செய்திகள் :

Doctor Vikatan: பீரியட்ஸ் வலியால் பள்ளி செல்ல மறுக்கும் மகள்... இப்போதே சிகிச்சைகள் அவசியமா?

post image

Doctor Vikatan: என் மகளுக்கு 14 வயதாகிறது. அவளுக்கு பீரியட்ஸ் நாள்களில் கடுமையான வலி இருப்பதாகச் சொல்கிறாள். ப்ளீடிங்கும் அதிகமாக இருப்பதால், இரண்டு நாள்களுக்கு பள்ளிக்கூடம் போகாமல் லீவு எடுத்துவிடுகிறாள்.

என் டீன் ஏஜிலும் இதே பிரச்னைதான் இருந்தது. இந்த வயதில் இப்படித்தான் இருக்கும், சரியாகிவிடும் என்றால் கேட்க மறுக்கிறாள். இந்த வயதிலேயே மருத்துவர், மருந்து, மாத்திரைகள், சிகிச்சை எல்லாம் தேவையா... இது தானாகச் சரியாகக்கூடியதுதானே?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ்.

மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ்
மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ்

பெண் குழந்தை பூப்பெய்தியதை அடுத்த ஒன்றிரண்டு வருடங்களுக்கு மட்டும் இந்த வலி இருக்காது. அந்த வயதில் பெண்ணின் இனப்பெருக்கச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் ஹைப்போதலாமிக்- பிட்யூட்டரி- ஓவேரியன் ஆக்சிஸ் (Hypothalamic-Pituitary-Ovarian Axis) என்பது முதிர்ச்சியடையாமல் இருக்கும்.

அதன் காரணமாக அவர்களுக்கு மாதவிலக்குச் சுழற்சியில் கருமுட்டைகள் வராது. அதனால் அவர்களுக்கு பீரியட்ஸின்போது வலியும் இருக்காது. மற்றபடி எல்லோருக்கும் பீரியட்ஸ் நாள்களில் லேசான வலி இருக்கும். இதை 'டிஸ்மெனோரியா' (Dysmenorrhea) என்று சொல்வோம். அந்த வலியை ஒவ்வொருவரும் எப்படிப் பொறுத்துக்கொள்கிறார்கள் என்பது நபருக்கு நபர் வேறுபடும். சிலர் அதைத் தாங்கிக் கொள்வார்கள். சிலரால் தாங்க முடியாது.

கர்ப்பப்பை, சினைக்குழாய் என எல்லா உறுப்புகளும் நன்றாக இருக்கும், ஆனாலும் பீரியட்ஸ் நாள்களில் வலி இருக்கும். இதை 'பிரைமரி டிஸ்மெனோரியா' (Primary dysmenorrhea) என்கிறோம். வேறு சிலருக்குக் கடுமையான வலி இருக்கும். அதற்காக நிறைய மாத்திரைகள் உபயோகிப்பார்கள். இப்படி அளவுக்கதிமாக மாத்திரைகள் எடுக்கும் அளவுக்கு வலியை உணர்பவர்கள், அதை அலட்சியம் செய்யக்கூடாது. மகப்பேறு மருத்துவரை அணுகி, வலிக்கான காரணத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். 

கர்ப்பப்பையின் லைனிங்கானது, கர்ப்பப்பையையும் தாண்டி சினைப்பை, சினைக்குழாய்கள், சிறுநீர்ப்பை, மலக்குடல் என உடலின் எந்தப் பகுதியிலும் படிவதை 'எண்டோமெட்ரியோசிஸ்' (Endometriosis) என்கிறோம். 20 முதல் 40 வயதுப் பெண்களை அதிகம் பாதிக்கும் பிரச்னை இது. 'அடலசன்ட் எண்டோமெட்ரியோசிஸ்' (adolescent endometriosis) என்ற பாதிப்பு இளம் வயதினரிடம் அதிகரித்து வருவதைப் பார்க்கிறோம். 

அதாவது 10 பேரில் ஒருவர் என்ற அளவில் 'அடலசன்ட் எண்டோமெட்ரியோசிஸ்' பிரச்னை பெண் குழந்தைகளைப் பாதிப்பதாகப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. எண்டோமெட்ரியோசிஸ் பாதித்த பெண்களால் பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்ல முடியாத அளவுக்கும், வீட்டு வேலைகளைச் செய்ய முடியாத அளவுக்கும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும்.

பீரியட்ஸ் வருவதற்கு ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்கு முன்பே கடுமையான வலி ஆரம்பிக்கும்.

இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளுக்கு பீரியட்ஸின்போது தாங்க முடியாத வலி இருக்கலாம். அதே போல ப்ளீடிங்கின் அளவும் அதிகமாக இருக்கலாம். பீரியட்ஸ் வருவதற்கு ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்கு முன்பே கடுமையான வலி ஆரம்பிக்கும். அதாவது, மாதவிடாயின் இரண்டாம், மூன்றாம் நாள் அனுபவிக்கிற வலியைவிட பல மடங்கு அதிகமான வலியை, பீரியட்ஸ் தொடங்கும் முன்பே அனுபவிப்பார்கள்.

இப்படி உங்கள் பெண் குழந்தை பீரியட்ஸ் வலியால் துடித்தாலோ, ப்ளீடிங் அதிகமாகப் போவதாகச் சொன்னாலோ, அம்மாக்கள் சொல்லும், 'எங்களுக்கெல்லாம்கூட அப்படித்தான் இருந்தது. போகப் போகச் சரியாயிடும்' என்ற சமாதானத்தைச் சொல்லாமல், பீரியட்ஸில் இதெல்லாம் சகஜம் என அலட்சியப்படுத்தாமல் மகளிர் மருத்துவரிடம் அழைத்துச் சொல்வது அவசியம். ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து சிகிச்சை அளித்தால், அது தீவிரமாகாமல் பார்த்துக்கொள்ளலாம்.

இது தவிர சினைப்பை கட்டி, இடுப்பெலும்பு பகுதி இன்ஃபெக்ஷன் போன்றவற்றாலும் பீரியட்ஸின்போது வலி இருக்கலாம். இதுபோன்ற வலி 'செகண்டரி டிஸ்மெனோரியா' (secondary amenorrhea) எனப்படும்.

பீரியட்ஸ் வலிக்கு ஒன்றோ, இரண்டோ மாத்திரைகள் போட்டு வலி குறைந்துவிட்டால் அது நார்மல். அதன் பிறகும் வலி தொடர்ந்தால் மாத்திரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தாமல், மருத்துவ ஆலோசனை பெறுவதுதான் சரியானது. எந்தவகையான வலி நிவாரண மாத்திரைகளையும் அளவு கடந்து உபயோகிப்பது சிறுநீரகச் செயலிழப்பு உள்ளிட்ட பல பிரச்னைகளுக்குக் காரணமாகலாம். எனவே, இந்த வயதில் இப்படித்தான் இருக்கும் என நீங்களாக முன் முடிவுக்கு வராமல், உங்கள் மகளை உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனைக்கு அழைத்துச் செல்லுங்கள்.

டாக்டர் மாலா ராஜ்:

சென்னை, அண்ணாநகரில் உள்ள Firm Hospitals-ன் நிறுவனர்.மகளிர் மருத்துவம் மற்றும் மகப்பேறியலில் 25 ஆண்டுக்கால அனுபவம் உள்ளவர். லேப்ராஸ்கோப்பி சிகிச்சையில் நிபுணர்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Doctor Vikatan: கனவுகள் இல்லாத நிம்மதியான உறக்கம்... உத்தரவாதம் தரும் 10 டிப்ஸ்!

Doctor Vikatan: எனக்கு தினமும் தூக்கத்தில் கனவுகள் தொல்லை கொடுக்கின்றன. நல்ல கனவுகளோ, கெட்ட கனவுகளோ... கனவுகள் இல்லாமல் ஆழ்ந்து தூங்கி பல மாதங்கள் ஆகின்றன. ஒருநாளாவது கனவுத்தொல்லை இல்லாமல் தூங்க ஆசையா... மேலும் பார்க்க

Doctor Vikatan: அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டால், ஹார்ட் அட்டாக் வரலாம் என்பது உண்மையா?

Doctor Vikatan: வாழ்க்கையில் உணர்ச்சி வசப்படுவது என்பது யாருக்குமே பெரும்பாலும் தவிர்க்க முடியாதது. சிலர் எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்படுவார்கள்.இப்படி அடிக்கடி உணர்ச்சிவசப்படுது இதயநலலைப் பாதிக்குமா... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஸ்ட்ரெஸ் அதிகமானால் மூக்கில் இருந்து ரத்தம் வருமா?

Doctor Vikatan:என் வயது 30, ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். வேலை அல்லது பிற விஷயங்களின் காரணமாக ஸ்ட்ரெஸ் அதிகமானால் எனக்கு மூக்கிலிருந்து ரத்தம் கசிய ஆரம்பிக்கிறது. இது எப்படிப்பட்ட பிரச்னை? ஏதேனு... மேலும் பார்க்க

Doctor Vikatan: 70 வயதில் ஒரு வேளை உணவு... இரவுக்கு வெறும் பழங்கள்... ஆரோக்கியம் பாதிக்குமா?

Doctor Vikatan:எங்கள் வீட்டில் சிறு வயதிலிருந்தே யாருக்கும் பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடும் பழக்கம் கிடையாது . Brunch தான்.… என்னுடைய எழுபது வயது சகோதரி மதியம் லன்ச் சாப்பிடுகிறார். இரவு வாழைப்பழம், ஆப்பிள்,... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஈரமான இடத்தில் நின்றாலே கால்களில் குடைச்சல்: வைட்டமின் குறைபாடா... நரம்பு பாதிப்பா?

Doctor Vikatan: எனக்கொரு விசித்திரமான பிரச்னை இருக்கிறது. தண்ணீரிலோ, ஈரப்பதமுள்ள இடத்திலோ நீண்ட நேரம் நின்றால், எனக்கு கால்களில் ஒருவித குடைச்சல் உணர்வு வருகிறது. இது வைட்டமின் பி12 குறைபாட்டின் அறிகு... மேலும் பார்க்க

Doctor Vikatan: நுரையீரல் பிரச்னைக்கு ஆங்கில மருந்து, மலச்சிக்கலுக்கு சித்த மருந்து எடுக்கலாமா?

Doctor Vikatan: நான்சுமார் ஆறு ஆண்டுகளாக சிஓபிடி (COPD) எனப்படும் நாள்பட்ட நுரையீரல் அழற்சி பிரச்னைக்காக மருந்துகள் (டாக்ஸோலின்,மான்டெக்-எல்சி உள்ளிட்டவை)எடுத்துக் கொண்டிருக்கிறேன்.அதனுடன் மலச்சிக்கலு... மேலும் பார்க்க