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டமும் முதல்வருக்கு பெருத்த பின்னடவை கொடுக்கப் போகிறதோ என கமெண்ட் அடிக்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்!

'சிறப்பு தரிசனம் செய்த பிரேமலதா; மின்னலை விழுங்கிய எடப்பாடி பழனிசாமி!' - சட்டமன்றம் ஹைலைட்ஸ்!

சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் மூன்றாம் நாள் கூட்டம் இன்று நடந்திருந்தது. வாதம்...விவாதம்...பதிலடி என கட்டா குஸ்தியா நீண்ட இன்றைய நாளின் சில ஹைலட்ஸ் இங்கே!Assemblyவெள்ளிக்கிழமை என்பதால் சட்டமன... மேலும் பார்க்க

தொகுதி மறுவரையறை மசோதா: திமுக, சிவசேனா, திரிணாமுல் வாக்குகள் போதாதா? பாஜகவிற்கு இன்னும் சிக்கல்!

மாநிலங்களில் உள்ள மக்கள்தொகைக்கு ஏற்ப அவற்றிற்கு நாடாளுமன்றத்தின் மக்களவையில் பிரதிநிதித்துவம் தர வேண்டும் என்பதே 'தொகுதி மறுவரையறை மசோதா'. இந்தத் தொகுதி மறுவரையறையின் மூலம் மக்களவை சீட்டுகள் 543-ல் இ... மேலும் பார்க்க

ஹார்முஸ் நீர்ச்சந்தி வழியே அமெரிக்க கப்பல்கள் கடந்து செல்ல தடை? ஈரான் `புது' பிளான்!

ஹார்முஸ் நீர்ச்சந்தியை ஈரானும் விடுவதாக இல்லை... அமெரிக்காவும் விடுவதாக இல்லை. அமெரிக்காவும், இஸ்ரேலும் போரைத் தொடங்கிய உடன் ஈரான் செய்தது - ஹார்முஸ் நீர்ச்சந்தி முடக்கம். இன்னும் ஹார்முஸ் நீர்ச்சந்தி... மேலும் பார்க்க

``ஆதவ் அர்ஜுனா தான் சீட் வாங்கி கொடுத்தார்..!" - சட்டமன்றத்தில் ரகசியத்தை உடைத்த திமுக எம்.எல்.ஏ

``அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திமுகவில் இருக்கும்போது அவர்தான் எனக்குச் சீட் வாங்கிக் கொடுத்தார்" என்று திமுக எம்.எல்.ஏ ரிஷிவந்தியம் கார்த்திகேயன் கூறியது, அவை முழுவதும் சிரிப்பலையை ஏற்படுத்தியது.தமிழக அரசி... மேலும் பார்க்க

``கடைசிகாலம் வரை எடப்பாடியாரின் படைத்தலைவர்களில் ஒருவனாக இருப்பேன்!" - கே.டி.ராஜேந்திர பாலாஜி பேட்டி

அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும் விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி, தி.மு.க-வில் சேரவிருப்பதாக வெளியான செய்தி, தமிழக அரசியலில் அதிர்வை ஏற்படுத்தி வருகிறது.அ.தி.மு.க தொடர்ந்து இர... மேலும் பார்க்க

`உதயநிதி விவகாரத்தில் கைதா?' - கருணாநிதி நினைவு நாள் நிகழ்ச்சியைத் தவிர்த்த திமுக முன்னாள் மேயர்!

திமுக சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தலைமையில், தஞ்சாவூரில் கடந்த 3ம் தேதி காவிரி விவகாரம் தொடர்பாக, தமிழக அரசையும், முதல்வரையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் உதயநிதி ஸ்டாலின் இரட... மேலும் பார்க்க