செய்திகள் :

"19-ம் நூற்றாண்டின் பிற்போக்குத்தனமான கருத்து" - முஸ்லிம் மதகுரு பேச்சுக்கு கேரள முதல்வர் எதிர்ப்பு

post image

தங்க நகைகள் பெட்டிக்குள் இருப்பதுபோன்று பெண்களும் வீட்டுக்குள் இருக்க வேண்டும், பெண்கள் பொதுவெளியில் நடந்தால் நாசம் ஏற்படும். பெண்கள் வீட்டில் அடங்கி ஒடுங்கி வாழ வேண்டும் என முஸ்லிம் மதகுருவும், சமஸ்த அமைப்பின் தலைவருமான கேரளத்தைச் சேர்ந்த காந்தபுரம் ஏ.பி.அபுபக்கர் முஸ்லியார் சில நாட்களுக்கு முன் கருத்து தெரிவித்திருந்தார்.

இது விவாதம் ஆனநிலையில் நேற்று அமைச்சரவை கூட்டத்துக்குப்பின் செய்தியாளர்களைச் சந்தித்த கேரள முதல்வர் வி.டி.சதீசனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்து முதல்வர் வி.டி.சதீசன் கூறுகையில், "பொது இடங்களில் பெண்கள் நடமாடுவது தொடர்பாக காந்தபுரம் ஏ.பி. அபுபக்கர் முஸ்லியார் கூறியுள்ள கருத்து, முற்போக்கு சிந்தனை கொண்ட கேரளாவுக்கு எந்த வகையிலும் பொருத்தமானதல்ல.

19-ம் நூற்றாண்டில் பேசப்பட வேண்டிய ஒரு பிற்போக்குத்தனமான கருத்தை அவர் இந்த 21-ம் நூற்றாண்டில் பேசிக் கொண்டிருக்கிறார். எங்கள் அரசுக்கோ, எங்கள் கட்சிக்கோ இந்த நிலைப்பாட்டில் துளியளவும் உடன்பாடில்லை.

அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். பெண்கள் பொதுவாழ்வின் அனைத்து தளங்களிலும் சம உரிமையோடு பங்கேற்று முன்னேற வேண்டும் என்பதே எங்கள் அரசின் உறுதியான நிலைப்பாடு.

காந்தபுரம் ஏ.பி.அபுபக்கர் முசலியார்
காந்தபுரம் ஏ.பி.அபுபக்கர் முசலியார்

இஸ்லாமிய வரலாற்றைப் புரட்டிப் பார்த்தாலே இது மிகத் தெளிவாகப் புரியும். நபிகள் நாயகத்தின் முதல் மனைவி கதீஜா ஒரு மாபெரும் வணிகராகத் திகழ்ந்தவர். அவரது மற்றொரு மனைவியான ஆயிஷா 'ஜமல்' போரில் படைகளை வழிநடத்திய தலைமைத் தளபதியாக நின்றவர்.

இஸ்லாமிய வரலாற்றில் போற்றப்படும் பில்கீஸ் நாடாண்ட ஒரு அரசி. நீதியாளரான கலீஃபா உமரின் அரசவையில் பெண்களுக்கு வழங்கப்படும் மஹர் தொகையைக் குறைக்க முடிவெடுத்தபோது, அதை நேருக்கு நேர் நின்று கேள்வி எழுப்பியது ஒரு பெண்தான்; கலீஃபா உமரும் அந்தப் பெண்ணின் நியாயத்தை ஏற்றுக்கொண்டு தன் முடிவை மாற்றிக்கொண்டார். அப்போதைய அரசவையிலேயே பெண்கள் அமர்ந்து உரிமை பேசினார்கள் என்பதையே இந்த வரலாறு நமக்கு உணர்த்துகிறது.

கேரள முதல்வர் வி.டி.சதீசன்
கேரள முதல்வர் வி.டி.சதீசன்

உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் மெஸ்ஸியை கேரளாவிற்கு அழைத்து வருவதாகக் கூறி நடத்தப்பட்ட மோசடி புகார் குறித்து விளையாட்டுத்துறை தீவிரமாக ஆய்வு செய்து விரிவான அறிக்கையைத் தயாரித்துள்ளது. அந்த அறிக்கை உள்துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது.

இதன்மீது முறையான விசாரணை நடத்துவது குறித்து உள்துறை மிக விரைவில் முடிவெடுக்கும். பாலக்காடு ரயில்வே கோட்டப் பிரிப்பு விவகாரத்தில் கேரளாவின் கடுமையான எதிர்ப்பை மத்திய ரயில்வே அமைச்சரிடம் நாங்கள் முறைப்படி பதிவு செய்துள்ளோம்.

இந்த விவகாரம் தொடர்பாக பிரதமரையும் ரயில்வே அமைச்சரையும் நேரில் சந்தித்துப் பேசி மாநிலத்தின் உரிமையை நிலைநாட்டுவோம்" என்றார்.

மணல் கடத்தலில் ரூ.1000 கோடி ஊழல்? - மராத்தா இட ஒதுக்கீடு போராட்டக்காரர் மனோஜ் ஜராங்கே மீது புகார்

மகாராஷ்டிராவில் மராத்தா இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தி வருபவர் மனோஜ் ஜராங்கே பாட்டீல். ஏற்கனவே பல முறை இதற்காக உண்ணாவிரதம் இருந்துள்ளார். தற்போது மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தற்போது மனோ... மேலும் பார்க்க

"தியாகி இமானுவேல் சேகரன், சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக தன் உயிரைத் தந்தவர்" - குடியரசு துணைத்தலைவர்

"தியாகி இமானுவேல் சேகரனைப் போன்ற தேசிய உள்ளம் கொண்ட மகத்தான மனிதர்களைப் போற்றுவது இந்தத் தேசத்திற்கே பெருமை" என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.இமானுவேல் சேகரன் நினைவிடம்வி... மேலும் பார்க்க

“சுயநலத்தை மறுத்து நாட்டின் நலனைப் பார்த்தால் தடை?” - BRICS-ல் ட்ரம்ப் மீது புதின் மறைமுகத் தாக்கு!

டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டிற்காக இந்தியாவிற்கு வந்திருக்கிறார் ரஷ்ய அதிபர் புதின். இந்தியப் பிரதமர் மோடி உடனான தனிப்பட்ட சந்திப்பிற்குப் பிறகு, பிரிக்ஸ் வணிக மன்றத்தின் தலைவர்கள் அமர்வில் ப... மேலும் பார்க்க

மேற்கு வங்கம் அசைவ உணவு சர்ச்சை: கோயிலில் மீன் வறுவல் சாப்பிட்ட முதல்வர்; என்ன சொல்கிறது பாஜக?

நாட்டின் பிற பகுதிகளில், கோவிலில் அசைவ உணவு உண்பது அனுமதிக்கப்படாத ஒன்றாக இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் சில கோயில்களில் அசைவ உணவு போடப்படுகிறது. கோயில்களில் அசைவ உணவுக்கு இருக்கும் நடைமுறையை மாற்றும் ... மேலும் பார்க்க

BRICS: "ஒரு நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பும், பிராந்தியப் பாதுகாப்பும் தனித்தனியல்ல" - ஈரான் அதிபர்

டெல்லியில் பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ளப் பல்வேறு உலகத் தலைவர்கள் இந்தியாவிற்கு வந்திருக்கிறார்கள். அதில் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானும் ஒருவர். இன்று மாநாட்... மேலும் பார்க்க

"பிரிக்ஸ் தொழில்முறைக் கவுன்சிலிடம் எனக்கு 'மூன்று' வேண்டுகோள்கள்!" - BRICS மாநாட்டில் மோடி பேச்சு

தற்போது டெல்லியில் பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு உலகத் தலைவர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். இந்த ஆண்டு பிரிக்ஸ் தலைமை சுழற்சி முறையில் இந்தியாவிற்கு வந்துள்ளதால், இந... மேலும் பார்க்க