செய்திகள் :

`ரூ.60 கோடி தங்கப் புதையல் கிடைச்சிருக்குது!’ – மளிகைக் கடை அண்ணாச்சியை ஏமாற்றி ரூ.20 லட்சம் `அபேஸ்’

post image

தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி பகுதியைச் சேர்ந்த ராஜா, எட்டயபுரத்தில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் இவரை செல்போனில் தொடர்புகொண்ட முன்பின் அறிமுகமில்லாத நபர் ஒருவர், `மளிகைக் கடை ராஜா அண்ணாச்சிதானே…? எனக்கு உங்களை நல்லாத் தெரியும் அண்ணாச்சி. உங்களை விட்டால் எனக்கு உதவி செய்ய யாருமே இல்லை’ என்று தழுதழுத்தபடி பேசியிருக்கிறார்.

ஆனால், `நீங்கள் யார் என்று சொல்லுங்கள்…’ என்று ராஜா கேட்டுக் கொண்டிருக்கும்போதே, ``அண்ணாச்சி என் பேரு சுரேஷ். உங்களை எனக்கு நல்லாத் தெரியும். செஞ்சிக்குப் பக்கத்துல ஒரு கிராமத்துல கட்டுமான வேலைக்கு நான் பள்ளம் தோண்டியபோது ஆறு கிலோவுக்கு தங்கப் புதையல் கிடைச்சிருக்கு. எனக்கு படிப்பறிவு இல்லாததால அதை யாருகிட்ட விற்கறதுனு தெரியல.

பித்தளைக் காசுகள்

தெரிஞ்சவங்ககிட்ட சொன்னாலும் பணத்துக்கு ஆசைப்பட்டு அவங்களும் என்னை ஏமாத்திடுவாங்கனு தோணுது. அதனால் இந்தப் புதையலை விற்கறதுக்கு நீங்கதான் எனக்கு உதவி பண்ணனும்” என்றுப் பேசியதுடன், வாட்ஸ்-அப் மூலம் தங்கக் காசுகளின் போட்டோவையும் அனுப்பியிருக்கிறார். குவியலாக தங்கக் காசுகளைப் பார்த்த ராஜா, புதையலை நேரில் பார்க்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு சுரேஷ், ``நான் இப்போ பாண்டிச்சேரில வேலை பார்த்துக்கிட்டு இருக்கேன். புதையலை எடுத்துக்கிட்டு என்னால அங்க வர முடியாது. அதனால் பாண்டிச்சேரிக்கு வந்தால் புதையலைப் பார்க்கலாம்” என்று கூறியிருக்கிறார். அதையடுத்து சுரேஷ் கூறியபடி புதுச்சேரி வில்லியனூரை அடுத்திருக்கும் தொண்டமாநத்தம் கிராமத்துக்குச் சென்றிருக்கிறார் அண்ணாச்சி.

அங்கு அவரைச் சந்தித்த சுரேஷ், பையில் வைத்து தான் கொண்டு வந்திருந்த தங்கக் காசுகளில் இருந்து ஒன்றை எடுத்து ராஜாவிடம் கொடுத்திருக்கிறார். அதை வாங்கிக் கொண்ட ராஜா, உடனே ஒரு நகைக்கடைக்குச் சென்று அது அசலா போலியா என்று சோதித்திருக்கிறார். அது அசல் தங்கம்தான் என்று உறுதியானதால், புதையலை மொத்தமாக வாங்க முடிவெடுத்தார் ராஜா.

அதையடுத்து சுரேஷை சந்தித்த அவர், `நீ வெளிப்படையாக இருப்பதைப் பார்த்தால் உன்னை எல்லோரும் எளிதாக ஏமாற்றிவிடுவார்கள் என்று தெரிகிறது. அதனால் உனக்காக நானே ரிஸ்க் எடுத்துக் கொள்கிறேன். புதையலை நானே வாங்கிக் கொள்கிறேன். எவ்வளவு வேண்டும்?” என்று கேட்டிருக்கிறார்.

அப்போது, ``என்கிட்ட ஆறு கிலோவுக்கு தங்கக் காசு இருக்குது. அதோட மதிப்பு ரூ.60 கோடி. ஆனால் இப்போ இருபது கோடி மதிப்புள்ள தங்கக் காசை உங்களுக்காக ரூ.20 லட்சத்துக்குத் தர்றேன்.

கைது
கைது

நீங்களும் கஷ்டப்படறீங்க. கடவுள் கொடுத்த இந்தப் புதையல் நாலு நல்லவங்களுக்கு உதவியா இருக்கட்டும்” என்று உருக்கமாகப் பேசியிருக்கிறார் சுரேஷ். அதை அப்படியே நம்பிய ராஜா, ஊருக்குப் போய் பணம் எடுத்து வருகிறேன் என்று கூறிவிட்டு தூத்துக்குடிக்கு பஸ் ஏறியிருக்கிறார். தூத்துக்குடிக்குச் சென்ற ராஜா, வீட்டிலிருந்த நகைகளை அடகு வைத்தும், தெரிந்தவர்களிடம் கடன் வாங்கியும் ரூ.20 லட்சத்தை தயார் செய்தார்.

அதன்பிறகு ஆகஸ்ட் 30-ம் தேதி ரூ. 20 லட்சம் பணத்துடன் புதுச்சேரிக்குத் திரும்பிய ராஜா, அதே தொண்டமாநத்தம் பகுதியில் சுரேஷிடம் கொடுத்து தங்கப் புதையல் இருந்த பானையை வாங்கினார். அப்போது, `புதையல் பூமியைவிட்டு வெளியில் வந்தவுடன் தன்னுடைய இருப்பிடத்தைக் காட்டிவிடும் என்பதால், இங்கு பானயைப் பிரித்துப் பார்க்க வேண்டாம்’ என்று கூறியிருக்கிறார் சுரேஷ்.

அதை ஏற்றுக் கொண்ட ராஜா, காரில் போகும்போது புதையல் பானையைப் பிரித்துப் பார்த்திருக்கிறார். அப்போது அதில் தங்கக் காசுகளுக்கு பதில் பித்தளைக் காசுகளும், களிமண்ணும் இருந்ததைப் பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார். தான் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்று உணர்ந்து கொண்ட ராஜா, சுரேஷின் செல்போனுக்குப் போன் செய்தார். ஆனால் அது ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததால், வில்லியனூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்த வில்லியனூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், சுரேஷின் செல்போன் எண் மூலம் அவரைப் பிடிக்க போலீஸாருக்கு உத்தரவிட்டார். அதன்படி கடலூர் கொடிக்கால்குப்பம் பகுதியைச் சேர்ந்த சுரேஷை போலீஸார் கைது செய்ததுடன், அவரிடமிருந்த ரூ.6 லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட சுரேஷுடன், இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் உள்ளிட்டப் போலீஸார்

தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், புதுச்சேரி பத்துக்கண்ணு பகுதிக்கு அருகிலிருக்கும் அம்மனங்குப்பம் கிரமத்தைச் சேர்ந்த தர்மலிங்கம், அவரது மனைவி ரேணுகா, வளர்ப்பு மகன் வெங்கடேசன், மகள் தரணி, சகோதரர் ராமகிருஷ்ணன், அவரது மகன் ராம்குமார், உறவினர் ஆனந்த் உள்ளிட்ட 15 பேர் இதற்கு மூளையாகச் செயல்பட்டது தெரியவந்தது.

தற்போது சுரேஷுடன், ஆனந்தையும் கைது செய்திருக்கும் போலீஸார், தலைமறைவாக இருக்கும் மற்றவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதுகுறித்து விசாரணை அதிகாரிகளிடம் கேட்டபோது, ``புதையல் திட்டத்தை தயார் செய்த கும்பல், அதை ஏமாந்து வாங்குவதற்குத் தோதாக சமூக வலைத்தளங்களில் ஆட்களைத் தேடியிருக்கிறது. அப்படித்தான் ராஜா இவர்களிடம் சிக்கியிருக்கிறார். எப்படி சிக்கினார் என்பது தர்மலிங்கமும் அவருடைய குடும்பத்தினரும் சிக்கினால்தான் தெரியவரும்” என்றனர்.

பாலியல் தொல்லை... அத்துமீறிய தந்தை; சிங்கப்பெண் படையிடம் புகாரளித்த மாணவி - பாய்ந்தது போக்சோ!

நெல்லை, டவுன் அருகே உள்ள குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்தவர், 52 வயதான பிளம்பிங் தொழிலாளி. இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் 3-வது மகள், நெல்லை டவுனில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.... மேலும் பார்க்க

ஜெம் வீரமணி: `மொபைலில் சிறுமியின் பாலியல் வீடியோ'- வீரமணியின் வலதுகரம் கைது.. வேகமெடுக்கும் விசாரணை!

சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட குற்றத்திற்காக சென்னையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஜெம் கிரானைட் அதிபர் வீரமணி 29.08.2026- ம் தேதி கைது செய்யப்பட்டார். வீரமணிக்கு உதவிய குற்றச்சாட்டில் அவரின் த... மேலும் பார்க்க

சென்னை: போக்சோ வழக்கில் சிக்கிய போலீஸ் எஸ்.ஐ கொலை - ஆண் நண்பருடன் மனைவி சிக்கிய `அதிர்ச்சி' பின்னணி!

சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியா பகுதியில் வசித்து வந்தவர் ராஜ் (58), இவர் சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை பிரிவில் எஸ்.ஐ-யாகப் பணியாற்றி வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் கருகிய நிலையில் ... மேலும் பார்க்க

உறவை முறித்த `ஆசிரியை'யான காதலி; மாணவர்கள் முன்னிலையில் சுட்டுக் கொன்று விபரீத முடிவெடுத்த இளைஞர்!

உத்தரப்பிரதேச மாநிலம், லக்கிம்பூர் கேரியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தவர் பாத்திமா (26). இவர் மொகமத் (27) என்பவரைக் காதலித்து வந்தார். ஆனால் சமீபத்தில் மொகமத்துடனான உறவை முறித்துக்... மேலும் பார்க்க

நடுரோட்டில் சிறுமிக்குப் பாலியல் தொல்லை; "இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்" - பீகார் அமைச்சர் பேச்சு

பீகார் மாநிலம் ஜமுய் பகுதியில், பயிற்சி வகுப்பிலிருந்து தனது ஆண் நண்பருடன் திரும்பிக்கொண்டிருந்த 10வது மாணவியை ஒரு கும்பல் வழிமறித்துச் சூழ்ந்துகொண்டது, அவர்களிடம் விசாரணை நடத்தியதோடு, அவர்களைத் தாக்க... மேலும் பார்க்க

நண்பருடன் கோயிலுக்கு சென்ற சிறுமி; போலீஸ் எனக்கூறி கூட்டு பாலியல் வன்கொடுமை - டெல்லி அதிர்ச்சி

டெல்லியில் கடந்த வாரம் தான் தனது நண்பர்களுடன் சென்ற மைனர் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு திறந்த வெளியில் வீசப்பட்டார். அதற்குள் மேலும் ஒரு கூட்டு பாலியல்... மேலும் பார்க்க