செய்திகள் :

Arun Vijay: "பலத்தோடு மீண்டும் வருவேன்" - 'இருளன்' படப்பிடிப்பில் அருண் விஜய்க்கு ஏற்பட்ட காயம்

post image

நடிகர் அருண் விஜய், இப்போது இயக்குநர் முத்தையா இயக்கத்தில் 'இருளன்' படத்தில் நடித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு தென் மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. எப்போதுமே அருண் விஜய் ஆக்ஷன் காட்சிகளுக்குச் சிரத்தை எடுத்து வேலை பார்ப்பார்.

அப்படி 'இருளன்' படத்தின் சண்டைக் காட்சியில் நடித்துக்கொண்டிருக்கும்போது, அவருக்குக் காயம் ஏற்பட்டிருக்கிறது. அவருடைய தொடைப் பகுதியில் தசைநார் கிழிவு ஏற்பட்டுள்ளது.

இந்தக் காயம் குறித்துத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அருண் விஜய், "காயங்கள் காரணமாக வழக்கமான பணிகளை நிறுத்தும்போது, மிகவும் மனவேதனையாக இருக்கிறது.

'இருளன்' படப்பிடிப்பில் தொடை தசைநார் கிழிவு ஏற்பட்டது. இப்போது அதற்கான சிகிச்சைகளை எடுத்து வருகிறேன். இதெல்லாம் விளையாட்டின் ஒரு பகுதிதான். பலத்தோடு மீண்டும் வருவேன்," எனத் தெரிவித்துள்ளார்.

Arun Vijay Injury
Arun Vijay Injury

'இருளன்' படத்தில் அருண் விஜய் இரண்டு விதமான தோற்றங்களில் நடிக்கிறார் எனக் கூறப்படுகிறது. அத்தோடு பீரியட் பின்னணி கொண்ட படமாகவும் இது உருவாகிவருவதாகச் சொல்லப்படுகிறது.

சமீபத்தில் வெளிவந்த மோஷன் போஸ்டரிலும் அப்படியான காட்சிகளே இடம்பெற்றிருந்தன. அருண் விஜய்யோடு 'ஜெயிலர்' மிர்ணா, சமுத்திரக்கனி ஆகியோர் இப்படத்தில் நடிக்கின்றனர்.

பருத்திவீரன் : தெற்கின் வெக்கை! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 16

கடந்த கால் நூற்றாண்டாக தமிழ் சினிமாவில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 50 திரைப்படங்கள் குறித்து பேசுகிறது `சினி'ஸ்கோப் தொடர்!`சினி'ஸ்கோப் 16பருத்திவீரன்வெட்டுக்குத்துக்குப் பயப்படாத, சிறைக்குச் செல்ல அஞ... மேலும் பார்க்க

Sai Abhyankar: "கிறிஸ்டோபர் நோலன் படத்திற்கு இசையமைப்பது என் கனவு" - சாய் அபயங்கர்

சுயாதீன இசைக்கலைஞராகத் தனது கரியரைத் தொடங்கிய சாய் அபயங்கர், இன்று சென்சேஷனல் இசையமைப்பாளராக உருவெடுத்திருக்கிறார். Sai Abhyankar'இந்தியா டுடே' ஊடகத்தின் தமிழ்ப் பதிப்புத் தொடக்க விழாவில் கலந்துகொண்டவ... மேலும் பார்க்க

Ramadoss Biopic: ``அப்பா மகன் சண்டையால் கைவிடப்பட்டு, எங்கள் உழைப்பு வீண்" - இயக்குநர் சேரன் ஆதங்கம்

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு (பயோபிக்) திரைப்படம் கைவிடப்பட்டதாகவும், இதனால் தங்களின் ஒன்றரை ஆண்டு கால உழைப்பு வீணாகிவிட்டது என்றும் இயக்குநர் சேரன் ஆதங்கத்த... மேலும் பார்க்க

Dhruv Vikram: "நாம் உண்மையோடு இருந்தால்..." - சமூக வலைத்தள விமர்சனங்கள் குறித்து துருவ் விக்ரம்

சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் விமர்சனங்கள் தொடர்பாக நடிகர் துருவ் விக்ரம் பேசியிருக்கிறார். 'இந்தியா டுடே' ஊடகத்தின் தமிழ்ப் பதிப்பை இன்று தொடங்கியிருக்கிறார்கள். இந்தத் தொடக்க விழாவில் கலந்துகொண்ட... மேலும் பார்க்க

"இப்ப அவர் இருந்திருந்தா..." - பாரதிராஜாவின் நினைவிடத்தில் FL Poster வெளியிட்ட குறும்பட இயக்குநர்

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் நினைவிடத்தில் 'கருத்தப்பாண்டியின் மொய்ப் பணம்' என்ற குறும்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அவரது இயக்கத்தில் பணிபுரிந்த சிலர் ஒன்றிணைந்து இந்தக் குறும்ப... மேலும் பார்க்க

ஹீரோ டு கேமரா ஆல் இன் ஆல் ஒரே ஆள்! 'ஒன் மேன்' விளம்பரத்துக்காகவா?- சங்ககிரி ராஜ்குமாரின் பதில் என்ன?

தயாரிப்பாளர், இயக்குநர், ஹீரோ, வில்லன், துணை நடிகர்கள், ஒளிப்பதிவாளர், வசனம் எனச் சினிமாவின் அத்தனை கிராஃப்டுகளையும் ஒரே ஆள் பண்ணி வருகிற வெள்ளிக்கிழமை வெளியாகவிருக்கும் படம் 'ஒன் மேன்'.தனி ஒரு ஆளாக இ... மேலும் பார்க்க