இனி PF பேலன்ஸை வாட்ஸ்ஆப்பிலேயே பார்த்துக்கலாம்; வெப்சைட் டவுன் பிரச்னை எல்லாம் க...
'ராஜ்மோகனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றவாளியை எதற்காக காப்பாற்றுகிறீர்கள்?' - நயினார் கேள்வி
சென்னை எழும்பூரில் நடைபெற்ற தமிழ்நாடு நாள் அரசு விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவர் பதவியைப் பெற்றுத் தருவதற்காகத் தனக்கு ரூ.5 கோடி கொடுப்பதாக ஒருவர் கூறியதாகவும், அதைத் தான் மறுத்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
அமைச்சர் ராஜ்மோகனின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த நபர் யார், யாருடைய பெயரில் இந்தப் பேரம் பேசப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் என்ன? என்று அரசியல் தலைவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அமைச்சர் ராஜ்மோகனை விமர்சித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அப்பதிவில், " ‘மொட்டைக் கடுதாசி’ போல மேடையில் பேசுவது கல்வி அமைச்சருக்கு அழகல்ல, திரு.ராஜ்மோகன் அவர்களே!
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவர் பதவிக்கு ரூ. 5 கோடி வரை உங்களுக்கு லஞ்சம் தரத் தயாராக இருந்த நபரை அடையாளம் காட்டுவதிலோ அல்லது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரை கைது செய்வதிலோ தவெக அரசுக்கு என்ன சிக்கல்?
லஞ்சம், ஊழல் குறித்த புகார்களை பதிவு செய்ய உங்கள் அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட பிரத்யேக தொலைபேசி எண்ணிற்கு, நீங்களே ‘anonymous’ ஆக புகார் அளித்திருக்கலாமே? அதை விட்டுவிட்டு அரசு அமைச்சருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றவாளியை எதற்காக காப்பாற்றுகிறீர்கள்?
அதுமட்டுமன்றி, உங்களுக்கு லஞ்சம் கொடுப்பதற்கு, தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராக இருக்கும் திரு. லயோலா மணி அவர்களை எதற்காக அணுகுகிறார்கள்? அவரைப் பிடித்தால் தான் உங்களை நெருங்க முடியும் என்ற சொல்லப்படாத விதி ஏதேனும் இருக்கிறதா? அல்லது அவர் மூலமாகத் தான் உங்கள் பணப் பரிவர்த்தனைகள் நடக்கிறதா?

‘ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காதீர்கள்’ என்று முதல்வரே பொது மேடையில் கூறிய பிறகும் கூட, கோடிக்கணக்கில் அமைச்சருக்கு லஞ்சம் கொடுக்க ஒருவர் முயல்கிறார் என்றால், அமைச்சர்கள் மட்டத்தில் முறைகேடுகள் சர்வ சாதாரணமாக நடந்து கொண்டிருக்கின்றன என்று தானே அர்த்தம்? ஒருவேளை பேரம் படியாததால் தான் இன்று பொதுவெளியில் வந்து இப்படி புலம்புகிறீர்களோ? பதில் சொல்லுங்கள் அமைச்சரே" என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb



.jpeg)











