செய்திகள் :

Bigg Boss: மூன்று நேர்காணல், பரபரக்கும் போட்டியாளர் தேர்வு - இன்டர்வியூவில் என்ன கேள்விகள் தெரியுமா?

post image

விஜய் டிவியில் செப்டம்பர் முதல் வாரத்தில் ஒளிபரப்பு தொடங்கவிருக்கிற பிக்பாஸ் சீசன் 10 க்கு போட்டியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் வேலைகள் ஆரம்பமாகி இருக்கின்றன.

இதுவரை சுமார் அறுபது பேரிடம் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து பேசியிருப்பதாக கூறப்படுகிறது. நேர்காணல் மூன்று கட்டமாக நடக்கிறதாம்.

மூன்று நேர்காணல்களிலும் தேர்வாகிறவர்கள் அடுத்து நேரடியாக வரவழைக்கப்பட்டு மேலும் சில நேர்காணல்களுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்கின்றனர்.

சரி, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான நேர்காணல்களில் என்னென்ன கேள்விகள் கேட்கிறார்களாம்? முன்னாள் போட்டியாளர் விக்ரமனிடம் பேசினோம்.

பிக்பாஸ் விக்ரமன்

''எனக்கு என்டமால் நிறுவனத்துல இருந்துதான் முதல்ல தொடர்பு கொண்டாங்க. 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில கலந்துக்க விருப்பம் இருக்கா'னு கேட்டதும், 'போகலாம்'னு சொன்னேன்.

இண்டர்வியூ நேரில்தான் நடந்தது. தொழில், குடும்ப பின்னணி உள்ளிட்ட என்னைப் பத்தின அறிமுகப் படலத்தையடுத்து,

பெர்சனாலிட்டி பத்தி தெரிஞ்சுக்க விரும்புனாங்க. அதுக்கேத்த மாதிரி கேள்விகளாக் கேக்குறாங்க.

எங்கிட்ட 'கோபப்படுகிற விஷயத்துல நீங்க எப்படி? கோபம் வருமா? எதுக்கெல்லாம் கோபம் வரும்'னு கேட்டாங்க. 'ஒரு விஷயம் தப்புன்னு பட்டா நூறு சதவிகிதம் கோபப்படுவேன்'னு சொன்னேன். அந்தப் பதிலை ரொம்ப ரசிச்சாங்க.

சுத்திக் கேமரா இருக்கற இந்த ஷோவுக்கு போக எப்படி தைரியமா முடிவெடுக்கிறீங்கனு கேப்பாங்க. இந்த மாதிரி கேள்விகளுக்கான நம் பதிலை ரொம்ப நுணுக்கமா கவனிக்கிறாங்க.

இந்த நேர்காணல் முடிஞ்சு அதுல அவங்க எதிர்பார்த்த வரையறைக்குள் நாம போயிட்டோம்னா அடுத்த கட்டமா மனநல ஆலோசகர் நம்ம கூட பேசுவாங்க.

மனநலன் தொடர்பா ஏற்கனவே ஏதாவது பிரச்னைகள் இருக்கா, மருந்து மாத்திரைகள் எடுக்கறோமானு தெரிஞ்சுக்கிடுவாங்க. 'உங்களுக்கு தற்கொலை எண்ணம் வந்திருக்கா'னும் கேப்பாங்க.

இந்த செஷனையெல்லாம் முடிச்சுட்டா, அடுத்து முழு உடல் பரிசோதனை மாதிரி ஹெல்த் செக்-அப்பும் நான் போன சீசன்ல நடந்தது.

உடல் பிரச்னைகள் ஏதாவது இருந்தா உடன் எடுத்துட்டுப் போக வேண்டிய மருந்து மாத்திரைகளுக்காக இதைப் பண்றாங்க.

எல்லாம் முடிஞ்சிடுச்சுன்னா, அடுத்து ஆடியோ விஷுவல் ஷூட்தான்' என்கிறார் இவர்.

ஆர்த்தி கணேஷ்கர்
ஆர்த்தி கணேஷ்கர்

நடிகை ஆர்த்தி கணேஷ்கரிடம் பேசிய போது,

''இப்ப இன்டர்வியூவில் என்ன கேக்குறாங்கனு தெரியல. நான் கலந்துகிட்டது முதல் சீசன். அதனால 'என்ன கேப்பாங்க'ங்கிற எதிர்பார்ப்போடதான் போனோம். கலந்துக்கிடுற போட்டியாளர்கள் ஒருத்தரையொருத்தர் முன்கூட்டியே தெரிஞ்சுக்க முடியாதபடி ரகசியத்தை மெயின்டெய்ன் பண்ணினாங்க.

ஃபேமிலியா எப்படி ஒரு இடத்துல சேர்ந்து இருப்பாங்கங்கிறதைப் பல கேள்விகள் மூலமா எங்க கிட்ட கேட்டு பதிலை வாங்கினாங்க. மனநல ஆலோசகருடன் பேசறது, வழக்கு இருந்தா அது குறித்த விபரம் கேக்கறதுன்னு போச்சு. எல்லாம் முடியறப்ப நம்மகிட்ட ஒரு தன்னம்பிக்கையைப் பார்த்தா மட்டுமே அவங்களுக்கு நம்ம மேல நம்பிக்கை வந்து நிகழ்ச்சிக்குள் அனுப்புவாங்க'' என்றார் இவர்.!

Samanthi: "சீரியலின் கதை பிடிக்கலைனா சம்பளத்தை அதிகமாகச் சொல்லிடுவேன்!" - சுர்ஜீத் பேட்டி

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'சந்தியாராகம்' தொடர் மூலம் மக்களின் அன்பைப் பெற்றவர் நடிகர் சுர்ஜித். அந்த சீரியலிலிருந்து விலகியவர் இப்போது 'சாமந்தி' தொடரின் மூலம் மீண்டும் 'ஜீ தமிழ்' சேனலுக்கு வந்திருக... மேலும் பார்க்க

முன்கூட்டியே வருகிறது பிக் பாஸ் சீசன் 10 ; தேதி விவரம்? - Bigg Boss Updates

விஜய் டிவியின் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். 2017-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சிக்கு இது பத்தாவது ஆண்டு.முதல் மூன்று சீசன்கள் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பரில் நிறைவடைந்து வந்த‌ன.... மேலும் பார்க்க

`ஆபீஸ் போட்டு பிரதமர் பெயரைச் சொல்லி ஏமாத்துறாங்க; ஜஸ்ட்ல தப்பிச்சேன்' - சீரியல் நடிகர் நவீந்தர்

''நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போகிற சைபர் மோசடிகளில் யார் வேணூம்னாலும் ஏமாந்து போகலாம்கிற சூழல் இன்னைக்கு உருவாகிடுச்சு. டெக்னாலஜி என்னதான் வளர்ந்திருந்தாலும், ஏமாத்தறவங்களுக்கும் தைரியம் எல்லை மீறி... மேலும் பார்க்க

Tv update: 'செகண்ட் லவ்' ஷூட்டிங்கை மும்பைக்கு கொண்டு போனது ஏன்?

மறுபடியும் ஹீரோ.. நெகிழும் காமெடியன்!காமெடி மற்றும் சப்போர்ட் கேரக்டர்கள் மூலம் சின்னத்திரையில் நுழைந்தவர் அழகப்பன். சன் டிவியில் ஒளிபரப்பான 'ஆனந்த ராகம்' தொடர் இவரை ஹீரோ ஆக்கியது.அந்த தொடர் ஆயிரம் எப... மேலும் பார்க்க

"`எந்த நிகழ்ச்சிக்கும் போறதில்ல‌; தந்த வாக்குக்காக வர்றேன்'னு வந்தார் சாலமன் பாப்பையா"- மதுரை முத்து

மதுரை திருநகரில் இரண்டாவது நூலகத்தைத் திறந்துள்ளார், மதுரை முத்து. தன்னுடைய பூர்வீக கிராமத்தில் ஏற்கெனவே ஒரு நூலகத்தை நடத்தி வரும் நிலையில், இரண்டாவது நூலகத்தை சாலமன் பாப்பையாவை வைத்து திறந்து வைத்திர... மேலும் பார்க்க

`அப்பாவை ரஜினி சார் கூட்டி வரச் சொன்னார், அதுக்குள்ள...' - மனம் கலங்கும் `லொள்ளு சபா' ஜீவா

'லொள்ளு சபா' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ஜீவா. அடிப்படையில் நடிகர் ரஜினி காந்தின் தீவிரமான ரசிகர். ரஜினி ரசிகர் மன்றத்திலும் தன்னை இணைத்துக் கொண்டு இயங்கி வந்தவர். சின்னத்திரையைத் தாண்டி சினிமா பக... மேலும் பார்க்க