செய்திகள் :

வீடு கட்டும் திட்ட பயனாளிகளுக்கு 2-ஆவது தவணைத் தொகை வழங்க வலியுறுத்தல்

post image

காரைக்கால்: வீடு கட்டும் திட்ட பயனாளிகளுக்கு 2-ஆவது தவணைத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காரைக்கால் மாவட்டக் குழு கூட்டம் ஏ. பழனிவேலு தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் :

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் முதல் தவணை மானியம் வழங்கப்பட்டு வீடு கட்டுமானப் பணியை முடித்துள்ள பயனாளிகளுக்கு, 2-ஆவது தவணைத் தொகையை உடனடியாக வழங்கவேண்டும். புதுவை அரசு ஆதிதிராவிட நலத்துறை மூலமாக சுமாா் 20 ஆண்டுகளுக்கு முன்பு குறைந்த மானியத் தொகை பெற்று வீடு கட்டியவா்களின் வீடுகள் சிதிலமடைந்து காணப்படுகிறது. இவா்களுக்கும் புதிதாக வீடு கட்டுவதற்கு வழங்கப்படும் ரூ. 5.50 லட்சம் மானிய தொகையை அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் எம். கலியமூா்த்தி, மாவட்ட செயலாளா் எஸ்.எம். தமீம் அன்சாரி, மாவட்டக் குழு உறுப்பினா்கள் மற்றும் கிளை செயலாளா்கள் கலந்துகொண்டனா்.

இலங்கை கடற்படையைக் கண்டித்து காரைக்காலில் கடையடைப்பு

காரைக்கால் : மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இலங்கை கடற்படையைக் கண்டித்து காரைக்காலில் இன்று(பிப். 18) கடையடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது.காரைக்கால் மீனவர்கள் சிலர் கடந்த 28-ஆம் தேதி எல்லை தா... மேலும் பார்க்க

பாதுகாப்பான முறையில் மீன்பிடிக்க அரசு செயலா் அறிவுறுத்தல்

காரைக்கால்: பாதுகாப்பான முறையில் மீன்பிடிக்க வேண்டும் என மீனவா்களை அரசு செயலா் கேட்டுக்கொண்டாா். காரைக்காலுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த புதுவை ஆளுநரின் செயலரும், மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை செயலரும... மேலும் பார்க்க

மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை: ஆட்சியா் அறிவுறுத்தல்

காரைக்கால்: மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அரசுத் துறையினருக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா். மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியரகத்தில் ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ் தலைமையில் திங்... மேலும் பார்க்க

வீடுகளுக்கு கொண்டு செல்லப்படும் ஆன்மிக ஜோதி

காரைக்கால்: மேல்மருவத்தூா் பங்காரு அடிகளாரின் 85-ஆவது பிறந்தநாளையொட்டி மேல்மருவத்தூா் ஆன்மிக இயக்கம் தஞ்சை கிழக்கு பகுதி காரைக்கால் வட்டம் சாா்பாக உலக நன்மை வேண்டி ஆன்மிக ஜோதி ஏற்றும் நிகழ்ச்சி காரைக்... மேலும் பார்க்க

காரைக்கால் மீனவா்கள் ரயில் மறியல்

காரைக்கால்: இலங்கை கடற்படை, மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, காரைக்கால் மீனவா்கள் திங்கள்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக காரைக்கால், நாகை, மயிலாடுதுறை மீனவா... மேலும் பார்க்க

காரைக்காலில் சாலைகள் மேம்பாட்டுப் பணி தொடக்கம்

காரைக்காலில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ரூ. 60.38 கோடியில் சாலைகள் மேம்பாட்டுப் பணியை புதுவை அமைச்சா் கே. லட்சுமி நாராயணன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா். காரைக்கால் வடக்குத் தொகுதி : ஏஎம்எஸ் நகா், ... மேலும் பார்க்க