செய்திகள் :

இஸ்ரேலில் ஆட்சியமைப்பதில் இழுபறி: "நானே பிரதமர்; ஆட்சி அமைக்க ஆதரவு தாருங்கள்" - நெதன்யாகு அழைப்பு

post image

கடந்த வாரம் இஸ்ரேலில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்தது. இந்தத் தேர்தலுக்கான முடிவுகளும் வெளியாகிவிட்டன.

இஸ்ரேல் நாடாளுமன்றமான நெசட்டில் பெரும்பான்மை பெற 61 இடங்கள் தேவை. ஆனால், எந்தக் கட்சியும் பெரும்பான்மையைப் பெறவில்லை.

இஸ்ரேலின் தற்போதைய பிரதமர் நெதன்யாகுவின் கூட்டணிக்கு 53 இடங்களும், அவரை எதிர்த்து நின்ற இஸ்ரேலின் முன்னாள் ராணுவத் தளபதி காடி ஐசன்காட்டின் கூட்டணிக்கு 48 இடங்களும் கிடைத்துள்ளன.

எந்தக் கட்சியும் பெரும்பான்மை பெறாததால், இஸ்ரேலில் இன்னும் புதிய ஆட்சி அமையவில்லை. இதனால், தற்போதைக்கு நெதன்யாகுவே இஸ்ரேலின் பிரதமராகத் தொடர்கிறார்.

நெதன்யாகு vs காடி ஐசன்காட் | அரபுக் கட்சிகள் ஆதரவு
நெதன்யாகு vs காடி ஐசன்காட் | அரபுக் கட்சிகள் ஆதரவு

அரபுக் கட்சிகளின் ஆதரவு..?

நெதன்யாகு, காடி ஐசன்காட் இருவரில் யார் அரபுக் கட்சிகளின் கூட்டணியைப் பெற்றாலும் ஆட்சி அமைத்துவிடலாம். நெதன்யாகுவிற்கு ஆதரவு தர அரபுக் கட்சிகள் விரும்பவில்லை. அவருமே அந்தக் கூட்டணியுடன் ஆட்சி அமைக்கமாட்டேன் என்று அறிவித்துவிட்டார்.

அரபுக் கட்சிகள் காடி ஐசன்காட்டிற்கு ஆதரவு தரத் தயாராக இருக்கின்றன. ஆனால், இவர்களின் ஆதரவைப் பெற்றால், இஸ்ரேல் மக்களின் அதிருப்தியையும், சொந்தக் கூட்டணிக்குள்ளேயே விரிசலைச் சந்திக்க நேரிடும் என்று காடி ஐசன்காட்ட் இந்த ஆப்ஷனை ஒதுக்கித் தள்ளிவிட்டார்.

இந்த நிலையில், இஸ்ரேலுக்கு இப்போது மூன்று சாய்ஸ்கள் உள்ளன.

> இன்னொரு பொதுத்தேர்தல் நடத்தப்படுவது,

> எதிர்க்கட்சியிலிருந்து நெதன்யாகுவின் கூட்டணிக்குத் தாவும் எம்.பி.க்கள் மூலம் ஆட்சி அமைப்பது,

> ஒரு தேசிய ஒற்றுமை அரசை உருவாக்குவது.

நெதன்யாகு பதிவு
நெதன்யாகு பதிவு

நெதன்யாகு அழைப்பு

இதையடுத்து நேற்று நெதன்யாகு இஸ்ரேலில் இருக்கும் சக கட்சிகளுக்குத் தனது எக்ஸ் பக்கத்தில் அழைப்பு விடுத்துள்ளார்...

"பயங்கரவாதத்தை ஆதரிக்கும் மற்றும் யூத நாட்டின் இருப்பையே நிராகரிக்கும் ‘ராஆம்’ (Ra'am) மற்றும் ‘ஜாயிண்ட் லிஸ்ட்’ (Joint List) ஆகிய கட்சிகளை நம்பி இருக்கும் ஒரு அரசை இஸ்ரேல் மக்கள் விரும்பவில்லை.

முதல் நாளிலிருந்தே, ஒரு தேசிய அரசை அமைப்பதற்காக எங்களது கரங்கள் நீட்டப்பட்டே உள்ளன.

யூத பொதுமக்களில் பெரும்பான்மையினர், மிகப்பெரிய கட்சியாக லிகுத்தையும், அடுத்த அரசை வழிநடத்த பிரதமராக என்னையும்தான் தேர்ந்தெடுத்துள்ளனர்.

எங்களது கூட்டாளிகளுடனும், பயங்கரவாதத்தை ஆதரிக்காமல் எங்களுடன் இணைய விரும்பும் எந்தவொரு கட்சியுடனும் இணைந்து ஒரு பரந்த அரசை அமைக்க நாங்கள் விரும்புகிறோம்.

இதுகுறித்துப் பேச்சுவார்த்தை நடத்த நான் தயாராகவே இருக்கிறேன்."

இவரது அழைப்புக்கு யாராவது செவிசாய்ப்பார்களா என்பதைப் பார்ப்போம்.

'ராஜ்மோகனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றவாளியை எதற்காக காப்பாற்றுகிறீர்கள்?' - நயினார் கேள்வி

சென்னை எழும்பூரில் நடைபெற்ற தமிழ்நாடு நாள் அரசு விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவர் பதவியைப் பெற்றுத் தருவதற்காகத் தனக... மேலும் பார்க்க

திறக்காத டாஸ்மாக் கடைகள்: தமிழகம் முழுவதும் 245 டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் பணியிடை நீக்கம்

தமிழ்நாடு முழுவதும் 245 டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். என்ன பிரச்னை? தமிழ்நாடு முழுவதும் காலி மதுபானப் பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு டா... மேலும் பார்க்க

"லஞ்சம் தர முயன்ற நபர் யார்? ராஜ்மோகன் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்" - அதிமுக இன்பதுரை

சென்னை எழும்பூரில் நடைபெற்ற தமிழ்நாடு நாள் அரசு விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவர் பதவியைப் பெற்றுத் தருவதற்காகத் தனக... மேலும் பார்க்க

வேலூர்: சாலைவசதி இல்லாத மலை கிராமம்; பள்ளி மாணவியின் உடலை டோலியில் தூக்கிச்சென்ற துயரம்

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட அல்லேரி மலை ஊராட்சியில் மருதவள்ளிமேடு என்ற குக்கிராமம் உள்ளது. இந்த மலை கிராமத்தில் வசிக்கும் தேவேந்திரன் என்பவரின் 17 வயது மகள் திவ்யா, அணைக்கட்டு அரசு ... மேலும் பார்க்க

'வெளிநாடுகள் யாருக்கு உதவுகிறது?' "விவாதம் செய்யலாம்; நான் ரெடி" - மோடிக்கு ராகுல் சவால்

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி, தேசிய ஒற்றுமை தினத்தில் குஜராத்தில் உரையாற்றினார் இந்தியப் பிரதமர் மோடி. மோடி பேச்சுஅப்போது அவர், “சில சக்திகள் நாட்டைப் பிளவுபடுத்துவதற்கான சதிகளில் தொடர்ந்... மேலும் பார்க்க