செய்திகள் :

`முஸ்தபா ஒன்றும் அரிச்சந்திரன் கிடையாது; கவுன்சிலர் சீட்டுக்குப் பணம் கேட்டவர்!' - செல்லூர் ராஜூ

post image

மதுரை மத்திய தொகுதி தவெக எம்எல்ஏ முஸ்தபாவிடம் குதிரை பேர முயற்சியில் ஈடுபட்டதாக  அதிமுக கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளரும், மதுரை முன்னாள் துணை மேயருமான P.M. மன்னன் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் விசாரணையில் உள்ள மன்னனை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நேரில் சந்தித்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, " மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் மன்னனை கைது செய்து வைத்துள்ளனர். என்னையும் உள்ளே வைத்து விடுவார்கள் என்ற அச்சம் ஏற்பட்டது. அந்த அளவிற்கு பி.எம்.மன்னனை தனி அறையில் வைத்துள்ளனர்.

மதார் முஸ்தபா
மதார் முஸ்தபா

முஸ்தபாவும் மன்னனும் நெருங்கிய நண்பர்கள். மாமன், மைத்துனன் என்ற அடிப்படையில் பேசியுள்ளனர். உங்க நிர்வாகிகள் கட்சி பதவிக்கு பணம் வாங்குவதாக ரீல்ஸ் வருகிறதே என எம்எல்ஏ முஸ்தபாவிடம் மன்னன் பேசியுள்ளார். அதற்கு தான் இது போன்ற வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தற்குறியான குதிரைபேர அரசாக இந்த அரசு உள்ளது. பணம் கொடுத்து எம்எல்ஏவை வாங்கி ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற  எண்ணம் கடுகளவும் இல்லை; நாங்கள் மக்களை சந்திப்போம், குறுக்குவழியில் ஆட்சியமைக்க வேண்டும் என்ற அவசியமில்லை; இந்த ஆட்சியே கவிழப் போகிறது.

முஸ்தபா ஒன்றும் அரிச்சந்திரன் கிடையாது... கவுன்சிலர் சீட்டுக்குப் பணம் கேட்டவர். இந்த ஆட்சிக்கு இருக்கிற அவப்பெயரை மறைக்க, விலைவாசி உயர்வை மறைக்க இது போன்ற கைது நடவடிக்கை எடுக்கின்றனர்.

மன்னன் மீதான கைது நடவடிக்கையை அதிமுக சார்பில் கண்டிக்கிறோம்; சம்மன் 7 ஆம் தேதி என கொடுத்துவிட்டு இன்றே கைது செய்யும் அளவிற்கு அவர் ஒன்றும் தீவிரவாதி அல்ல; தவெகவினர் போல போதைப்பொருள் விற்பவர் அல்ல; மன்னனை தீவிரவாதி போல அடைத்துவைத்துள்ளனர். 

பி.எம்.மன்னன்

100 கோடிக்கு மேல் முஸ்தபா கேட்கிறாரா? முஸ்தபா ஜாக்பாட்டில் மத்திய தொகுதியில் வெற்றிபெற்றுள்ளார்.

கவுன்சிலர் பதவியை முஸ்தபா ஏலம் விடுகிறார்; அவருடைய பிரதிநிதி கனிராஜாதான் பேசுகிறார். கடந்த ஆட்சியில் செய்ததை போலவே இந்த ஆட்சியிலும் மக்கள் பிரச்னையை திசை திருப்புகிறார்கள்.

இந்த விவகாரத்தில் புகார் கொடுத்தவர் யோக்கியரா? ஆட்சியில் தவெக இருந்தாலும் காவல்துறையினர் தங்களது கண்ணியத்தை காப்பாற்றுவார்கள்  என நம்புகிறேன்.

மன்னன் அப்படிப்பட்ட ஆள் இல்லை, இப்போது தான் சேர்ந்தார், அவரை வைத்து இப்படி செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை, குறுக்கு வழியில் செல்ல தேவையில்லை. 

நிர்மல்குமாரை அவரது துறையை சரியாக பாரக்கச் சொல்லுங்கள்; கடந்த ஆட்சியில் யூனிட் 20 என்றால் இவர்கள் 36 ரூபாய் என்கிறார்கள்; எதிலும் வெளிப்படைத்தன்மை இல்லை.

Paடத்தன்மையோடு இல்லை.

உலகத்திலயே பேசாத முதலமைச்சர் விஜய் மட்டும் தான்; அரசு திட்டம் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை ; அனைத்து அரசு ஊழியர்களும் போராட்டம் நடத்திவருகின்றனர்.

மக்கள் இந்த ஆட்சியை தூக்கி எறிவார்கள். இந்த அரசு எவ்வளவு விரைவாக முடிகிறதோ அப்போது மக்கள் மகிழ்ச்சியடைவார்கள், சிறுமிகள் காப்பாற்றப்படுவார்கள், அதற்கு உள்ளாட்சி தேர்தல் முடிவே சாட்சியாக இருக்கும்" என்றார்.

பெரியார் அறிவுலகம் விவகாரம்: "நூலகத் துறையிலும் Party Fund! மாபெரும் அறிவுத் துரோகம்!" - அருண்ராஜ்

கோவையில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்தில் உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கொண்ட நூல்கள் இடம்பெற்றிருப்பதை எழுத்தாளர் பெருமாள் முருகன் சுட்டிக்காட்டியிருப்பது இப்போது தமிழ்நாடு முழுவது... மேலும் பார்க்க

டெல்லி காற்று மாசு பிரச்னை: `பயிர்கள் மட்டுமல்ல, ஆடம்பர கார்களும் காரணம்..!'- உச்ச நீதிமன்றம்

தீபாவளி வந்துவிட்டாலே, இந்தியாவின் தலைநகரான டெல்லியில் மாசு மிகப்பெரிய தலைவலியாக மாறிவிடுகிறது. இது தீபாவளியையொட்டி வெடிக்கப்படும் பட்டாசுகளால் மட்டுமல்ல. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர், நவம்பர் மாதங்களில்,... மேலும் பார்க்க

ரேஷன் அரிசி கடத்தல்; தட்டிக் கேட்ட மாற்றுத்திறனாளி சர்வதேச வீராங்கனைமீது தாக்குதல் – பெண் கைது!

சிவகங்கை பையூர் சாலை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பில், அரிசி கடத்தல் மற்றும் சமூகவிரோத செயல்களைத் தட்டிக் கேட்ட மாற்றுத்திறனாளி குடியிருப்போர் சங்கத் தலைவியும் சர்வதேச விளயாட்டு வீர... மேலும் பார்க்க

பெரியார் நூலக விவகாரம்: 'அடுத்த தலைமுறைக்கு செய்யும் துரோகம்'- அண்ணாமலை

கடந்த திமுக ஆட்சியில் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட, ‘பெரியார் அறிவுலகம்’ மற்றும் அறிவியல் மையத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கடந்த அக்டோபர் 16ஆம் தேதி திறந்து வைத்தார். இந்நி... மேலும் பார்க்க

நூலக நூல் கொள்முதல் ஊழல்: ``அரசுப் பணத்தைத் திட்டமிட்டுச் சூறையாடும் நோக்கில்..." - சிபிஎம் சண்முகம்

கோவை பெரியார் அறிவுலகம் நூலக நூல் கொள்முதல் ஊழல் குறித்து கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்திருக்கும் சிபிஎம் சண்முகம், இந்த ஊழல் குறித்து விரிவான விசாரணை வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார். இது தொடர்ப... மேலும் பார்க்க

"போலியான நூல்களில் மட்டும் ஜூன் மாத முத்திரை... தவெக ஆட்சியில் யாருக்கு கமிஷன் போனது?"- திமுக கேள்வி

பெரியார் அறிவுலகம் நூலத்துக்கு நூல் கொள்முதல் செய்ததில் ஊழல் நடைபெற்றிருப்பதாக தெரிவித்த எழுத்தாளர் பெருமாள் முருகன் ``அந்தத் தொகைக் கோடிக்கணக்கில் இருக்கும் என்று தோன்றுகிறது. இந்நூலகத்துக்கு விநியோக... மேலும் பார்க்க