செய்திகள் :

"30 நாள்களுக்கு மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் IPO-க்களை வாங்கக்கூடாது; ஏன்?" - சமீர் அரோரா யோசனை

post image

இந்தியாவில் தொடர்ந்து IPO-கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. மக்களும் IPO-க்களை வாங்க மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர்.

IPO-க்கள் குறித்து CNBC-TV18 செய்தி நிறுவனத்திற்கு சமீர் அரோரா பேட்டி ஒன்றைக் கொடுத்துள்ளார். இவர் மும்பையைச் சேர்ந்த Helios Capital என்கிற முதலீட்டு நிறுவனத்தின் நிறுவனர் ஆவார்.

CNBC-TV18 பேட்டியில் சமீர் அரோரா பேசியுள்ளதாவது, “இனி இந்தியப் பங்குச்சந்தை எதிர்கொள்ளும் முக்கிய சவால் அந்நிய முதலீட்டாளர்களின் விற்பனை மட்டுமல்ல.

சமீர் அரோரா
சமீர் அரோரா

IPOக்கள், தொகுப்புப் பங்குகள் விற்பனை (Block Deals) மற்றும் தகுதிவாய்ந்த நிறுவனங்களின் பங்கு ஒதுக்கீடு (QIP) ஆகியவையும்தான்.

தற்போது சந்தைக்குள் நுழையும் நிறுவனங்களின் தரம் சற்று குறைந்துள்ளது. சந்தை சாதகமாக இருப்பதால், சில இடைத்தரகர்கள் தரம் குறைந்த பங்குகளைச் சந்தைக்குள் கொண்டுவருகின்றனர்.

பலவீனமான தொழிலைக் கொண்ட நிறுவனங்கள் கூடச் சந்தையின் போக்கைப் பயன்படுத்திப் பட்டியலிட முயல்கின்றன.

ஆனால், இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், நிறுவனம் பலவீனமாக இருந்தாலும், தற்போதைய சந்தை உற்சாகத்தின் காரணமாகத் தரம் குறைந்த பங்குகள் முழுமையாக விற்றுத் தீர்கின்றன.

இதனால், இரண்டாம் நிலைச் சந்தையின் நிலைத்தன்மையைப் பாதுகாக்க, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ஒரு ஒருங்கிணைந்த கட்டமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும்.

AMFI போன்ற ஒரு தொழில் துறை அமைப்பின் கீழ், அனைத்து IPO, QIP மற்றும் தொகுப்புப் பங்கு ஒதுக்கீடுகளை வாங்குவதை தற்காலிகமாக 30 நாள்கள் நிறுத்தி வைக்கலாம்.

இந்த நேரத்தில், நிறுவன முதலீட்டாளர்கள் புதிய பங்குகளை வாங்காமல், இரண்டாம் நிலைச் சந்தையின் செயல்பாட்டை மதிப்பிடுவார்கள். இதன் பிறகு, புதிய பங்குகள் வாங்குவது குறித்து முடிவு செய்வார்கள்.

இதன் மூலம், சந்தையின் உண்மையான நிலவரத்தைத் தெரிந்துகொள்ளலாம்.

சரியான விலையைக் கொண்டதாக சந்தையை மாற்ற, தரம் குறைந்த சில பங்குகள் தோல்வியடைவது அவசியமான ஒன்றாகும்” என்று கூறியுள்ளார்.

Stock Market: வேகமாக விலை உயரும் Copper; கண்முன்னே காத்திருக்கும் ஆபத்தா?

உலோகம் என்றதுமே மனதில் முதலில் வருவது தங்கம், அடுத்தது வெள்ளி. இந்த இரண்டையும் காலம் காலமாகப் பயன்படுத்தி வருவதால், இந்த இரண்டிற்கும் நமக்கும் கனெக்ஷன் அதிகம். ஆனால், இப்போது இவை இரண்டையும் பின்னுக்கு... மேலும் பார்க்க

IPO-வில் லாபம் உறுதியா? முதலீட்டாளர்களுக்கு Zerodha நிதின் காமத்தின் Warning!

தற்போது IPO-க்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. மக்களும் IPO-க்களை விரும்புகிறார்கள்.ஆனால், IPO-க்கள் பற்றிய உண்மையை இரண்டு புகைப்படங்கள் மூலம் தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கியுள்ளார் ஜீரோதாவின் இணை நிற... மேலும் பார்க்க

Share Market: இனி இந்தியாவில் பண்டிகை சீசன்தான்; 'இந்த' 7 துறைகள் லாபம் கொடுக்கலாம்?

நாளை முதல் செப்டம்பர் மாதம் தொடங்குகிறது. இனி பிப்ரவரி மாதம் வரை, இந்தியாவில் தொடர்ந்து பண்டிகை சீசன்தான்.இதை முன்னிட்டு, தற்போது பங்குச்சந்தையில் எந்தெந்தத் துறைகளில் ஃபோக்கஸ் செய்யலாம் என்பதை விளக்க... மேலும் பார்க்க

பாடம் படிக்கலாம், பணம் பண்ணலாம்! - சென்னையில் பங்குச் சந்தை பயிற்சி!

பாடம் படிக்கலாம், பணம் பண்ணலாம்! - சென்னையில் பங்குச் சந்தை பயிற்சி! மேலும் பார்க்க

சர்க்கரை பங்குகள் நல்ல ஏற்றம்: ஆனால், இப்போ வாங்காதீங்க; இந்தப் பங்குகள் வாங்க கரெக்ட் டைம் எது?

இரண்டு நாள்களாக, ‘சர்க்கரை’ குறித்த பேச்சுகள் எல்லாப் பக்கமும் அடிபடுகிறது.ஈரான் போர், காலநிலை மாற்றம் போன்ற காரணங்களால் சர்க்கரை உற்பத்தி மற்றும் சப்ளையில் இந்த ஆண்டு கடும் அடி. இதனால், வருகிற அக்டோப... மேலும் பார்க்க