செய்திகள் :

ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா; அமெரிக்காவின் 100% வரி பாயுமா? ட்ரம்ப் ஒப்புதல் தருவாரா?

post image

ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பல வழிகளில் பேச்சுவார்த்தை நடத்திப் பார்த்தார். வேலைக்கு ஆகவில்லை... நெருக்கடியும் கொடுத்துப் பார்த்தார். ரஷ்யாவை வழிக்குக் கொண்டுவர முடியவில்லை.

அமெரிக்காவின் பிளான்

இதனால், ரஷ்யாவிற்கு வரும் நிதி ஆதாரத்திற்கு நெருக்கடி கொடுக்க பிளான் போடுகிறது அமெரிக்கா.

ரஷ்யா ஏற்கெனவே பல்வேறு நிதித் தடைகளால் பாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இப்போதும் அதற்கு வருமானம் ‘ஸ்டெடி’யாக வருகிறது என்றால், அது எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஏற்றுமதி மூலம்தான்.

இதனால், இந்த ஏற்றுமதிகளைத் தடுக்க நினைக்கிறார் ட்ரம்ப்.

crude oil - கச்சா எண்ணெய்
crude oil - கச்சா எண்ணெய்

சட்டம்!

அதாவது, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகள் மீது ‘இரண்டாம் கட்ட’ வரிகளை விதிக்க சட்டம் கொண்டுவருகிறது அமெரிக்கா. இந்தச் சட்டத்தின் பெயர், ‘ரஷ்யா மீதான தடைகள் சட்டம்’ ஆகும்.

இந்தச் சட்டம் மூலம் ரஷ்யா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை ஏற்றுமதி செய்யும் நாடுகள் அமெரிக்காவிற்கு ஏதேனும் பொருளை ஏற்றுமதி செய்தால், அவை மீது 100 சதவீத வரி விதிக்கப்படும்.

இந்தச் சட்டம் அமெரிக்காவின் மேல்சபைக்குக் கடந்த மாதம் கொண்டுவரப்பட்டது. அதற்கு 86-11 வாக்குகளில் பெரும்பான்மை ஒப்புதல் கிடைத்தது.

இதையடுத்து நேற்று (செப்டம்பர் 16) இறுதி ஒப்புதலுக்குக் கீழ்சபையில் கொண்டுவரப்பட்டது. அங்கே 262-159 வித்தியாசத்தில் பெரும்பான்மை கிடைத்துவிட்டது.

ட்ரம்ப் முடிவு?!

இனி ட்ரம்பின் கையெழுத்திற்காக மட்டும்தான் வெயிட்டிங். ட்ரம்ப் கையெழுத்திட்டுவிட்டால், இந்தச் சட்டம் அமலுக்கு வந்துவிடும்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

ட்ரம்ப், இந்தச் சட்டத்திற்குக் கையெழுத்திட்டு விடுவார். இது குறித்து முன்னரே அவர் தெரிவித்துவிட்டார்.

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதிகளை அதிகம் செய்யும் டாப் நாடுகள் சீனா, இந்தியா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி மற்றும் அஜர்பைஜான்.

இதுவரை அமெரிக்கா, நாடுகளின் பெயர்களைப் பட்டியலிடவில்லை. இருந்தாலும், இந்தச் சட்டத்தில் மேலே குறிப்பிட்ட நாடுகள்தாம் பாதிக்கப்படும்.

லண்டன் பயணம்: ``முதல்வர் விஜய் செய்தியாளர்களைச் சந்தித்து..." - டி.ஆர்.பி. ராஜா அடுக்கும் கேள்விகள்

முதல்வர் விஜய் முதலீடுகளை ஈர்க்க லண்டன் பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று (செப் 17) காலை சென்னை திருப்பினார். இந்தப் பயணம் குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறி... மேலும் பார்க்க

செங்கோட்டையனை சுத்துப்போடும் த.வெ.க-வினர் டு மனம் வருந்தும் திருமா | கழுகார் அப்டேட்ஸ்

சஸ்பென்ஸ் வைக்கும் பாமக!இலையா... சூரியனா...மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துவிட்டன. த.வெ.க, தி.மு.க, அ.தி.மு.க கம்யூனிஸ்ட், நாம் தமிழர் கட்சியின் வேட்பாள... மேலும் பார்க்க

வேலூர்: திடீர் மாரடைப்பு.. உயிர் பிரியும் தறுவாயிலும் பயணிகளைக் காப்பாற்றிய அரசுப் பேருந்து ஓட்டுநர்

வேலூர் அருகேயுள்ள காட்பாடி சில்க் மில் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடசாமி (வயது 59). இவர், பேரணாம்பட்டு பணிமனையில் இருந்து குடியாத்தம், வேலூர், திருப்பத்தூர், அரூர் வழித்தடத்தில் சேலம் வரை இயக்கப்படும் அ... மேலும் பார்க்க

அமெரிக்காவின் 100% வரி: "ஏற்கெனவே கூறியபடி மக்களின் நலன்தான்..." - இந்தியாவின் பதில் என்ன?

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகள் மீது 100 சதவிகித வரி விதிப்பதற்கான அமெரிக்காவின் சட்டத்திற்கு, அந்நாட்டின் கீழ்சபையிலும், மேல்சபையிலும் ஒப்புதல் அளிக்கப்... மேலும் பார்க்க

பாக்-சீனா எல்லை விவகாரம்: “இரு நாடுகளுக்கும் இடையே எல்லை என்று எதுவும் இல்லை” - இந்தியா உறுதி

இந்தியா, பாகிஸ்தான், சீனா இடையே எல்லைப் பிரச்னை விடாது தொடரும் போலும்.நேற்று பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் ‘பாகிஸ்தான்-சீனக் கூட்டு எல்லை ஆணைய’த்தின் செயல்பாடுகள் தொடங்கியுள்ளது.இது பாகிஸ்தான்... மேலும் பார்க்க