செய்திகள் :

வீரமணி பாலியல் வழக்கு: ``கம்யூனிஸ்டுகளின் நிலைபாடு என்ன?" - அமைச்சர் ராஜ் மோகன் கேள்வி

post image

தவெக - இடதுசாரி கட்சிகளுக்கு மத்தியில் தற்போது வார்த்தை போர் நிலவிவருகிறது. தவெக ஆட்சி அமைக்க ஆதரவளித்திருந்தாலும் இடதுசாரி கட்சிகள் தனித்தனியே இடைத்தேர்தலை எதிர்க்கொள்கின்றனர்.

இந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று சென்னை திருவல்லிக்கேணி எம்ஓபி வைணவ உயர்நிலை பள்ளியில் புதிய சத்துணவுக் கூடத்தைத் திறந்து வைத்தார்.

அதைத் தொடர்ந்து நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், ``தவெக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி மிகவும் உறுதியானதாகவும், ஜனநாயகப்பூர்வமானதாகவும் உள்ளது.

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பாகப் பல்வேறு தரப்பினரின் கருத்துக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கோரிக்கைகளைக் கேட்டு, முடிவுகளை மறுபரிசீலனை செய்யும் அதிகாரம் முதலமைச்சருக்கு உண்டு.

 வீரபாண்டியன், பெ.சண்முகம்
வீரபாண்டியன், பெ.சண்முகம்

கடலில் பேனா சின்னம் அமைத்தே தீருவோம் என எதையும் அடம் பிடித்துச் செய்யும் அரசாக இது செயல்படாது. எனவே, அவர்கள் எங்கள் மீது விமர்சனம் வைக்கலாம். அதுதான் ஜனநாயகம். அதேப்போல, கம்யூனிஸ்ட்களிடம் கேட்க வேண்டும்... கடந்த சில தினங்களாக விவாதிக்கப்படும் ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி பாலியல் வன்கொடுகை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மிகக் கொடூரமான வழக்கு. இதில் கம்யூனிஸ்டுகளின் நிலைப்பாடு என்ன? கடந்த ஆட்சியாளர்களின் காலத்தில் இத்தகைய போக்சோ வழக்குகள் மூடி மறைக்கப்பட்டன. தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற இந்த விவகாரத்தைக் கம்யூனிஸ்டுகள் கண்டிக்கிறார்களா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன்" எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

ஜெம் வீரமணி வழக்கு: "திமுக-வும், தவெக-வும் வாதிட்டுக் கொண்டு காலந்தாழ்த்தாமல்..!"- வானதி சீனிவாசன்

"ஜெம் நிறுவனர் வீரமணி மீதான வழக்கில் திமுக-வும், ஆளுங்கட்சியான தவெக-வும் ஒருவருக்கொருவர் வாதிட்டுக் கொண்டு காலந்தாழ்த்தாமல், அரசியல் தலையீடோ, அதிகாரம் மற்றும் செல்வாக்கின் அடிப்படையிலான பாரபட்சமோ ஒருப... மேலும் பார்க்க

மதுரை பள்ளி மாணவன் உயிரிழப்பு விவகாரம்: 16 நாள்களுக்குப் பிறகு உடலைப் பெற்றுக்கொண்ட உறவினர்கள்!

மதுரை ஆனையூர் கூடல்புதூர் வானவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் 11-ம் வகுப்பு மாணவன் தமிழ்ச்செல்வன். இவரின் உடல் முட்புதர் குட்டை ஒன்றில் இருந்து கடந்த 7-ம் தேதி மீட்கப்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினர்... மேலும் பார்க்க

"கம்யூனிஸ்ட்களின் வரலாற்றை ஆதவ் அர்ஜுனா படித்து முதல்வருக்கும் சொல்ல வேண்டும்" - வீரபாண்டியன் பதிலடி

"கம்யூனிஸ்ட் வரலாற்றை ஆதவ் அர்ஜுனா படித்து முதல்வருக்கும் சொல்ல வேண்டும்" என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் தெரிவித்திருக்கிறார். கம்யூனிஸ்டுகளுக்கும், தவெகவினருக்கு... மேலும் பார்க்க

'நெடுஞ்சாலைகளில் 70 கி.மீக்கு மேல் சென்றால் அபராதம்!' - அமைச்சர் ஆதவ்வின் புது திட்டம்!

பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரான ஆதவ் அர்ஜூனா, அத்துறையின் பொறியாளர்களுடன் துறை சம்பந்தமான பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியிருக்கிறார். அதில், அடுத்த சில ஆண்டுகளில் மேற்கொள்ள... மேலும் பார்க்க

வேலூர்: உயிரோடு இருக்கும்போதே இறப்புச் சான்றிதழ் கேட்ட விவசாயி - என்னக் காரணம் தெரியுமா?

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகேயுள்ள கே.ஜி.ஏரியூரைச் சேர்ந்தவர் காந்தி (வயது 47). இவர் தனது மனைவி மேரியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து மனு ஒன்றை அளித்தார். மனுவில் அவர் கூறியிருப்பதாவது, `... மேலும் பார்க்க

'மாணவர் விடுதிகளில் மாட்டிறைச்சியா?'- வன்னியரசு பரிசீலினைக்கு கிருஷ்ணசாமி கண்டனம்!

சமூகநீதி விடுதிகளில் மாணவர்களுக்கு சிக்கன், மட்டன் வழங்கப்பட்டு வருவதை போல் மாட்டிறைச்சி வழங்குவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பரிசீலனை செய்யப்படும் என அமைச்சர் வன்னியரசு சைதாப்பேட்டை எம்.சி.... மேலும் பார்க்க