செய்திகள் :

'24 காரட் தங்க பிளேட், 3.8 லட்சம் அமெரிக்க வைரங்கள்' - பக்தர்களைக் கவரும் ஐதராபாத் விநாயகர்

post image

விநாயகர் சதுர்த்தி விழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாகத் தொடங்கியது. இதையடுத்து மும்பை, பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களில் விநாயகர் சிலைகளைப் பிரதிஷ்டை செய்து பக்தர்கள் தினமும் பூஜை செய்து வருகின்றனர்.

மும்பையில் மதங்களுக்கு அப்பாற்பட்டு அனைவராலும் இந்த விநாயகர் சதுர்த்தி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஐதராபாத்தில் உள்ள பேகம் பஜாரில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலை அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அங்குள்ள லிச்சி பேர்ல் செட் ஜூவல்ஸ் என்ற நகைக்கடையில்தான் இந்த விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

கடையின் மூன்றாவது ஆண்டை முன்னிட்டு இந்த விநாயகர் சிலை பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. சிலை 383,800 அமெரிக்க வைரங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதோடு 24 காரட் தங்க முலாம் பூசப்பட்ட பிளேட் மூலம் விநாயகர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

ஐதராபாத் விநாயகர்
ஐதராபாத் விநாயகர்

இது குறித்து லிச்சி பேர்ல் செட் ஜூவல்ஸ் அமைப்பாளர் அதர் அகர்வால் கூறுகையில், இந்த ஆண்டு விநாயர் விழாவுக்காக இந்தச் சிலை பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டது. இந்த நகைக்கடை மூன்றாவது ஆண்டைக் கொண்டாடுகிறது. எனவே 24 காரட் தங்க முலாம் பூசப்பட்ட விநாயகர் சிலையை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக விநாயகர் சிலைகளை நிறுவி வருகிறோம். இந்த ஆண்டு விசேஷமாக ஏதாவது செய்ய விரும்பினோம். எனவே விநாயகப் பெருமானின் ஆசீர்வாதத்துடன், இந்த அழகான சிலையை நாங்கள் நிறுவினோம். இந்தச் சிலை பித்தளையால் ஆனது. இதற்காக ஐந்து வெவ்வேறு உலோகங்களைப் பயன்படுத்தியுள்ளோம்.

சிலை முழுக்க முழுக்க 3,83,800 அமெரிக்க வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளது. இவைதாம் எங்கள் பேஷன் நகைகளில் பயன்படுத்தப்படும். அதனால் சிலைக்கு ஒரு நகை டச் கொடுக்க நினைத்தோம். எங்கள் பேஷன் நகைகளில் எந்த மூலப்பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதோ, அதே மூலப்பொருட்களை சிலைக்குப் பயன்படுத்தியுள்ளோம்'' என்றார்.

மேலும், இந்தச் சிலையானது சிக்கலான முறையில் வடிவமைக்கப்பட்டு, ஒவ்வொரு கல்லும் கையால் பொருத்தப்பட்டதாகவும், எட்டு தொழிலாளர்கள் எட்டு மாதங்களாக இரவு பகலாக உழைத்ததாகவும் அவர் கூறினார். சிலை லால்பாக் கா ராஜா கணபதியைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

மும்பையில் பலத்த மழைக்கு இடையே தொடங்கிய விநாயகர் சதுர்த்தி விழா; பாதுகாப்பில் 16,000 போலீஸார்

மும்பையில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா 10 முதல் 12 நாட்கள் நடப்பது வழக்கம். இந்த விழாவைக் காண வெளிநாட்டுப் பக்தர்கள் உட்பட சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் மும்பைக்கு வருவது வழக்கம். இந்த ஆண... மேலும் பார்க்க

மதுரை: அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்; வேகவதி தீர்த்தத்தில் தீர்த்த சங்கிரஹணம் | Photo Album

வேகவதி தீர்த்தத்தில்வேகவதி தீர்த்தத்தில்வேகவதி தீர்த்தத்தில்வேகவதி தீர்த்தத்தில்வேகவதி தீர்த்தத்தில்வேகவதி தீர்த்தத்தில்வேகவதி தீர்த்தத்தில்வேகவதி தீர்த்தத்தில்வேகவதி தீர்த்தத்தில்வேகவதி தீர்த்தத்தில்... மேலும் பார்க்க

மதுரை: வேத மந்திரங்கள் முழங்க... கும்பாபிஷேகத்துக்குத் தயாராகும் மீனாட்சி அம்மன் கோவில் |Photo Album

கும்பாபிஷேகத்துக்கு தயாராகும் கும்பாபிஷேகத்துக்கு தயாராகும் கும்பாபிஷேகத்துக்கு தயாராகும் கும்பாபிஷேகத்துக்கு தயாராகும் கும்பாபிஷேகத்துக்கு தயாராகும் கும்பாபிஷேகத்துக்கு தயாராகும் கும்பாபிஷேகத்துக்கு ... மேலும் பார்க்க

நெல்லை: குலவணிகர்புரம் கிருஷ்ண ஜெயந்தி விழா! ராதை - கிருஷ்ணா அலங்காரம்! வழுக்கு மரம் ஏறிய இளைஞர்கள்!

நெல்லை: குலவணிகர்புரம் கிருஷ்ண ஜெயந்தி விழா! ராதை-கிருஷ்ணா அலங்காரம்!வழுக்கு மரம் ஏறிய இளைஞர்கள்! மேலும் பார்க்க

நாளை ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி... கொண்டாடுவது எப்படி? - ஒரு வழிகாட்டல்!

ஆவணி மாத சிறப்புகளில் ஒன்று ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி. பாரததேசமெங்கும் இருக்கும் சனாதனிகளால் தவறாமல் கொண்டாடப்படும் பண்டிகை இது எனலாம். கிருஷ்ண ஜயந்தி கொண்டாடினால் வீட்டில் மங்கலங்கள் தொடரும். மகிழ்ச்சி பொங... மேலும் பார்க்க

மதுரை: மீனாட்சி சுந்தரேசுவரர் ஆவணித் திருவிழா; சப்தாவர்ண சப்பரம் | Photo Album

ஆவணித் திருவிழா 11ம் திருநாள்ஆவணித் திருவிழா 11ம் திருநாள்ஆவணித் திருவிழா 11ம் திருநாள்ஆவணித் திருவிழா 11ம் திருநாள்ஆவணித் திருவிழா 11ம் திருநாள்ஆவணித் திருவிழா 11ம் திருநாள்ஆவணித் திருவிழா 11ம் திருந... மேலும் பார்க்க