செய்திகள் :

வைகோ புத்தகத்தை வெளியிடும் ராகுல்; எழுத்தாளரின் அறச்சீற்றமும் காங்கிரஸின் சமாளிப்பும்!

post image

வைகோ கடந்த காலங்களில் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகள் தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளியிடும் நிகழ்ச்சி இன்று மாலை டெல்லியில் நடக்கிறது. புத்தகத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் பெற்றுக் கொள்கிறார்.

இந்நிலையில் இந்தப் புத்தக வெளியீட்டு விழா தொடர்பாக சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ. தர்மன் சமூக ஊடகம் வழியே சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார். அதாவது வைகோவின் புத்தகத்தை வெளியிடத் தகுதியானவர் மு.க.ஸ்டாலின் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இரண்டு முறை இது குறித்துப் பதிவிட்டிருந்த சோ தர்மனிடம் பேசினோம்.

எழுத்தாளர் சோ. தர்மன்
எழுத்தாளர் சோ. தர்மன்

’’தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள தெற்குத் திட்டங்குளத்தில் திமுக கிளைச் செயலாளரா இருந்தவன் நான். ஒருகட்டட்துல எந்தக் கட்சியும் வேண்டாம்னுட்டு எழுத்துப் பக்கம் வந்துட்டேன். ஆனா அன்னைக்கு கோபால்சாமி கூட அரசியல் செஞ்சவங்கிற ஒரு முறையில என் கருத்தைச் சொன்னேன். இவ்ளோ வருஷம் டெல்லியில பேசினதை புத்தகமாக்குறது நல்ல விஷயம்தான். ஆனா டெல்லிக்கு இவ்வளவு காலமும் உங்களை அனுப்பி வச்சது யாருங்கிறது முக்கியமில்லையா?

மனுஷனா பிறந்தா நன்றி விசுவாசம் இருக்கணும்ங்க. நான் கூடதான் சாகித்ய அகாடமி விருது வரைக்கும் வாங்கிட்டேன். ஆனா இன்னைக்கும் எந்தக் கூட்டத்துக்குப் போனாலும் கி.ரா-வைத் தொடாம என் பேச்சை முடிக்கவே மாட்டேன். காரணம் எனக்கு இந்தத் துறையில் பாதையைக் காட்டினார்.

மொத்த வருஷத்துல ஒரு பீரியட் என்னவோ அதிமுக ஆதரவுடன் போயிருப்பார். மத்த எல்லா முறையும் திமுக ஆதரவுடனேயே நாடாளுமன்றத்துக்குப் போயிட்டு அங்க பேசினதை புத்தகமா போடுறப்ப ஒரு திமுக காரனுக்குக் கூடச் சொல்லலன்னா என்னங்க அர்த்தம்?

நியாயப்படி திமுக தலைவர் ஸ்டாலின் கையாலதான் புத்தகத்தையே வெளியிட்டிருக்கணும். தேர்தலுக்குப் பிறகு எதிரணிக்குப் போயிட்டாக் கூட ஸ்டாலின் கிட்டப் போய் புத்தகத்தை வெளியிடக் கேட்டா அவர் நிச்சயம் சரினு சொல்லி வந்திருப்பார்.

ஸ்டாலின் - திமுக
ஸ்டாலின் - திமுக

அதை விட்டுட்டு காலங்காலமா ராஜ்யசபாவுல யாரைத் திட்டித் தீர்த்தீங்களோ அவங்களையே கூப்பிட்டு விழாவை நடத்தறது முரணா இல்லையா? ஈழத் தமிழர்களுக்காக காங்கிரஸ்காரர்களை எவ்வளவு பேசியிருப்பார். அதே காங்கிரஸ் தலைவர் கையால் புத்தகம் வெளியிடறது நல்லாவா இருக்கு? என்னவோ எனக்கு இதைச் சொல்லணும்னு தோணுச்சு, சொல்றேன்’’ என்கிறார்

காங்கிரஸ் கட்சியின் கோபண்ணாவிடம் இந்தப் புத்தக வெளியீட்டு விழா குறித்துக் கேட்டோம்.

கோபண்ணா, தமிழ்நாடு காங்கிரஸ்
கோபண்ணா, தமிழ்நாடு காங்கிரஸ்

‘’காமராஜர் சகாப்தம்னு ஒரு புத்தகம். அதுல காமராஜர் குறிப்பிட்டிருந்த ‘திமுகவும் அதிமுகவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்’ங்கிற வாக்கியம் இடம் பெற்றிருந்தது. அந்தப் புத்தகத்துக்கு அணிந்துரை எழுதியிருந்தார் கலைஞர். இது குறித்து நானே அவர்கிட்டக் கேட்டேன். ‘அதுல தவறு ஓண்ணுமில்ல, அவர் தன்னுடைய கருத்தைச் சொன்னார். அணிந்துரை நான் தந்தது காமராஜர் மீது வச்சிருந்த மரியாதையால்’னு சொன்னார்.

அரசியல்ல இது மாதிரி ஏகப்பட்ட உதாரணங்கள் சொல்லலாம். இந்திரா காந்தியை திமுக பேசாத பேச்சா? காங்கிரசும் திமுகவும் கூட்டணியில இல்லையா? அதேபோலத்தான் இதுவும்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

பொது எதிரி பாஜகவை வைகோ கடுமையா எதிர்க்கிறார். அந்த ஒரு அடிப்படையில் நாங்க இப்ப ஒரே அணியில் இருக்கோம். இன்னைக்கு அவர் பிரபாகரனை ஆதரிக்கிறதுல எங்களுக்கு உடன்பாடு கிடையாது. அது வேற இது வேற. ரெண்டையும் போட்டு குழப்பிக்காதிங்க’' என்கிறார் இவர்.

மாணவர்கள் போராட்டம் குறித்த சுற்றறிக்கை: "பாசிச அரசியலைத் தொடங்க ஆழம் பார்த்ததா தவெக அரசு?"- கனிமொழி

காக்ரோச் ஜனதா கட்சி மற்றும் இடதுசாரி போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து சில நிமிடங்களிலேயே இந்த ... மேலும் பார்க்க

`ஆளுங்கட்சி ஆகிவிட்டோம்' தவெக கூட்டணியை உறுதி செய்த திருமா; பாமக-வுக்கு வைத்த செக்! - பின்னணி என்ன?

தவெக அமைச்சரவையில் அமைச்சர் வன்னி அரசு இடம்பெற்றிருந்தாலும் எந்தக் கூட்டணியில் விசிக இருக்கிறது என்பதை தெளிவாக கூறாமல் திருமாவளவன் குழப்பி வந்தார். 'திமுகவுடன் எங்களது நட்பு தொடர்கிறது' என்று திமுகவிற... மேலும் பார்க்க

மேகமலை: `துணை ராணுவப் படையை அனுப்ப நேரிடும்; முழுமையாக இடித்து அகற்றுங்கள்'- உச்ச நீதிமன்றம் அதிரடி

மேகமலை புலிகள் சரணாலயம் மற்றும் மாஞ்சோலையைச் சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், இலவம் பஞ்சு தோட்டங்களையும் முழுமையாக அப்புறப்படுத்த உச்ச நீதிமன்றம் மிகக் கடுமையான உத்... மேலும் பார்க்க

`முதலமைச்சரை மிஞ்சிய சூப்பர் பவரின் கையில் ஆட்சி இருக்கிறதா?'- திமுக கேள்வி

`முதலமைச்சரை மிஞ்சிய சூப்பர் பவரின் கையில் ஆட்சி இருக்கிறதா?' என திமுக கேள்வி எழுப்பியிருக்கிறது.இது தொடர்பாக வெளியாகியிருக்கும் அறிக்கையில், `நேற்றைய தினம் அதிகார ஆணவத்திமிரோடு, “திண்டுக்கல் மாவட்டம்... மேலும் பார்க்க

`மூன்று தமிழர்களைச் சுட்டுக் கொன்றுவிட்டு, ஆணவத்தோடு டி.கே.சிவக்குமார் பேசுவதா?' - சீமான் கண்டனம்

`கர்நாடக வனப்பகுதியில் மூன்று அப்பாவித்தமிழர்களை ஈவிரக்கமற்றுச் சுட்டுக்கொன்றுவிட்டு, எங்கள் மாநிலத்தின் விவகாரத்தில் தலையிடாது, உங்கள் வேலையைப் பாருங்கள் எனத் துளியும் குற்றவுணர்ச்சியோ, பொறுப்புணர்ச்... மேலும் பார்க்க

"அந்தத் தண்ணீரைக் குடிக்கிறாங்க, கோயிலுக்கு அபிஷேகம் பண்றாங்க" - கூவம் நதி குறித்து சௌமியா அன்புமணி

தமிழக சட்டப்பேரவையில் இன்று நிதிநிலை அறிக்கை, நீர்வளம், ஊரக வளர்ச்சி, சுற்றுலாத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சட்டமன்ற விவாதத்தின்போதுபேசிய பாமக எம்எல்ஏ சௌமியா அன்ப... மேலும் பார்க்க