செய்திகள் :

Doctor Vikatan: அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டால், ஹார்ட் அட்டாக் வரலாம் என்பது உண்மையா?

post image

Doctor Vikatan: வாழ்க்கையில் உணர்ச்சி வசப்படுவது என்பது யாருக்குமே பெரும்பாலும் தவிர்க்க முடியாதது. சிலர் எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்படுவார்கள். இப்படி அடிக்கடி உணர்ச்சிவசப்படுது இதயநலலைப் பாதிக்குமா....  இதற்கும் மாரடைப்புக்கும் ஏதேனும் தொடர்புண்டா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்

மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்
மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்

இப்படிச் சொல்லப்படுவதை ஒரேயடியாகத் தவறான கருத்து என ஒதுக்க முடியாது. மாறாக, இதன் பின்னணியில் உள்ள உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. 

உணர்ச்சி வசப்பட்ட நிலையிலும், உடற்பயிற்சிகள் செய்யும்போதும், ஸ்ட்ரெஸ் அளவு கூடுதலாகத்தான் இருக்கும். ஸ்ட்ரெஸ்ஸை ஏற்படுத்தும் கார்ட்டிசால் ஹார்மோன் அதிகம் சுரக்கும். அந்த நிலையில் மாரடைப்புக்கான ரிஸ்க் ஓரளவு இருக்கும்.

இது ஏற்கெனவே இதயத்தில் பாதிப்புகள் உள்ளவர்களுக்குத்தான் பொருந்துமே தவிர, எல்லோருக்கும் அல்ல. வாழ்க்கையில் ஸ்ட்ரெஸ் இல்லாமல் இருப்பது சாத்தியமில்லை. உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதும் சரியல்ல. ஏற்கெனவே இதயத்தின் ரத்தக்குழாய்களில் கொழுப்பு படிந்திருப்பவர்களுக்கு, ஸ்ட்ரெஸ் ஆகும்போது அந்தக் குழாய்கள் வெடிக்க வாய்ப்பு உண்டு. 

இதயத்தின் ரத்தக்குழாய்களில் கொழுப்பு படிந்திருப்பவர்களுக்கு, ஸ்ட்ரெஸ் ஆகும்போது அந்தக் குழாய்கள் வெடிக்க வாய்ப்பு உண்டு.

எனவே, முடிந்தவரை ஸ்ட்ரெஸ் இல்லாமல் வாழ முயலலாம். மாரடைப்பு ரிஸ்க்கை அதிகரிக்கும் காரணிகளான புகை, மதுப் பழக்கங்களைத் தவிர்ப்பதும், அவ்வப்போது பரிசோதனைகள் செய்து பார்ப்பதும், நோய்க்கு முறையான சிகிச்சை எடுப்பதும் மிக முக்கியம்.

முறையான தூக்கத்தின் அவசியத்தை இந்தத் தலைமுறையினர் உணர்வதே இல்லை. நள்ளிரவு வரையிலோ, விடியும்வரையிலோ விழித்திருந்துவிட்டு, பிறகு ஏழெட்டு மணி நேரம் தூங்கினால் போதும் என நினைக்கிறார்கள். இது தவறு.  சரியான நேரத்துக்குச் சரியான அளவு தூங்க வேண்டியது அவசியம்.

இரவில் தாமதமாகத் தூங்குவது தவிர்க்கப்பட வேண்டும். வாழ்க்கை முறையை ஆரோக்கியமாக மாற்ற வேண்டியது மிகவும் அவசியம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 

Doctor Vikatan: ஸ்ட்ரெஸ் அதிகமானால் மூக்கில் இருந்து ரத்தம் வருமா?

Doctor Vikatan:என் வயது 30, ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். வேலை அல்லது பிற விஷயங்களின் காரணமாக ஸ்ட்ரெஸ் அதிகமானால் எனக்கு மூக்கிலிருந்து ரத்தம் கசிய ஆரம்பிக்கிறது. இது எப்படிப்பட்ட பிரச்னை? ஏதேனு... மேலும் பார்க்க

Doctor Vikatan: 70 வயதில் ஒரு வேளை உணவு... இரவுக்கு வெறும் பழங்கள்... ஆரோக்கியம் பாதிக்குமா?

Doctor Vikatan:எங்கள் வீட்டில் சிறு வயதிலிருந்தே யாருக்கும் பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடும் பழக்கம் கிடையாது . Brunch தான்.… என்னுடைய எழுபது வயது சகோதரி மதியம் லன்ச் சாப்பிடுகிறார். இரவு வாழைப்பழம், ஆப்பிள்,... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஈரமான இடத்தில் நின்றாலே கால்களில் குடைச்சல்: வைட்டமின் குறைபாடா... நரம்பு பாதிப்பா?

Doctor Vikatan: எனக்கொரு விசித்திரமான பிரச்னை இருக்கிறது. தண்ணீரிலோ, ஈரப்பதமுள்ள இடத்திலோ நீண்ட நேரம் நின்றால், எனக்கு கால்களில் ஒருவித குடைச்சல் உணர்வு வருகிறது. இது வைட்டமின் பி12 குறைபாட்டின் அறிகு... மேலும் பார்க்க

Doctor Vikatan: நுரையீரல் பிரச்னைக்கு ஆங்கில மருந்து, மலச்சிக்கலுக்கு சித்த மருந்து எடுக்கலாமா?

Doctor Vikatan: நான்சுமார் ஆறு ஆண்டுகளாக சிஓபிடி (COPD) எனப்படும் நாள்பட்ட நுரையீரல் அழற்சி பிரச்னைக்காக மருந்துகள் (டாக்ஸோலின்,மான்டெக்-எல்சி உள்ளிட்டவை)எடுத்துக் கொண்டிருக்கிறேன்.அதனுடன் மலச்சிக்கலு... மேலும் பார்க்க

தேசிய அளவில் அதிகரிக்கும் H1N1 காய்ச்சல் பாதிப்பு - சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பு!

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பருவகாலக் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இன்ஃப்ளுயன்ஸா ஏ (Influenza A) வைரஸின் H1N1 வகை தாக்கத்தின் மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, டெல்லியி... மேலும் பார்க்க

Doctor Vikatan: தாய்ப்பால் கொடுக்கும்போது கர்ப்பமானால் முதல் குழந்தைக்குத் தாய்ப்பாலைத் தொடரலாமா?

Doctor Vikatan:ஒரு பெண் தாய்ப்பால் கொடுக்கும்போதுகர்ப்பமான நிலையில்,தனதுமுதல் குழந்தைக்கு(ஒன்றரை வயது) தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கலாமா... அவருக்கு தாய்ப்பால் சுரப்பும் இருக்கிறது. அவர் தாய்ப்பால் கொட... மேலும் பார்க்க