செய்திகள் :

Bigg Boss Tamil 10: எவிக்‌ஷனில் அரங்கேறிய கடைசி நேர ட்விஸ்ட்... நடந்தது என்ன?

post image

முதல் நாளிலேயே எவிக்‌ஷன், எவிக்‌ஷனில் சென்றவர்கள் ரீ எண்ட்ரி, ஏகப்பட்ட வைல்டு கார்டு எண்ட்ரி என விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 10 விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது.

முன்னதாக 19 போட்டியாளர்களுடன் கடந்த மாதம் 6ம் தேதி நிகழ்ச்சி தொடங்கியது நினைவிருக்கலாம். இந்த நிலையில் வழக்கமான வீக் எண்ட் எவிக்‌ஷனுக்கான ஷூட்டிங் தற்போது பிக்பாஸ் செட்டில் நடைபெற்று வருகிறது.

ராகவ், சாந்தினி, ஷமா, முத்தழகி, முனியம்மா உள்ளிட்ட சிலர் இந்த வாரம் எலிமினேஷனுக்கான நாமினேஷன் பட்டியலில் இருந்தனர்.

இவர்களில் ஷமா எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸ் வைத்திருக்கிறார்.

Bigg Boss Tamil 10
Bigg Boss Tamil 10

நமக்கு கிடைத்த தகவல்களின் படி மக்கள் வாக்குகள் என்கிற வகையில் ஷமா, சாந்தினி ஆகியோருக்குக் குறைவான வாக்குகள் கிடைத்திருப்பதாகத் தெரிகிறது.

இன்னொபுறம், ராகவ், முத்தழகி ஆகியோருமே நிகழ்ச்சியில் ஏனோதானோவென்றுதான் விளையாடி வருவதாக ஒரு கருத்து நிலவி வருகிறது.

ஆரம்பம் முதலே இந்தச் சீசனில் அதிகம் பேசப்படும் போட்டியாளர் என்றால் முனியம்மாவைத்தான் கைகாட்டுகிறார்கள்.

லக்ஷ்மி பிரியா, ஜேசன், முனியம்மா என டைட்டில் வாய்ப்பிருப்பவர்களை இப்போதே வரிசைப்படுத்தத் தொடங்கி விட்டனர் பிக்பாஸ் ரசிகர்கள்.

சரி, இந்த வாரம் யார் எலிமினேட் ஆகிறார்கள் என்கிறீர்கள் தானே? அதில் பிக்பாஸ் ஒரு ட்விஸ்ட் வைத்திருப்பதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வாரம் எவிக்‌ஷன் இல்லை என்பதுதான் அந்த ட்விஸ்ட்டாம்.

காரணம், அது இந்த நேரத்தில் பிக்பாஸ்க்கும் விஜய் சேதுபதிக்கும் மட்டுமே தெரியும்.

Bigg Boss 10: மூன்று Tier-ல் சம்பளம்... யாருக்கு எவ்வளவு தெரியுமா?!

விஜய் டிவியில் ஒரு மாதத்தைக் கடந்து விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது பிக்பாஸ் சீசன் 10. நிகழ்ச்சியின் பத்தாவதாண்டு என்பதால் எவிக்ஷன், வைல்டு கார்டு என்ட்ரி எதையெடுத்தாலும் டபுள், ட்ரிபுள் என நிக... மேலும் பார்க்க

BB Tamil 10: அலைப்பறை செய்த ஜோடி; சிக்ஸர் அடிக்கும் முனியம்மாள் - 4வது வாரம் எப்படி? | சுரேஷ் கண்ணன்

அதிக அளவிலான எவிக்ஷன்களும் அதிக அளவிலான வைல்ட் கார்ட் என்ட்ரிகளும் கொண்ட சீசனாக இது இருக்கும் போல தெரிகிறது. என்ன குறளி வித்தையாவது காட்டி சீசனை உசுப்பேற்ற முயல்கிறார்கள். ஏதாவதொரு மாற்றத்தை செய்து கொ... மேலும் பார்க்க

"'100 நாள் அங்க என்னம்மா பண்ணுவீங்க'னு அப்பாவியாக கேட்டார்" - மறைந்த தந்தை குறித்து கலங்கும் ஆனந்தி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆனந்தி கலந்து கொண்டிருந்த நிலையில் அவரது தந்தை திடீரென இறந்து விட, கடந்த வாரம் நிகழ்ச்சியிலிருந்து அவர் வெளியேறியது நினைவிருக்கலாம்.தந்தையின் 9 வது நாள் சடங்குகளை சொந்த ஊரான கோய... மேலும் பார்க்க

BB Tamil 10 : `பணப்பெட்டியுடன் வீட்டைவிட்டு வெளியேறிய குமரன்.!'

`பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரின் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் குமரன். இவர் பின் வெள்ளித்திரையிலும் தடம் பதித்தார். இவர் ̀குமார சம்பவம்' என்கிற படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அறி... மேலும் பார்க்க

BB Tamil 10: தந்தை திடீரென உயிரிழப்பு.. நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார் ஆனந்தி!

பிக்பாஸ் சீசன் 10 ல் கலந்து கொண்ட நடிகை ஆனந்தியின் தந்தை சுப்பையா மாரடைப்பு காரணமாக திடீரென இன்று உயிரிழந்தார். தொடர்ந்து ஆனந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி இருக்கிறார்.முன்னதாக இந்த வார எவி... மேலும் பார்க்க

Bigg Boss tamil 10: வைல்டு கார்டு என்ட்ரியில் களமிறங்கும் புதிய போட்டியாளர்! - யார் இந்த கவி?

பிக்பாஸ் சீசன் 10-ல் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் புதிய போட்டியாளர் உள்ளே செல்ல இருக்கிறார்.விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 10 செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்கியது. 19 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிகழ்ச்... மேலும் பார்க்க