செய்திகள் :

'5 மாதங்களாக தமிழ்நாட்டின் GST வசூல் இறங்கு முகம்' - நிபுணர் கூறும் பொருளாதாரக் காரணம் என்ன?

post image

கடந்த மே மாதத்தில் இருந்து தமிழ்நாட்டில் ஜி.எஸ்.டி வசூல் மைனஸில் சென்றுகொண்டிருக்கிறது.

ஏன் இந்தத் திடீர் மைனஸ் என்கிற கேள்வி எழுவது நியாயமானதே. இந்த வசூல் குறைவிற்கு ஆட்சி மாற்றம் போன்ற அரசியல் காரணங்களும் கூறப்படுகிறது.

ஆனால், இந்தச் சரிவிற்குப் பொருளாதார ரீதியிலான கோணத்தைத் தெரிந்துகொள்வதும் முக்கியம்.

தமிழ்நாட்டில் தற்போது ஏன் ஜி.எஸ்.டி வசூல் குறைந்துள்ளது என்பதை பொருளாதாரக் கோணத்தில் விளக்குகிறார் பொருளாதார நிபுணர் சிவகுமார்.

''> ஜி.எஸ்.டி என்பது நுகர்வு சார்ந்த ஒரு வரி ஆகும். தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் உற்பத்தி மையங்களாக இருக்கின்றன.

உதாரணத்திற்கு தமிழ்நாட்டில் ஆட்டோமொபைல் உதிர்பாகங்கள், ஜவுளி, எலக்ட்ரானிக்ஸ் போன்ற பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை பிற மாநிலங்களுக்குச் சென்று நுகர்வுப் பொருள்களாக மாறுகின்றன.

பொருளாதார நிபுணர் சிவகுமார்
பொருளாதார நிபுணர் சிவகுமார்

இவை நுகர்வுப் பொருளாக மாறும் மாநிலங்களில், இதற்கான ஜி.எஸ்.டி வசூல் செய்யப்படும். ஆனால், அந்த ஜி.எஸ்.டி வசூல் தமிழ்நாட்டில் இருக்காது.

> திருப்பூர், ஈரோடு, சென்னை, ஆம்பூர், ஓசூர், ஶ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட தமிழ்நாடு மாவட்டங்கள் இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதி மையங்களாகும்.

இங்கிருக்கும் ஏற்றுமதியாளர்கள் தாங்கள் வாங்கும் உள்ளீட்டுப் பொருள்களுக்குச் செலுத்திய ஜி.எஸ்.டி தொகையை 'ரீஃபண்ட்' பெற்றுவிடுகின்றனர்.

> ஏற்கெனவே கூறியதுபோல, தமிழ்நாட்டில் பல மாவட்டங்கள் இந்தியாவின் ஏற்றுமதியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

மத்திய அரசு வெளியிடும் ஜி.எஸ்.டி வரி வசூல் அறிக்கை... உதாரணத்திற்கு 2026-ம் ஆண்டு செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி வசூல் எப்படி இருந்தது... 2025-ம் ஆண்டு அதே மாதம் ஜி.எஸ்.டி வசூல் எப்படி இருந்தது என்பதுபோல இருக்கும்.

கடந்த ஆண்டிற்கு, இந்த ஆண்டிற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.

இடைப்பட்ட காலத்தில், அமெரிக்காவின் பரஸ்பர வரி அமலுக்கு வந்துவிட்டது... ஈரான் போர் போல சர்வதேச சூழல்கள் பலவாறாக மாறியிருக்கிறது.

மே - ஜி.எஸ்.டி வசூல் அறிக்கை
மே - ஜி.எஸ்.டி வசூல் அறிக்கை
ஜூன் - ஜி.எஸ்.டி வசூல் அறிக்கை
ஜூன் - ஜி.எஸ்.டி வசூல் அறிக்கை
ஜூலை - ஜி.எஸ்.டி வசூல் அறிக்கை
ஜூலை - ஜி.எஸ்.டி வசூல் அறிக்கை
ஆகஸ்ட் - ஜி.எஸ்.டி வசூல் அறிக்கை
ஆகஸ்ட் - ஜி.எஸ்.டி வசூல் அறிக்கை
செப்டம்பர் - ஜி.எஸ்.டி வசூல் அறிக்கை
செப்டம்பர் - ஜி.எஸ்.டி வசூல் அறிக்கை

இதனால், கடந்த ஆண்டின் அந்த மாதத்தை ஒப்பிடும் போது, அமெரிக்காவின் வரி போன்ற காரணங்களால், ஜி.எஸ்.டி வரி வசூல் இறங்குமுகத்தில் இருப்பதை இயல்பானதாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

2025-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்தியாவில் ஜி.எஸ்.டி 2.0 அமலுக்கு வந்தது. இது பல பொருள்களின் ஜி.எஸ்.டி வரி மாற்றப்பட்டது.

இருசக்கர வாகனங்கள், ஆட்டோ பாகங்கள், சிமெண்ட், ஜவுளிப் போன்றவற்றின் ஜி.எஸ்.டி வரி 28 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக மாற்றப்பட்டது.

இவை தமிழ்நாட்டின் மிக முக்கிய உற்பத்திகள். இதன் வரிகள் குறையும்போது, ஜி.எஸ்.டி வசூல் பாதிக்கப்படுகிறது.

> இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான 'ஐ.ஜி.எஸ்.டி' (IGST) சுங்கத் துறையால் வசூலிக்கப்பட்டு தேசிய அளவிலான மொத்தக் கணக்கில் சேர்க்கப்படுகிறது.

தங்கம், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கச்சா எண்ணெய் போன்ற பொருட்கள் அதிகளவில் இறக்குமதி செய்யப்பட்டாலும், அதன் வரி வருவாய் நேரடியாக மாநிலங்களின் மாதாந்திர தனிப்பட்ட கணக்கில் உடனடியாகக் காட்டப்படுவதில்லை.

> தமிழ்நாடு ஜி.எஸ்.டி வசூலில் மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக நாட்டின் முன்னணி இடத்தில் இருந்து வருகிறது.

ஜி.எஸ்.டி
ஜி.எஸ்.டி

ஏற்கனவே மிகப்பெரிய அளவில் வரி வசூல் கொண்டிருக்கும் ஒரு மாநிலம், சதவிகித அடிப்படையில் பார்க்கும் போது குறைந்த வளர்ச்சியையே காட்டும்.

இது வருவாய் வீழ்ச்சி அல்ல... மாறாக வளர்ச்சியின் வேகம் சற்று சீராக உள்ளது என்பதையே உணர்த்துகிறது.

> நாட்டின் முன்னணி சேவைத் துறை நிறுவனங்கள் (வங்கி, காப்பீடு, தொலைத்தொடர்பு, மின்-வணிக நிறுவனங்களான அமேசான்) தங்களது முதன்மைப் பதிவை மகாராஷ்டிரா, டெல்லி, ஹரியானா போன்ற மாநிலங்களிலேயே வைத்துள்ளன.

அவற்றின் வர்த்தகம் மற்றும் நுகர்வு இங்கே நடந்தாலும், கார்ப்பரேட் தலைமையகப் பதிவுகளின் அடிப்படையில் வரித் தொகை அம்மாநிலக் கணக்குகளிலேயே சேர்கிறது.

> ஒரு மாநிலத்தின் உண்மையான ஜி.எஸ்.டி வருவாய் என்பது 'சொந்த எஸ்.ஜி.எஸ்.டி' (SGST) மற்றும் மத்திய அரசு பகிர்ந்தளிக்கும் 'ஐ.ஜி.எஸ்.டி செட்டில்மென்ட்' ஆகிய இரண்டும் சேர்ந்ததாகும்.

மாதாந்திரக் கணக்கீடுகளுக்கும், மத்திய அரசு பணத்தை விடுவிக்கும் கால இடைவெளிக்கும் இடையே உள்ள காலதாமதத்தால் தற்காலிகமாக வளர்ச்சி விகிதம் குறைவாகத் தோன்றலாம்'' என்றார்.

மேடையில் வெடித்த கலகம்; அமைச்சர், தவெக MLA கோஷ்டி பூசல்! - இடையில் மாட்டி தவித்த காங்கிரஸ் எம்.பி

திருச்சி ஜங்ஷன் பகுதியில் உள்ள கலையரங்கத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் சார்பாக கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா இன்று நடைபெற்றது.... மேலும் பார்க்க

தூத்துக்குடி: `இது அங்கன்வாடிக்கு அனுப்பப்படும் முட்டைதானே?' - இலவச முட்டைகள் வெளியில் விற்பனையா?

தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 215 அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் இயங்கி வருகிறது. 1,397 ஊராட்சி ஒன்றிய மற்றும் அரசு தொடக்கப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. அதே... மேலும் பார்க்க

"முதல்வர் விஜய்க்கு நீங்க கொடுக்கப்போற அடி மரண அடியாக இருக்கணும்!" - தாராபுரத்தில் மு.க.ஸ்டாலின்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதனையொட்டி, இன்று தாராபுரம் திமுக வேட்பாளர் சுகன்யாவுக்காகப் பிரசாரம் மேற்கொண்டார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின். பிறகு பரப்புரை... மேலும் பார்க்க

மருத்துவர், செவிலியர்கள் இல்லையென புகார்; நள்ளிரவில் ஏரல் மருத்துவமனையில் எம்.எல்.ஏ திடீர் ஆய்வு!

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும் முக்கிய வணிகப் பகுதியாக உள்ளது. இப்பகுதி பொதுமக்களுக்கு இரவு நேரத்திலும் அவசர மருத்துவ சேவை தேவைப்படும் நிலையில், நள்ளிரவு நேரங்களில் ம... மேலும் பார்க்க

LPG மானியம் தொடர வேண்டுமா? வட்டி விகிதம் மாறுகிறதா? - அக்டோபர் 2026-ன் முக்கிய நிதி மாற்றங்கள்!

நாளை அக்டோபர் 1-ம் தேதி. நாளை முதல் இந்தியாவில் கவனிக்க வேண்டிய... அமலாக உள்ள முக்கிய நிதி விஷயங்களை இங்கே காணலாம். இந்திய ரிசர்வ் வங்கி மீட்டிங்இந்தியாவின் தற்போதைய ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவிகிதம... மேலும் பார்க்க

''ஜெம் வீரமணியால் என் மகள் தற்கொலை செய்துகொண்டாள்!"- 10 ஆண்டுகளுக்குப் பிறகு தாய் அதிர்ச்சி புகார்

ஜெம் கிரானைட் அதிபர் வீரமணி மீதான போக்சோ வழக்கு தமிழகத்தையே உலுக்கி வரும் நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன் தன் மகள் தற்கொலைக்கு அவரே காரணம் என ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த தாய் ஒருவர் சென்னை காவல் ஆணையர்... மேலும் பார்க்க