செய்திகள் :

ரேஷன் அரிசி கடத்தல்; தட்டிக் கேட்ட மாற்றுத்திறனாளி சர்வதேச வீராங்கனைமீது தாக்குதல் – பெண் கைது!

post image

சிவகங்கை பையூர் சாலை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பில், அரிசி கடத்தல் மற்றும் சமூகவிரோத செயல்களைத் தட்டிக் கேட்ட மாற்றுத்திறனாளி குடியிருப்போர் சங்கத் தலைவியும் சர்வதேச விளயாட்டு வீராங்கனையுமான சுபஜாவை, பெண்  ஒருவர் தாக்கியுள்ள சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதுதொடர்பாக மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்றுவரும் சுபஜாவிடம் நாம் விசாரித்தோம். 

"நான் இரு கால்களையும் இழந்த மாற்றுத்திறனாளி மற்றும் சர்வதேச விளையாட்டு வீராங்கனை. எங்கள் குடியிருப்பில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழைகளுக்காக ஒதுக்கப்பட்ட வீடுகளைப் பலர் முறைகேடாக உள்வாடகைக்கு விட்டுள்ளனர். மதுரை, திண்டுக்கல் போன்ற பகுதிகளில் இருந்து ஆண்களை அழைத்து வந்து தங்க வைத்து, ரேஷன் அரிசியைக் கார்களில் கடத்தும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதைக் தட்டிக் கேட்டால்  தொல்லை கொடுக்கிறார்கள். `அதிகாரிகளின் துணையுடன்தான் இந்த ரேஷன் அரசிக் கடத்தல் தொழிலைச் செய்து வருகிறோம். எங்களை யாராலும் எதுவும் செய்ய முடியாது 'என்று அவர்கள் நேரடியாகவே மிரட்டி வருகின்றனர். 

சுபஜா

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் போட்டோ ஆதாரங்களுடன் நேரில் புகார் மனு அளித்தேன். ஆனால், கலெக்டர் ஆபீஸில் உள்ள சில அதிகாரிகள் அந்த ரகசியத் தகவலை எதிர்த்தரப்புக்குக் கசியவிட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த, தற்காலிக இரவு நேரக் காவலாளியாக வேலை பார்க்கும் மலர்விழி என்பவர் என்னை நேரில் சந்தித்துச் செருப்பாலும் கையாலும் கடுமையாகத் தாக்கினார். 

எனது வலது  நெஞ்சுப் பகுதியில் தாக்கியதில் ரத்தம் கட்டிப் போய்விட்டது. 'முன்னாடிலாம் 90 நாள், இப்போ 45 நாள்ல நான் வெளில வந்துருவேன்' என்று திமிராக அந்தப் பெண் என்னை தாக்கிவிட்டு மிரட்டிவிட்டுச் சென்றார். தற்போது சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாகச் சிகிச்சை பெற்று வருகிறேன்; அராஜகத்தையும் அட்டூழியங்களையும் தட்டிக் கேட்டால் இப்படித்தான் தாக்குவார்களா? இதற்கு அரசு அதிகாரிகளும் துணைபோவதுதான் பெருங்கொடுமை..” என்றார்.

சுபஜா அளித்த புகாரின் அடிப்படையில் மலர்விழி கைது செய்யப்பட்டுள்ளதாக சிவகங்கை போலீஸார் நம்மிடம் தெரிவித்தனர்.

அரசு அலுவலகங்களிலேயே புகார்களின் ரகசியங்கள் கசிவதும், குற்றங்களைத் தட்டிக் கேட்கும் சமூகப் போராளிகளுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதும் சிவகங்கைப் பகுதியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மற்றும் தகவலைக் கசியவிட்ட அதிகாரிகள் மீது உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

பெரியார் அறிவுலகம் விவகாரம்: "நூலகத் துறையிலும் Party Fund! மாபெரும் அறிவுத் துரோகம்!" - அருண்ராஜ்

கோவையில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்தில் உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கொண்ட நூல்கள் இடம்பெற்றிருப்பதை எழுத்தாளர் பெருமாள் முருகன் சுட்டிக்காட்டியிருப்பது இப்போது தமிழ்நாடு முழுவது... மேலும் பார்க்க

`முஸ்தபா ஒன்றும் அரிச்சந்திரன் கிடையாது; கவுன்சிலர் சீட்டுக்குப் பணம் கேட்டவர்!' - செல்லூர் ராஜூ

மதுரை மத்திய தொகுதி தவெக எம்எல்ஏ முஸ்தபாவிடம் குதிரை பேர முயற்சியில் ஈடுபட்டதாக அதிமுக கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளரும், மதுரை முன்னாள் துணை மேயருமான P.M. மன்னன் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரா... மேலும் பார்க்க

டெல்லி காற்று மாசு பிரச்னை: `பயிர்கள் மட்டுமல்ல, ஆடம்பர கார்களும் காரணம்..!'- உச்ச நீதிமன்றம்

தீபாவளி வந்துவிட்டாலே, இந்தியாவின் தலைநகரான டெல்லியில் மாசு மிகப்பெரிய தலைவலியாக மாறிவிடுகிறது. இது தீபாவளியையொட்டி வெடிக்கப்படும் பட்டாசுகளால் மட்டுமல்ல. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர், நவம்பர் மாதங்களில்,... மேலும் பார்க்க

பெரியார் நூலக விவகாரம்: 'அடுத்த தலைமுறைக்கு செய்யும் துரோகம்'- அண்ணாமலை

கடந்த திமுக ஆட்சியில் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட, ‘பெரியார் அறிவுலகம்’ மற்றும் அறிவியல் மையத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கடந்த அக்டோபர் 16ஆம் தேதி திறந்து வைத்தார். இந்நி... மேலும் பார்க்க

நூலக நூல் கொள்முதல் ஊழல்: ``அரசுப் பணத்தைத் திட்டமிட்டுச் சூறையாடும் நோக்கில்..." - சிபிஎம் சண்முகம்

கோவை பெரியார் அறிவுலகம் நூலக நூல் கொள்முதல் ஊழல் குறித்து கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்திருக்கும் சிபிஎம் சண்முகம், இந்த ஊழல் குறித்து விரிவான விசாரணை வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார். இது தொடர்ப... மேலும் பார்க்க

"போலியான நூல்களில் மட்டும் ஜூன் மாத முத்திரை... தவெக ஆட்சியில் யாருக்கு கமிஷன் போனது?"- திமுக கேள்வி

பெரியார் அறிவுலகம் நூலத்துக்கு நூல் கொள்முதல் செய்ததில் ஊழல் நடைபெற்றிருப்பதாக தெரிவித்த எழுத்தாளர் பெருமாள் முருகன் ``அந்தத் தொகைக் கோடிக்கணக்கில் இருக்கும் என்று தோன்றுகிறது. இந்நூலகத்துக்கு விநியோக... மேலும் பார்க்க