செய்திகள் :

வேலூர்: சாலைவசதி இல்லாத மலை கிராமம்; பள்ளி மாணவியின் உடலை டோலியில் தூக்கிச்சென்ற துயரம்

post image

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட அல்லேரி மலை ஊராட்சியில் மருதவள்ளிமேடு என்ற குக்கிராமம் உள்ளது. இந்த மலை கிராமத்தில் வசிக்கும் தேவேந்திரன் என்பவரின் 17 வயது மகள் திவ்யா, அணைக்கட்டு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

இந்த நிலையில், மாணவி திவ்யா இதய நோயால் பாதிக்கப்பட்டதால் தொடர்ந்து மருத்துவ பரிசோதனை மேற்கொண்டபடி சிகிச்சை பெற்றுவந்ததாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் திவ்யாவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

மருத்துவர்களின் அறிவுரையின்பேரில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட திவ்யா, மருதவள்ளிமேடு மலை கிராமத்திலுள்ள வீட்டுக்கு பெற்றோரால் அழைத்துச் செல்லப்பட்டார். இந்த நிலையில், 2 நாள்களுக்கு முன்பு திவ்யாவின் உடல்நிலை திடீரென மோசமாகியுள்ளது. பெற்றோர் அவரை உடனடியாக மீட்டு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

டோலி கட்டி தூக்கிச்செல்லப்பட்ட மாணவியின் உடல்
டோலி கட்டி தூக்கிச்செல்லப்பட்ட மாணவியின் உடல்

தீவிர சிகிச்சை அளித்தபோதும், திவ்யா நேற்று மாலை 3 மணியளவில் உயிரிழந்தார். இதையடுத்து, மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் ஊசூர் அத்தியூர் வழியாக மலை அடிவாரத்துக்கு திவ்யாவின் உடல் கொண்டுச் செல்லப்பட்டது.

அங்கிருந்து மலை கிராமத்துக்குச் செல்ல சாலை வசதி இல்லாததால், திவ்யாவின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பெற்றோரும் உறவினர்களின் உதவியுடன் திவ்யாவின் உடலை டோலி கட்டி சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் உள்ள மலை உச்சி கிராமத்துக்குத் தூக்கிச் சென்றனர்.

இந்தத் துயரநிலை மலைப்பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மலைவாழ் மக்களின் நலன் கருதி தமிழக அரசு மலைப்பகுதி கிராமங்களுக்கு உடனடியாக தார்ச்சாலை வசதி மற்றும் மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.

அப்போதுதான் காலங்காலமாக வலி, வேதனையுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த எளிய மக்களின் கண்ணீரைத் துடைக்க முடியும்.

'ராஜ்மோகனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றவாளியை எதற்காக காப்பாற்றுகிறீர்கள்?' - நயினார் கேள்வி

சென்னை எழும்பூரில் நடைபெற்ற தமிழ்நாடு நாள் அரசு விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவர் பதவியைப் பெற்றுத் தருவதற்காகத் தனக... மேலும் பார்க்க

திறக்காத டாஸ்மாக் கடைகள்: தமிழகம் முழுவதும் 245 டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் பணியிடை நீக்கம்

தமிழ்நாடு முழுவதும் 245 டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். என்ன பிரச்னை? தமிழ்நாடு முழுவதும் காலி மதுபானப் பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு டா... மேலும் பார்க்க

"லஞ்சம் தர முயன்ற நபர் யார்? ராஜ்மோகன் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்" - அதிமுக இன்பதுரை

சென்னை எழும்பூரில் நடைபெற்ற தமிழ்நாடு நாள் அரசு விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவர் பதவியைப் பெற்றுத் தருவதற்காகத் தனக... மேலும் பார்க்க

இஸ்ரேலில் ஆட்சியமைப்பதில் இழுபறி: "நானே பிரதமர்; ஆட்சி அமைக்க ஆதரவு தாருங்கள்" - நெதன்யாகு அழைப்பு

கடந்த வாரம் இஸ்ரேலில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்தது. இந்தத் தேர்தலுக்கான முடிவுகளும் வெளியாகிவிட்டன. இஸ்ரேல் நாடாளுமன்றமான நெசட்டில் பெரும்பான்மை பெற 61 இடங்கள் தேவை. ஆனால், எந்தக் கட்சியும் ப... மேலும் பார்க்க

'வெளிநாடுகள் யாருக்கு உதவுகிறது?' "விவாதம் செய்யலாம்; நான் ரெடி" - மோடிக்கு ராகுல் சவால்

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி, தேசிய ஒற்றுமை தினத்தில் குஜராத்தில் உரையாற்றினார் இந்தியப் பிரதமர் மோடி. மோடி பேச்சுஅப்போது அவர், “சில சக்திகள் நாட்டைப் பிளவுபடுத்துவதற்கான சதிகளில் தொடர்ந்... மேலும் பார்க்க