செய்திகள் :

'வெளிநாடுகள் யாருக்கு உதவுகிறது?' "விவாதம் செய்யலாம்; நான் ரெடி" - மோடிக்கு ராகுல் சவால்

post image

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி, தேசிய ஒற்றுமை தினத்தில் குஜராத்தில் உரையாற்றினார் இந்தியப் பிரதமர் மோடி.

மோடி பேச்சு

அப்போது அவர், “சில சக்திகள் நாட்டைப் பிளவுபடுத்துவதற்கான சதிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.

ஒரு தசாப்தத்திற்கும் மேலான விரக்திக்கும் ஏமாற்றத்திற்கும் பிறகு, அந்தச் சக்திகள் இப்போது பகிரங்கமாகவே வெளிவரத் தொடங்கிவிட்டன.

வெளிநாடுகளில் யார் யாரை ரகசியமாகச் சந்திக்கிறார்கள்? இந்திய எதிர்ப்புச் சக்திகள் யாருக்கு ஆதரவு தெரிவிக்கின்றன? இந்தியாவின் எதிரிகளின் மொழியில் பேசுபவர்கள் யார்?

மோடி
மோடி

இந்த அனைத்தையும் நாம் அடையாளம் கண்டு, ஒன்றாக இணைந்து எதிர்கொள்ள வேண்டும்.

குறிப்பாக, சமூக வலைதளங்கள் ஆயுதமாக்கப்படுவது, வதந்திகள் பரப்பப்படுவது மற்றும் இந்தியாவின் பிம்பத்தைச் சீர்குலைக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் ஆகியவை கவலையளிக்கின்றன.

இந்தச் சவால்களைச் சமாளிக்க நாட்டின் மக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும்” என்று பேசியிருந்தார்.

ராகுல் காந்தி பதிவு

மோடியின் இந்தப் பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், “திரு. மோடி அவர்களே, இந்த நாட்டு மக்களிடம் பொய் சொல்வதை நிறுத்துங்கள்.

நீங்கள் பிரதமர் ஆனதே வெளிநாட்டு உதவியால்தான். இப்போதும் பிரதமராக நீடிப்பதும் அதே வெளிநாட்டு உதவியால்தான்.

உங்களது நிதி அமைப்பு முழுமையாக வெளிநாட்டினரின் கட்டுப்பாட்டிலும் ஆதரவிலும்தான் இயங்குகிறது. வெளிநாட்டுச் சமூக வலைதளங்கள் உங்களுக்கு முழு ஆதரவையும் வழங்குகின்றன.

ராகுல் காந்தி பதிவு
ராகுல் காந்தி பதிவு

இதுகுறித்து உங்களுடன் பகிரங்க விவாதத்திற்கு நான் சவால் விடுகிறேன். எந்த மேடையிலும், எந்த நேரத்திலும் விவாதிக்கத் தயார். உங்களுக்குத் தைரியம் இருந்தால் வாருங்கள்.

ஆனால் நீங்கள் வரத் துணிய மாட்டீர்கள். ஏனென்றால் உங்களைப் பற்றி எனக்கு என்னவெல்லாம் தெரியும் என்பதை நினைத்து நீங்கள் மரண பீதியில் இருக்கிறீர்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

வேலூர்: சாலைவசதி இல்லாத மலை கிராமம்; பள்ளி மாணவியின் உடலை டோலியில் தூக்கிச்சென்ற துயரம்

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட அல்லேரி மலை ஊராட்சியில் மருதவள்ளிமேடு என்ற குக்கிராமம் உள்ளது. இந்த மலை கிராமத்தில் வசிக்கும் தேவேந்திரன் என்பவரின் 17 வயது மகள் திவ்யா, அணைக்கட்டு அரசு ... மேலும் பார்க்க

இஸ்ரேலில் ஆட்சியமைப்பதில் இழுபறி: "நானே பிரதமர்; ஆட்சி அமைக்க ஆதரவு தாருங்கள்" - நெதன்யாகு அழைப்பு

கடந்த வாரம் இஸ்ரேலில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்தது. இந்தத் தேர்தலுக்கான முடிவுகளும் வெளியாகிவிட்டன. இஸ்ரேல் நாடாளுமன்றமான நெசட்டில் பெரும்பான்மை பெற 61 இடங்கள் தேவை. ஆனால், எந்தக் கட்சியும் ப... மேலும் பார்க்க

டாடா குழும பிரச்னை: "அவர்களுக்குள்ளேயே சுமுகமாகத் தீர்த்துக்கொள்ள வேண்டும்" - நிர்மலா சீதாராமன்

டாடா குழுமத்தில் டாடா சன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் மற்றும் டாடா அறக்கட்டளையின் தலைவர் நோயல் டாடாவிற்கும் இடையே பிரச்னை தொடர்ந்து கொண்டிருக்கிறது.இது டாடா சன்ஸ் நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிட... மேலும் பார்க்க

"'Take Diversion!' முதலீட்டைத் தாரை வார்கிறது தவெக" - 'திருமலை' பட காமெடியை வைத்து இபிஎஸ் விமர்சனம்

அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வருவாயில் தமிழ்நாடு வெறும் 3% வளர்ச்சியோடு பின்தங்கி இருப்பதையும், கொரியாவைச் சேர்ந்த 3 நிறுவனங்கள் தமிழ்நாட்டிற்குப் பதிலாக ஆந்திராவில் 1,614 கோடி ரூபாய் முதலீடு செய்ததையும் ... மேலும் பார்க்க