செய்திகள் :

"ஹார்முஸ் நீர்ச்சந்தியின் பெயரை 'ட்ரம்ப் நீர்ச்சந்தி' என மாற்றிடலாமா?" - ட்ரம்ப் புது யோசனை

post image

ஈரான் போர் ஈரான், அமெரிக்கா, இஸ்ரேலுக்கு இடையிலான போராகத்தான் முதலில் தொடங்கியது.

ஆனால், இந்தப் போருக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக, ஈரான் ஹார்முஸ் நீர்ச்சந்தியை மூடியபோதுதான், ஈரான் போர் உலக நாடுகளுக்கான பிரச்னையாக மாறியது.

காரணம், உலக நாடுகளின் எண்ணெய் போக்குவரத்து இந்த நீர்ச்சந்தி வழியாகத்தான் பெரும்பான்மையாக நடக்கும்.

இதனால், இந்த நீர்ச்சந்தியை மூடியதும் பல உலக நாடுகள் எண்ணெய் இருப்பு... எண்ணெய் போக்குவரத்தில் நெருக்கடியைச் சந்தித்தன. எண்ணெய் விலையும் எகிறியது.

ஹார்முஸ் நீர்ச்சந்தி
ஹார்முஸ் நீர்ச்சந்தி

ஈரானுக்கு எளிது!

ஈரானின் எல்லை ஹார்முஸ் நீர்ச்சந்தி விரிந்திருப்பதால், ஈரானுக்கு இதை மூடிவிடுவது எளிதாக இருந்தது.

ஈரானின் தடையை மீறி ஹார்முஸ் நீர்ச்சந்தியைத் கடக்க முயன்ற கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியது ஈரான்.

தற்போது ஓமனுடன் சேர்ந்து ஹார்முஸ் நீர்ச்சந்தி போக்குவரத்திற்கு சுங்கக் கட்டணம் விதிக்க பிளான் போட்டு வருகிறது ஈரான்.

கப்பல்கள் மீதான தாக்குதலைத் தடுக்கவும், சுங்கக் கட்டண வரியைத் தடுக்கவும், ஈரானுக்கு நெருக்கடி கொடுக்கவும் ஹார்முஸ் நீர்ச்சந்தியில் அமெரிக்கப் படைகளை நிறுத்தியுள்ளோம்... நிறுத்துகிறோம் என்று கூறிவந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

ட்ரம்பின் யு-டர்ன்

இப்போது திடீரென்று யு-டர்ன் அடித்து, அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் ஹார்முஸ் வந்துவிட்டது என்றும், ஹார்முஸிற்கு ட்ரம்ப் நீர்ச்சந்தி என்று பெயர் வைக்கலாம் என்றும் கூறுகிறார்.

ஹார்முஸ் அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது என்று அவர் பல முறை கூறிவிட்டார். ஆனால், 'ட்ரம்ப் நீர்ச்சந்தி பெயர்' குறித்து தற்போதுதான் தனது ட்ரூத் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ட்ரம்ப்.

இது குறித்து அவருடைய பதிவு...

“இப்போது இது அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டதால், ‘ஹார்முஸ் நீர்ச்சந்தி’ என்ற பெயரை ‘ட்ரம்ப் நீர்ச்சந்தி’ என்று மாற்றிவிடலாமா? அமெரிக்காவைப் போலவே, இதுவும் இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக மாறிவிடும்!” என்று பதிவிட்டுள்ளார் ட்ரம்ப்.

ட்ரம்ப் பதிவு
ட்ரம்ப் பதிவு

ஈரான் ஹார்முஸ் நீர்ச்சந்தியை மூடி உலக நாடுகளுக்கு நெருக்கடியைக் கொடுத்து வருகிறது... ட்ரம்போ அந்த நீர்ச்சந்திக்குப் பெயரை மாற்றலாமா என்று கேட்கிறார்.

எது எப்படியோ... ஹார்முஸ் நீர்ச்சந்தியை ஈரானும் சரி... அமெரிக்காவும் சரி... ‘தங்களுக்கு’த்தான் என்று சொந்தம் கொண்டாட முடியாது.

காரணம், இது இயற்கையாகவே உருவான நீர்ச்சந்தி. இதனால், அது உலக நாடுகளின் பொதுச் சொத்து.

ஆக, ஹார்முஸ் நீர்ச்சந்தியை யாரும் சொந்தம் கொண்டாடுவதற்கு அல்ல.

தமிழ்நாட்டில் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு; ஆளுநரைச் சந்தித்த JCD பிரபாகர் - என்ன பேசினார்கள்?

தமிழ்நாட்டில் தவெக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து முடிந்துள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகருக்கு அரசியல் கட்சியினர் மற்றும் மக்களிடையே பாராட்டுகள் கிடைத்தன. இன்று சென்ன... மேலும் பார்க்க

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தனித்துக் களமிறங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள்! - யார் எங்கே?

வருகிற அக்டோபர் 6-ம் தேதி, தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில், இந்த இரு தொகுதிகளிலும் அதிமுக வென்றிருந்தது. மதுராந்தகத்தில் மரகதம... மேலும் பார்க்க

BRICS: "இன்று உலகளவில் பதற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன" - மோடி பேச்சு

டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டின் நிறைவு நாள் இன்று. மாநாட்டில் இன்று இந்தியப் பிரதமர் மோடி காலநிலை மாற்றம் குறித்து, “இந்திய நாகரிகத்தில், இயற்கை அன்னையாகப் போற்றப்படுகிறது. பல நூற்றாண்டுகளாகவே... மேலும் பார்க்க

"தீமைகள் எந்த ரூபத்தில் தமிழகத்திற்கு வந்தாலும் அது தீயசக்தி திமுகவால் மட்டுமே!” - நிர்மல் குமார்

மிசா சட்டத்தின் கீழ் கைதான திமுக தலைவர் ஸ்டாலினை அவதூறாக பேசியதாக, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மற்றும் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமாரை எதிர்த்துத் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போ... மேலும் பார்க்க

"நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்" - தவெகவிற்கு ஆ.ராசா எச்சரிக்கை

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் திமுகத் தலைவர் ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது குறித்துச் சர்ச்சையாகப் பேசியிருந்தார். விஜய்யின் இந்தப் பேச்சிற்கு எதிர்ப்புத் தெ... மேலும் பார்க்க

"பாஜக-வை எதிர்க்க பயப்படும் தவெக; பாராட்டியாவது கருத்து சொல்லலாம்!" - தோழர் பாலபாரதி கிண்டல்!

சட்டமன்றக் கூட்டத்தொடரில், காவல்துறை மானியக் கோரிக்கையின்போது முதல்வர் அளித்த ஆவேச உரை, அரசியல் அரங்கில் பலத்த சர்ச்சையையும் விமர்சனத்தையும் உருவாக்கியிருக்கிறது. இந்த நிலையில், த.வெ.க அரசுக்கு ஆதரவு ... மேலும் பார்க்க