'துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி; பொய் பிம்ப அரசியலின் வீழ்ச்சி தொடங்கிவ...
``ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்: இப்போதான் புதின்கிட்ட பேசினேன்" - அதிபர் ட்ரம்ப் தகவல்
இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு எதிராக ஈரான் மீதும், உக்ரைன் மீதான் தாக்குதலுக்கு எதிராக ரஷ்யா மீதும் பொருளாதாரத் தடைகளை அறிவித்திருந்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். மேலும், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் மீதும் வரிகளை வாரி இறைத்து, இனியும் தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மிரட்டியிருந்தார். அதைத் தொடர்ந்து சில வாரங்களுக்கு முன்புகூட, ரஷ்யா மற்றும் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகள் மீது 100 சதவீதம் வரை கூடுதல் சுங்க வரி விதிக்ககும் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்திருந்தார்.

சீனா, இந்தியா உட்பட அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்கும் முதல் 5 நாடுகளின் பெயர்கள் நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை என்றாலும், அப்பட்டியலில் இடம் பெற்றுள்ள இந்தியாவின் மீதும் வரி விதிக்கப்பட வாய்ப்புள்ளது என்றெல்லாம் பேசப்பட்டது. இந்த நிலையில், உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் அதிபர் ட்ரம்ப் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில், ``ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அவர்களுடன் நான் இப்போதுதான் மிக வெற்றிகரமான பேச்சுவார்த்தையை முடித்தேன். இதன் மூலம் அமெரிக்காவிற்கும் உலகச் சந்தைக்கும் ரஷ்யா உடனடியாக 3,00,000 டன்களுக்கு மேல் டீசல் எரிபொருளை விநியோகிக்க ஒப்புக்கொண்டுள்ளது. மேலும், நவம்பர் மாதத்தில் 5,00,000 டன்களும், அதற்குப் பிறகு உடனடியாக 10,00,000 டன்களும் விநியோகிக்கப்படும். இதுமட்டுமின்றி, ரஷ்யாவின் டீசல் சுத்திகரிப்பு ஆலைகளின் தன்மையைப் பொறுத்து, குறுகிய காலத்திற்குள் மேலும் 30,00,000 டன் டீசல் எரிபொருளை அவர்கள் வழங்குவார்கள்.

ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) முழுமையாக நமது கட்டுப்பாட்டில் இருப்பதற்கும், ரஷ்ய ஆற்றல் துறை குறித்த இந்த முக்கிய அறிவிப்பிற்கும் இடையே, அமெரிக்கர்களுக்கும் உலக மக்களுக்கும் டீசல் விலையானது வரலாறே காணாத வகையில் மிக வேகமாகவும் கணிசமாகவும் குறையப் போகிறது!
குறிப்பாக நமது மகத்தான விவசாயிகள், பண்ணையாளர்கள் மற்றும் லாரி ஓட்டுநர்கள் உள்ளிட்ட அமெரிக்க மக்களுக்குக் குறைந்த விலையில் எரிபொருள் கிடைப்பதே எனது முதன்மையான முன்னுரிமையாகும்.
இது மிகவும் பெரிய மற்றும் முக்கியமான அறிவிப்பு. கூடுதலாக, ஈரான் நாட்டின் வசம் அணுஆயுதம் இருக்காது என்பதும் தெளிவாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டும்! இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி." எனக் குறிப்பிட்டு ரஷ்யாவிடமிருந்து அமெரிக்கா எண்ணெய் வாங்கவிருப்பதை உறுதிபடுத்தியிருக்கிறார்.
..
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb














