செய்திகள் :

முதல்வர் விஜய் ஒரு ’குட்டி எம்.ஜி.ஆர்’ - ஆரத்திக் குடங்களுடன் வரவேற்பு அளித்த தொண்டர்கள்!

post image

தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தொடங்கி வைத்தார். திட்டத்தின் தொடக்க நிகழ்வில் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு முதலமைச்சர் தங்க மோதிரம் அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

தமிழர் பாரம்பரியத்தில் தாய்மாமன் வழங்கும் சீர் என்பதை அடிப்படையாகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் வகையில் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் மதுரை வருகையையொட்டி, நகரின் பல்வேறு பகுதிகளில் கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டிருந்தனர். குறிப்பாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் காலை முதலே வெயிலையும் பொருட்படுத்தாமல் காத்திருந்தனர்.

முதல்வரை வரவேற்கும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி வண்ணத்தில் சேலை அணிந்த பெண்கள், ‘TVK’ என்ற பெயருடன் அலங்கரிக்கப்பட்ட ஆரத்திக் குடங்களை ஏந்தியபடி வரவேற்பு அளித்தனர். மேலும், சிலர் விஜயை அன்புடன் ‘குட்டி எம்.ஜி.ஆர்.’ என்றும், அண்ணனாகவும் அழைத்து வரவேற்றனர்.

முதல்வர் விஜய்

மருத்துவமனை நிகழ்ச்சி நிறைவடைந்த பின்னர், அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் தொண்டர்களை பார்த்த முதலமைச்சர் விஜய் கையசைத்து வணக்கம் தெரிவித்தார். பின்னர் ரூ.10.25 கோடி மதிப்பில் புனரமைக்கப்பட்ட மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தை திறந்து வைத்து பார்வையிட்டார்.

காந்தி அருங்காட்சியகத்தில் மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருட்கள் உள்ளிட்ட நினைவுச்சின்னங்களை முதலமைச்சர் பார்வையிட்டார். இதையடுத்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டார்

இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் என். ஆனந்த், அருண்ராஜ், நிர்மல்குமார் உள்ளிட்டோர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

`ராமர் பணக்காரர்களின் கடவுள், சிவன் ஏழைகளின் கடவுள்' - ரேவந்த் ரெட்டி கருத்துக்கு பாஜக கண்டனம்

ஐதராபாத்தில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கடவுள்கள் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், "ஜெய் ஸ்ரீ ராம்" என... மேலும் பார்க்க

``ஞானேஷ் குமார் குற்றவாளி; உச்ச நீதிமன்றமும் பதில் சொல்லியாக வேண்டும்" - EX பாஜக அமைச்சர் RK சிங்

இந்தியாவின் முன்னாள் மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை கேபினட் அமைச்சரும், முன்னாள் இந்திய ஐ.ஏ.எஸ் (IAS) அதிகாரியுமான ஆர். கே. சிங் தன் எக்ஸ் பக்கத்தில் SIR குறித்து நீண்ட ... மேலும் பார்க்க

`தேசிய ஜனநாயக கூட்டணியில் சேரும் திட்டமில்லை' - அஜித் பவார் கட்சியுடன் இணைவது குறித்து சரத் பவார்

மகாராஷ்டிராவில் 2023-ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் மறைந்த மாநில துணை முதல்வர் அஜித் பவார் தலைமையில் இரண்டாக பிரிந்தது. கட்சியின் பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்களின் அடிப்படையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியி... மேலும் பார்க்க

``அவதூறாகப் பேசுவது உதயநிதியின் DNA-ல் ஊறிப்போன ஒன்று" - அமைச்சர் மரிய வில்சன் தாக்கு

சென்னை ராயபுரம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற "தாய்மாமன் தங்க மோதிரம்" வழங்கும் திட்டத்தை நிதி அமைச்சர் மரிய வில்சன் நேற்று தொடக்கி வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``எண்ணம்போல் ... மேலும் பார்க்க

U-Turn ஆட்சி: `ஜோசியர் முதல் RTI வரை' - தவெக அரசின் 'நிர்வாகத் தடுமாற்றமா?'

தவெக அரசு ஆட்சி அமைத்ததிலிருந்து தொடர்ந்து நிர்வாகச் சிக்கல் நிலவுகிறது என்ற குற்றச்சட்டு தொடர்ந்து வருகிறது. அதை உறுதிப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு அறிவித்து பின்னர் திரும்பப் பெறப்பட்ட உத்தரவுகள... மேலும் பார்க்க