செய்திகள் :

சர்தார் 2: ``எனக்கு இந்தப் படத்தில் டான்ஸ் இல்ல; ஆனா..." - நடிகை மாளவிகா மோகன்

post image

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்தி நடிப்பில், ‘சர்தார் 2’ திரைப்படம் உருவாகியிருக்கிறது.

இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது.

கார்த்தியுடன் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது.

 நடிகர் கார்த்தி
நடிகர் கார்த்தி

இந்தப் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு முன் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் கார்த்தி, ``சர்தார் முதல் பாகத்தின் கதையைப் பற்றி உங்களுக்கு ஏற்கனவே தெரியும். இந்த இரண்டாம் பாகம் அதைவிட மிக பிரமாண்டமான அளவில் உருவாகியுள்ளது. தற்போதைய காலகட்டத்திற்கு மிகவும் தேவையான ஒரு முக்கியமான கருப்பொருளை இந்தப் படம் பேசுகிறது" என்றார்.

அதைத் தொடர்ந்து பேசிய நடிகை மாளவிகா மோகன், ``சென்னைக்கு மீண்டும் வருவது எனக்கு எப்போதும் விருப்பமான ஒன்று. இது என்னுடைய இரண்டாவது வீடு போன்றது. இந்த ஊரும் மக்களும் எனக்கு எப்போதும் அளப்பரிய அன்பைக் கொடுத்துள்ளனர்.

உங்கள் அனைவருக்காகவும் இந்தத் திரைப்படத்தில் நாங்கள் அனைவரும் இணைந்து மிகக் கடுமையான உழைப்பைக் கொடுத்துள்ளோம்.

நடிகை மாளவிகா மோகன்
நடிகை மாளவிகா மோகன்

நீங்கள் அனைவரும் இதை நிச்சயம் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன். இந்தப் படத்தில் எனக்குத் டான்ஸ் எதுவும் இல்லை, ஆனால் மிகவும் சிறப்பான ஸ்டண்ட் காட்சிகள் இருக்கிறது. அதைச் செய்து நடித்தது எனக்குப் புதிய அனுபவமாகவும் மிகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. என்னுடைய கதாபாத்திரமும் மிகவும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்" என்றார்.

Sardar 2: ``துரந்தர் வேற சர்தார் வேற... இரண்டையும் ஒன்னு சேர்க்காதீங்க" - இயக்குநர் மித்ரன் பளீச்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்தி நடிப்பில், ‘சர்தார் 2’ திரைப்படம் உருவாகியிருக்கிறது. இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படம் ரசிகர... மேலும் பார்க்க

Radhima: "நூறு முறைக்கும் மேல் கேட்டுவிட்டேன்!" - சாய் அபயங்கரை பாராட்டிய இயக்குநர் அட்லீ

சாய் அபியங்கரின் 6-வது சுயாதீன பாடலான 'ரதிமா' பாடல் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. Radhima Songஇப்பாடலில் நடிகை பாக்கியஸ்ரீ போர்ஸே நடனமாடியிருக்கிறார். இப்பாடலைப் பாராட்டி இய... மேலும் பார்க்க

Once More: "என் Cousin ஃபகத் ஃபாசில்தான் என்னை அவரிடம் பரிந்துரைத்தார்"- இசையமைப்பாளர் ஹேஷாம் பேட்டி

அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர், சோனா ஒலிக்கல் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் 'ஒன்ஸ் மோர்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இப்படத்திற்கு 'ஹ்ருதயம்', 'குஷி', 'ஹாய் நானா' போன்ற படங்களுக்... மேலும் பார்க்க

Amala Shaji: "இப்போது அது நிஜமாகிறது" - சினிமாவில் அறிமுகமாகும் சமூக வலைத்தளப் பிரபலம் அமலா ஷாஜி

டிக்டாக், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் பிரபலமானவர் அமலா ஷாஜி. 4.2 மில்லியன் ஃபாலோயர்களைக் கொண்டிருக்கும் பிரபலமான இன்ஃப்ளூயன்சர் இவர். இப்போது அவர் சினிமாவிலும் அறிமுகமாகவிருக்கிறார். Amala Shajiஅறிமுக ... மேலும் பார்க்க

Immortal: “கயாடு எத்தனை படங்கள் நடித்தாலும் இந்தப் படம்தான் அவங்களோட BEST” - ஜி.வி. பிரகாஷ் குமார்

அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கியிருக்கும் படம் 'இம்மார்ட்டல்'. ஜி.வி.பிரகாஷ் குமார், கயாடு லோஹர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் 'இம்மார்ட்டல்... மேலும் பார்க்க

Sigma: "அதற்கு ஜேசன் சஞ்சய் அளித்த பதில் என்னை ஆச்சரியப்படுத்தியது!" - சந்தீப் கிஷன் பேட்டி

முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'சிக்மா' படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படம் பற்றி நம் ... மேலும் பார்க்க