செய்திகள் :

மேஷம் | 2026 ராகு-கேது பெயர்ச்சி : பதவி-பொறுப்புகள் தேடி வரும்! - 11 பலன்கள் | கே.பி.வித்யாதரன்

post image

மேஷத்துக்கு அதிபதி செவ்வாய். சூரியனுக்கு அது உச்ச வீடு. ஆகவே, இன்ப- துன்பங்களில் பதறாத வகையில் சூரியனின் சத்வ குணத்தையும், செயல்வேகத்துடன் ஈடுபடும் வகையில் செவ்வாயின் ரஜோ குணத்தையும் கொண்டவர் நீங்கள்.

உங்களுக்கு இந்த ராகு- கேது பெயர்ச்சியால் பொறுப்புகள் தேடி வரும்; பணம் பெருகும்.

ராகுகேது பெயர்ச்சி
  1. உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் ராகுபகவான் அமர்ந்து பலன் தரப்போகிறார். பெரிய பதவிகளும், கெளரவ பொறுப்புகளும் தேடி வரும். வருமானம் அதிகரிக்கும்; கடன்கள் அடைபடும்.

  2. குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கணவன் -மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். விலையுயர்ந்த ஆபரணங்கள், அழகு சாதனப்பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். குழந்தைப் பாக்கியம் உண்டாகும்.

  3. உங்களின் ராசிநாதனான செவ்வாயின் நட்சத்திரத்தில் ராகு பயணிக்கும் காலத்தில் கொஞ்சம் கவனம் தேவை. வீண் அலைச்சல், சோர்வு, களைப்பு, வீண்பழி வந்து போகும். சந்திரனின் நட்சத்திரத்தில் ராகு பயணிக்கும் காலமான 2027 மார்ச் முதல் டிசம்பர் வரையிலும் வீடு, மனை வாங்கும் யோகம் அமையும். சிலர் இருக்கும் வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவார்கள்.

  4. 2027 டிசம்பர் முதல் 2028 ஜூன் 23 வரையிலும் ராகு சூரியனின் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பார். அப்போது காரியத்தடைகள் நீங்கும். வீண் பழிகள் எல்லாம் விலகும்.

  5. கேது கேந்திரபலம் பெறுவதால் உங்கள் ராசிக்கு நல்ல பலன்களே கிடைக்கும். சொந்த வீடு அமையும். எனினும் சொத்து ஆவணங்களில் கவனம் தேவை. கட்டுமானப் பணிகள் லோன் பெறுவதில் தடைகள் வந்து நீங்கும்.

  6. வீட்டில் தள்ளிப்போன சுப நிகழ்ச்சிகள் இனிதே நடக்கும். பிள்ளைகள் வேலைக்காக வெளிநாடு செல்வார்கள். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். இந்தக் காலகட்டத்தில் அம்மாவின் உடல்நலனில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். சிலருக்குப் புது வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

  7. டிசம்பர் 5 முதல் 2027 ஆகஸ்ட் 14-ம் தேதி வரையிலும் புதன் நட்சத்திரத்தில் கேது சஞ்சரிக்கும்போது, சிலர் வீடு மாறுவார்கள். பழைய சொத்தை விற்பதால் ஆதாயம் உண்டாகும். எனினும் தகுந்த ஆலோசனை தேவை.

  8. சனியின் நட்சத்திரத்தில் கேது பயணிக்கும்போது - அடுத்த வருடம் ஆகஸ்ட் 15 முதல் 2028 ஏப்ரல் வரையிலும் பணவரவில் தடைகள் இருக்காது. எனினும் செலவுகளில் கவனம் தேவை. 2028 ஏப்ரல் முதல் தடைகள் விலகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். இழந்த சொத்தை மீண்டும் மீட்பீர்கள்.

  9. மற்றபடி இந்த ராகு-கேது பெயர்ச்சிக் காலத்தில் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். இல்லத்தரசிகளுக்குக் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். அடகிலிருந்த நகைகளை மீட்பீர்கள். தாய்வழி உறவினர்களிடம் மனக்கசப்புகள் வரும். அவர்களுடன் அதிகம் உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம்.

  10. வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்கக் கற்றுக்கொள்வீர்கள். தகுந்த திட்டமிடலுடன் முதலீடுகளைச் செய்தால் லாபம் வரும். சிலருக்குப் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பங்குதாரர்களுடன் மோதல் போக்கு வேண்டாம்.

  11. வேலைக்குச் செல்வோர் மறைமுக எதிர்ப்புகளையும் சூழ்ச்சிகளையும் முறியடிப்பீர்கள். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வேறு நல்ல நிறுவனங்களிலிருந்து புது வாய்ப்புகளும் வரும். அதேபோல் கலைத்துறையினருக்கும் வாய்ப்புகள் தேடி வரும்.

Sakthi Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://chat.whatsapp.com/Com072vzLdf91mdNSBzw27

ஆன்மிகம் மணக்கும் ஆனந்த ஆலயம். சக்தி விகடன் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்த்த; ஆன்மிக திருத்தலங்கள், திருக்கதைகள், ஆன்மிகத் தொடர்கள், ஜோதிடம் முதலான கட்டுரை, வீடியோக்கள் இங்கே உடனுக்குடன்

இணைய க்ளிக் செய்க...https://chat.whatsapp.com/Com072vzLdf91mdNSBzw27

நட்சத்திரப் பலன்கள் : நவ 27 முதல் டிச 3 வரை #VikatanPhotoCards

நட்சத்திரப் பலன்கள் நட்சத்திரப் பலன்கள் நட்சத்திரப் பலன்கள் நட்சத்திரப் பலன்கள் நட்சத்திரப் பலன்கள் மேலும் பார்க்க

பஞ்சாங்கக் குறிப்புகள் : நவ 23 முதல் 29 வரை #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப... மேலும் பார்க்க

நட்சத்திரப் பலன்கள் : நவம்பர் 20 முதல் 26 வரை #VikatanPhotoCards

நட்சத்திரப் பலன்கள்நட்சத்திரப் பலன்கள்நட்சத்திரப் பலன்கள் மேலும் பார்க்க

மேஷம் முதல் மீனம் வரை.! 12 ராசிகளுக்கான வெற்றி தரும் பரிகார வழிபாட்டு முறைகள்!

1. மேஷம்: மேஷ ராசிக்காரர்கள் தங்களது வாழ்க்கையில் வெற்றி, தைரியம், தன்னம்பிக்கை மற்றும் தொழில் முன்னேற்றம் பெற முருகப்பெருமானை வழிபடுவது சிறப்பானதாகும். குறிப்பாக செவ்வாய்க்கிழமைகளில் முருகன் கோவிலுக்... மேலும் பார்க்க

திங்கள், வெள்ளை நிறம், மேற்கு திசை... கடக ராசிக்கு நிச்சய வெற்றி தரும் 15 அதிர்ஷ்ட குறிப்புகள்!

கடகத்துக்கு அதிபதி சந்திரன். கடகம் ஜலராசி; சர ராசி. நண்டு வடிவம் கொண்டது. இந்த ராசியில் குருபகவான் உச்சம் பெற்றிருப்பார். செவ்வாய் நீசம் அடைவார். ராசி சக்கரத்தின் 90 முதல் 120 பாகை வரை கடகம் பரவியிருக... மேலும் பார்க்க

பஞ்சாங்கக் குறிப்புகள்: நவ 16 முதல் 22 வரை #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள் மேலும் பார்க்க