செய்திகள் :

'மீனாட்சி சுந்தரேஷ்வரா...' கோஷத்துடன் நடந்த குடமுழுக்கு; நன்னீரால் குளிர்ந்த மதுரை மாநகரம்!

post image

உலக புகழ்பெற்ற மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு இன்று நடைப்பெற்று வருவதால் மதுரையே விழா கோலம் பூண்டுள்ளது. கடைசியாக 08.04.2009 அன்று திருக்குடமுழுக்கு நடைபெற்றது. அதன்பிறகு திருக்கோயிலில் உள்ள அனைத்துக் கோபுரங்கள் மற்றும் மண்டபங்களுக்கும் மராமத்துப் பணிகள், வர்ணம் பூசுதல் உள்ளிட்ட திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதைத் தொடர்ந்து 17 வருடங்கள் கழித்து மீனாட்சியம்மன் கோவில் திருக்குடமுழுக்கு இன்று காலை நடைபெற்றது.

சரியாக காலை 7.40 மணிக்கு கலசங்கள் மீது நன்னீர் ஊற்றபட்டது. அப்போது பக்தர்கள் 'மீனாட்சி சுந்தரேஷ்வர' என்ற கோஷம் விண்ணை முட்டியது. தொடர்ந்து 8.10 மணி வரை விமானங்கள் மற்றும் இராஜகோபுரங்களுக்கான குடமுழுக்கு நடைபெற்றது. கோவிலுக்குள் இருந்த பக்தர்கள் மீது தண்ணீர் பீய்ச்சியடிக்கபட்டது. மேலும் 4 கோபுரங்களில் உள்ள கலசங்கள் மீது நன்னீர் ஊற்றபட்டு குடமுழுக்கு செய்யபட்டது.

மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு
மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு

குடமுழுக்கில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மற்றும் எரிசக்தித் துறை அமைச்சர் நிர்மல்குமார், மதுரை பாரளுமன்ற உறுப்பின சு.வெங்கடேசன் ஆகியோர் பங்கேற்றனர். சுமார் 5000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு: திரளான பக்தர்கள் பங்கேற்பு; விழாக் கோலம் பூண்ட மதுரை!

உலக புகழ்பெற்ற மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு இன்று நடைப்பெற்று வருவதால் மதுரையே விழா கோலம் பூண்டுள்ளது. கோவில் கும்பாபிஷேகத்திற்காக 4.5 டன் வண்ண மலர்களால் மலர் மாலைகள் தயாரிக்கப்பட்ட நிலையில் நேற்... மேலும் பார்க்க

மதுரை: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற மாறுவேடப் போட்டி!

மதுரையில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற மாறுவேடப் போட்டியில், கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமிட்டு கண்ணைக் கவரும் வகையில் குழந்தைகள் பங்கேற்றனர்.இன்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டு வரும் நிலையில்... மேலும் பார்க்க

ஓணம்: சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் படிபூஜை; அத்தப்பூ கோலம், ஓண சத்ய காட்சிகள்! | Photo Album

நாமக்கல் மாவட்டம், மணப்பள்ளி ஸ்ரீதங்க முனியப்பன் கோயில்; வழக்குகளில் வெற்றி அருளும் தலம்! மேலும் பார்க்க

திருமுருக கிருபானந்த வாரியாரின் பிறந்தநாள் விழா; தமிழக அரசு மரியாதை; ஞானத்திருவளாகம் உருவான வரலாறு!

ஆன்மிகப் பணியோடு இணைந்து மிகச்சிறப்பான முறையில் தமிழுக்கும் தொண்டாற்றிய திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் 121 பிறந்தநாள் விழா, வேலூர் காங்கேயநல்லூரில் உள்ள அவரின் ஞானத்திருவளாகத்தில் இன்று கொண... மேலும் பார்க்க

ஈரோடு பூம்புகார் நிலையம்: கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு விற்பனைக்காக வந்துள்ள கிருஷ்ணர் சிலைகள்.!

ஈரோடு கிருஷ்ணர் சிலை விற்பனைஈரோடு கிருஷ்ணர் சிலை விற்பனைஈரோடு கிருஷ்ணர் சிலை விற்பனைஈரோடு கிருஷ்ணர் சிலை விற்பனைஈரோடு கிருஷ்ணர் சிலை விற்பனைஈரோடு கிருஷ்ணர் சிலை விற்பனைஈரோடு கிருஷ்ணர் சிலை விற்பனைஈரோட... மேலும் பார்க்க

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குள் செல்போன் எடுத்துச் செல்லத் தடை - பாதுகாப்பு மையங்கள் அமைப்பு

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில், உலக பிரசித்திபெற்ற அக்னி தலமாகும். இத்திருக்கோயிலுக்குள் செப்டம்பர் மாதம் 1-ம் தேதி முதல் செல்போன்கள் எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட உள்ளது என்று கோயில் துணை... மேலும் பார்க்க