செய்திகள் :

'முதல்வர் விஜய்யின் வீட்டுக்கு எதிரே நடைபாதையில் தவெகவினரின் அபாய பேனர்!' - கவனிக்குமா தலைமை?

post image

முதல்வர் விஜய்யின் பட்டினப்பாக்கம் வீட்டுக்கு எதிரே மக்கள் நடப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கும் நடைமேடையில் தவெகவினர் தொடர்ந்து அபாயமான முறையில் பேனர் வைத்து இடையூறு ஏற்படுத்துவதாக மக்கள் புகார் கூறுகின்றனர்.

முதல்வரின் வீடு இருக்கும் பன்னடுக்கு கட்டடம்
முதல்வரின் வீடு இருக்கும் பன்னடுக்கு கட்டடம்

பட்டினப்பாக்கம் லூப் சாலையிலிருந்து வெளியேறி அடையாறை நோக்கி செல்லும் சந்திப்பில் ஒரு பக்கமிருக்கும் பன்னடுக்கு கட்டடத்தில் முதல்வர் விஜய்க்கு ஒரு வீடு இருக்கிறது. முதல்வர் சில சமயங்களில் இந்த வீட்டில் தங்குவது உண்டு. கட்சியினருடன் முக்கியமான சந்திப்புகளையும் இந்த வீட்டில் நடத்துவார்.

மேலும், முதல்வர் நீலாங்கரை வீட்டிலிருந்து தலைமைச் செயலகத்துக்கு இந்த சாலை வழியாகத்தான் செல்வார். இந்த பட்டினப்பாக்கம் சிக்னல் சந்திப்பில் நான்குபுறமிருந்தும் வாகனங்கள் எப்போதும் நெருக்கடியாக வந்துகொண்டே இருக்கும். அருகே நிறைய பள்ளி கல்லூரிகளும் இருப்பதால் மாலை நேரங்களில் அதிகமாக போக்குவரத்து நெரிசலும் ஏற்படும். இப்படிப்பட்ட இடத்தில் சரியாக முதல்வரின் வீடு அமைந்திருக்கும் பன்னடுக்கு கட்டடத்துக்கு எதிரே நடைபாதையில் முதல்வரை வாழ்த்தி அபாயமான முறையில் தவெகவினர் பேனர் வைத்திருக்கின்றனர்.

பட்டினப்பாக்கம் ஜங்ஷன்
பட்டினப்பாக்கம் ஜங்ஷன்

பேனரின் சாரங்களாக கட்டப்பட்டிருக்கும் கம்புகளை தரையில் குழி தோண்டி நிறுத்தினால்தான் வலுவாக நிற்கும். நடைபாதையில் குழி தோண்ட முடியாது என்பதால் அப்படியே சாரத்தை நிறுத்தி வைத்து பேனரை ஏற்றியிருக்கிறோம். இதுசம்பந்தமாக அந்தப் பகுதியை சேர்ந்த மக்களிடமும் வாகன ஓட்டிகளிடமும் பேசினோம்.

``இந்த ஜங்ஷன் எப்போதுமே நெருக்கடியாகத்தான் இருக்கும். இவர்கள் நட்டு வைத்திருக்கும் இந்த பேனர் காற்றிலோ மழையிலோ கீழே விழுந்தால் வாகன ஓட்டிகள் மீதும் மக்கள் மீதுமே விழும். இப்படி பேனர்கள் சரிந்து உயிர்பலியான எத்தனையோ சம்பவங்களை நாமே பார்த்திருக்கிறோம். இவர்கள் எதோ ஒன்றிரண்டு நாள் முதல்வரின் கவனத்தை ஈர்க்க பேனர்கள் வைக்கிறார்கள் என்றால்கூட சகித்துக் கொள்ளலாம். ஆனால், ஆட்சியமைத்த முதல் நாளிலிருந்து இப்போது வரைக்கும் பெரும்பாலான நாள்களில் இங்கே பேனர் இருந்து கொண்டே இருக்கிறது. இப்போது தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்காக முதல்வரை பாராட்டி பேனர் வைத்திருக்கிறார்கள்.

அபாய பேனர்
அபாய பேனர்

நாளை முதல்வர் இன்னொரு திட்டம் தொடங்கும் போது அதற்காக பேனரை மாற்றுவார்கள். வாரத்துக்கு ஒரு பேனர் மாறிக்கொண்டே இருக்கும். ஆனால், பேனர் எப்போதும் இருக்கும். முதல்வர் விஜய் தினமும் இந்த வழியாகத்தான் செல்கிறார். அவரும் இந்த அபாயகரமான பேனரை ஏன் கண்டும் காணாமல் இருக்கிறார் என்று புரியவில்லை" என்கின்றனர்.

``சென்னை மாநகராட்சி நிர்வாகம் சமீபத்தில் அனுமதியின்றி பொது இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் பேனர்களையும் போஸ்டர்களையும் அபாரதம் விதித்து அகற்றியது. சென்னை மாநகராட்சிக்கு முதல்வரின் வீட்டுக்கு எதிரே இருக்கும் ஆளுங்கட்சியினரின் பேனர் கண்ணுக்கு தெரியவில்லையா? ஒருவேளை அனுமதி வாங்கித்தான் பேனர் வைக்கப்படுகிறது எனில், மக்களுக்கான நடைபாதையில் போக்குவரத்து நெரிசல்மிக்க சாலையில் அபாயமான முறையில் பேனர் வைக்க எப்படி அனுமதி கொடுக்கப்பட்டது?" என சமூக ஆர்வலர்கள் கேட்கின்றனர்.

அபாயம் நிகழும் முன் ஆளுங்கட்சியின் பேனர் அகற்றப்படுமா?

'5 முக்கிய பாயிண்டுகள்; 50+ கி.மீ டிராவல்; மேல்மருவத்தூர் தரிசனம்? - விஜய்யின் ரோடு ஷோ பிளான் என்ன?

இடைத்தேர்தலுக்காக மதுராந்தகத்திலும் தாராபுரத்திலும் பிரசாரக் கூட்டத்தை நடத்தி முடித்திருக்கிறார் முதல்வர் விஜய். இரண்டு தொகுதிகளுக்கும் ஒவ்வொரு நாள் பிரசாரத்துக்கு சென்று வந்த முதல்வர் விஜய், இரண்டாவத... மேலும் பார்க்க

`தொழில் நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்காமல் ஜெனரேட்டர்களை இயக்கச் சொல்வதா?' - நயினார் கண்டனம்!

"ஜெனரேட்டர்களை இயக்கிக்கொள்ளுமாறு உயர் அழுத்தத் தொழில் நிறுவனங்களை தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் (TNPDCL) அறிவுறுத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது" என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தவெக... மேலும் பார்க்க

கோவை : பெருமாள்முடி, மேல்முடி கோவில்களுக்கு செல்ல பக்தர்களுக்கு கட்டுப்பாடு – காரணம் என்ன?

கோவை மாவட்டம் ஆனைக்கட்டி அருகேயுள்ள பெருமாள் முடி மற்றும் மேல்முடி ஆகிய மலைப்பகுதியில் உள்ள கோவில்களுக்கு புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் மட்டுமே பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே ... மேலும் பார்க்க

’கேப்டன் ஆன்மா பற்றி பேசுவதற்கு ஆதவ் அர்ஜூனாவிற்கு அருகதையே கிடையாது’ –பிரேமலதா விஜயகாந்த் காட்டம்!

கோவை விமான நிலையத்தில் தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “தே.மு.தி.க, தி.மு.க கூட்டணியில் இருப்பதால் கூட்டணி தர்மத்தை மதித்து ஸ்டாலி... மேலும் பார்க்க

இடைத்தேர்தல்: ``தவெக, திமுக, அதிமுக முகாமிட்டு பணம் கொடுக்கின்றனர்" - சிபிஐ வீரபாண்டியன்

தேர்தல் ஆணையத்தின் மீதான குற்றச்சாட்டுக்கு எதிராகவும், தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் எனவும் இடதுசாரி கட்சிகள் சென்னையில் போராட்டம் நடத்தின. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சிபிஐ வீரப... மேலும் பார்க்க