செய்திகள் :

Radhima: "நூறு முறைக்கும் மேல் கேட்டுவிட்டேன்!" - சாய் அபயங்கரை பாராட்டிய இயக்குநர் அட்லீ

post image

சாய் அபியங்கரின் 6-வது சுயாதீன பாடலான 'ரதிமா' பாடல் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

Radhima Song
Radhima Song

இப்பாடலில் நடிகை பாக்கியஸ்ரீ போர்ஸே நடனமாடியிருக்கிறார். இப்பாடலைப் பாராட்டி இயக்குநர் அட்லீ, அவருடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில் அவர், "இந்த 'ரதிமா' பாடல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. பாடல் வெளியானதிலிருந்து இதுவரை நூறு முறைக்கும் மேல் கேட்டுவிட்டேன். ஒவ்வொரு முறை கேட்கும்போதும் பாடல் இன்னும் சிறப்பான அனுபவத்தைத் தருகிறது.

சாய், உன்னை நினைத்து மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. நீ இசையமைக்கும் விதமும், ஒவ்வொரு பாடலையும் நேர்த்தியாகக் கொண்டு சேர்க்கும் விதமும், உனது ஒவ்வொரு புதிய படைப்பிலும் உன்னையே நீ மிஞ்சி வெளிப்படுத்தும் திறமையும் உண்மையிலேயே மிகவும் சிறப்பானது. நடிகை பாக்கியஸ்ரீ மிகவும் அற்புதமாக நடனமாடியிருக்கிறார்.

நான் சாய் அபியங்கரின் தீவிர ரசிகன். உன்னுடைய அடுத்த பாடலுக்காக மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன். தொடர்ந்து மேன்மேலும் உயரப் பறக்க வாழ்த்துகள்! இப்பாடலின் கொரியோகிராஃபி பிரமாதமாக உள்ளது.

ஒளிப்பதிவாளர் மற்றும் இசை வீடியோ இயக்கியவர் இருவரும் சேர்ந்து காட்சிகளாகக் கதையை நகர்த்திச் சென்ற விதம் மிக அருமை. இவ்வளவு அற்புதமாக வீடியோவை உருவாக்கியதற்காக அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

எனக்கு மிகவும் பிடித்த பாடலாசிரியர் விவேக்கின் வரிகள் சிறப்பாக அமைந்துள்ளன. அனைவருக்கும் வாழ்த்துகள்!" எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.

Once More: "என் Cousin ஃபகத் ஃபாசில்தான் என்னை அவரிடம் பரிந்துரைத்தார்"- இசையமைப்பாளர் ஹேஷாம் பேட்டி

அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர், சோனா ஒலிக்கல் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் 'ஒன்ஸ் மோர்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இப்படத்திற்கு 'ஹ்ருதயம்', 'குஷி', 'ஹாய் நானா' போன்ற படங்களுக்... மேலும் பார்க்க

Amala Shaji: "இப்போது அது நிஜமாகிறது" - சினிமாவில் அறிமுகமாகும் சமூக வலைத்தளப் பிரபலம் அமலா ஷாஜி

டிக்டாக், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் பிரபலமானவர் அமலா ஷாஜி. 4.2 மில்லியன் ஃபாலோயர்களைக் கொண்டிருக்கும் பிரபலமான இன்ஃப்ளூயன்சர் இவர். இப்போது அவர் சினிமாவிலும் அறிமுகமாகவிருக்கிறார். Amala Shajiஅறிமுக ... மேலும் பார்க்க

Immortal: “கயாடு எத்தனை படங்கள் நடித்தாலும் இந்தப் படம்தான் அவங்களோட BEST” - ஜி.வி. பிரகாஷ் குமார்

அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கியிருக்கும் படம் 'இம்மார்ட்டல்'. ஜி.வி.பிரகாஷ் குமார், கயாடு லோஹர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் 'இம்மார்ட்டல்... மேலும் பார்க்க

Sigma: "அதற்கு ஜேசன் சஞ்சய் அளித்த பதில் என்னை ஆச்சரியப்படுத்தியது!" - சந்தீப் கிஷன் பேட்டி

முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'சிக்மா' படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படம் பற்றி நம் ... மேலும் பார்க்க

Jailer 2: "முதல் ஷாட் முடிந்ததுமே ரஜினி சார் என்னிடம் சொன்ன விஷயம்!" - நடிகை பூர்ணா

நடிகை பூர்ணா சமீபத்தில் வெளிவந்த 'ஜெயிலர் 2' படத்தின் பாடலில் நடனமாடியிருந்தார். JAILER 2ரஜினிகாந்தின் இத்திரைப்படம் அக்டோபர் 15-ஆம் தேதி ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. இந்தப் பாடலில் நடனமாடியிருப்பது... மேலும் பார்க்க

'சங்கமம்' படத்தில ஜூனியர் ஆர்ட்டிஸ்டா இருந்த ஒருத்தர் இன்னைக்கு.!'- சூரி குறித்து ஆர்.ஜே.பாலாஜி

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், 'மண்டாடி' படத்தில் நடித்திருக்கிறார் நடிகர் சூரி. ஆர்.எஸ். இன்ஃபோடெய்ன்மென்ட் இப்படத்தைத் தயாரித்திருக்கிறது. இப்படத்தில் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக வெற்றிமாறன் பணியாற்... மேலும் பார்க்க