செய்திகள் :

Bike Taxi: "அனுமதி கொடுக்கலாமா? வேண்டாமா? என கொள்கை முடிவு எடுங்கள்" - நீதிபதிகள் அறிவுறுத்தல்

post image

மதுரையைச் சேர்ந்த நவீன் குமார் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "தமிழகத்தில் ராப்பிடோ, ஓலா, உபர் போன்ற டிஜிட்டல் மைய பைக் டாக்சி சேவைகள் அதிகரித்து வருகின்றன. இவை பலருக்கும் பயனளிக்க கூடிய வகையிலேயே உள்ளன. ஆனால் இந்தச் சேவைகளை ஒழுங்குபடுத்துவதற்கான அரசின் திட்டமோ, விதிகளோ தமிழகத்தில் இல்லை. ஆட்டோ ரிக்சா, டேக்ஸிகளைப் போல பைக் டாக்சி சேவைகள் தனித்து இயங்க முடியாது.

அவை முழுமையாகச் சம்பந்தப்பட்ட டிஜிட்டல் நிறுவனங்களைச் சார்ந்துள்ளன. ஆனால் அந்நிறுவனங்கள் மாநிலம் முழுவதும் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் தங்கள் டிஜிட்டல் தளத்தை இயக்கி வருகின்றன. அதேசமயம் பைக் டாக்சி ஓட்டுநர்கள் மீது அடிக்கடி அபராதம் விதிப்பது, வாகனங்களைப் பறிமுதல் செய்வது, மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் குற்ற வழக்குகள் பதியப்படுவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகையில் ஓட்டுநர் தண்டிக்கப்படுகிறார்.

உயர் நீதிமன்றம் மதுரை கிளை
உயர் நீதிமன்றம் மதுரை கிளை

ஆகவே பைக் டாக்ஸிகளை ஒழுங்குபடுத்துவதற்கான ஒழுங்குமுறை அமைப்பை உருவாக்கவும், சட்டப்படி உரிமம் வழங்கி பைக் டாக்சி சேவையை நடத்த அனுமதிப்பதற்கான விதிகளை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

அதுவரை பைக் டாக்சி ஓட்டுநர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை வழங்கி உத்தரவிட வேண்டும்'' என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் கார்த்திகேயன் சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், “பைக் டாக்சிக்கு அனுமதி வழங்குவது குறித்து ஒரு குழு அமைத்து அதன் பிறகு முடிவு எடுக்க முடியும். அதுவரை பைக் டாக்சிக்கு அனுமதி கிடையாது. விதிகளை மீறி பைக் டாக்சி  ஓட்டி வந்தால் அபராதம் விதிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

நீதிபதிகள் குறுக்கிட்டு, “இது குறித்து ஏன் விளம்பரப்படுத்த கூடாது? ஏதேனும் விபத்து நடந்தால் என்ன செய்வது? யார் பொறுப்பு?'' என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்

பைக் டாக்ஸி

மனுதாரர் தரப்பு கூறுகையில், “பைக் டாக்சிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. பிற மாநிலங்களிலும் அனுமதி வழங்க ஆலோசனை வழங்கியுள்ளது. மாநில அரசு பைக் டாக்சிக்குத் தடை விதிக்க முடியாது ஒழுங்குமுறைபடுத்தலாம்” என வாதிட்டார்

இதைத்தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “பைக் டாக்சிக்கு அனுமதி கொடுக்கலாமா? வேண்டாமா? என விரைவில் கொள்கை முடிவு எடுங்கள்“ என அறிவுறுத்தி இது குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ய போக்குவரத்துத் துறை செயலாளருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

உதயநிதி ஸ்டாலின் கைது: ``விசாரணை நடத்துவதுதான் நோக்கம் என்றால்..." - ஸ்டாலின் கேள்வி

உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ``காவிரி உரிமையை நிலைநாட்ட துப்பு இல்லாத, த.வெ.க. அரசின் அலட்சிய ஆணவப் போக்கை... மேலும் பார்க்க

"அமைச்சர் வன்னிஅரசு சொல்வது வேறு... நான் எழுப்புகிற கேள்விகள் வேறு!" - விளக்குகிறார் ஆளூர் ஷாநவாஸ்

த.வெ.க அரசின் மூன்று மாதகால ஆட்சி குறித்து பல்வேறு அதிரடி விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலாளர் ஆளூர் ஷா நவாஸ். இந்தச் சூழலில், நமது சந்தேகங்களை கேள்விகள... மேலும் பார்க்க

உதயநிதி ஸ்டாலின் கைது விவகாரம்: `விடுவிக்க உத்தரவிட்ட நீதிமன்றம்' - என்ன நடந்தது?

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்காக பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து நீதிமன்றம், ``நாளை சட்டமன்றம் கூட உள்ள நிலையில், இன்றே வ... மேலும் பார்க்க

உதயநிதி கைது: ``நாங்க என்ன தீவிரவாதிகளா... இப்படி அடிச்சிருக்கீங்க?" - மேயர் பிரியா

எதிர்க்கட்சித் தலைவர் கைதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் திமுக தொண்டர்கள் சாலை மறியல், அரசுக்கு எதிரான போராட்டம் போன்றவைகளில் ஈடுபட்டனர். அதைக் கலைக்கும் வகையில் சில இடங்களில் தடியடி நடத்... மேலும் பார்க்க

உதயநிதி : ``இரட்டை பொருள் தரும் வகையில் பேசுவதை தவிர்த்திருக்க வேண்டும்" - திருமாவளவன்

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரையில் ஒரு பகுதி சர்ச்சையானது. அது தொடர்பாக ஆளும் தவெக அரசு உதயநிதி ஸ்டாலினை கைது செய்திருக்கிறது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு அவசர வழக்காக வி... மேலும் பார்க்க

மழைக்காலத்தில் கழிவுநீர் சூழும் அபாயம் - மதுரை கோரிப்பாளையத்தில் வலுக்கும் மக்கள் போராட்டம்!

கோயில் மாநகராமான மதுரையின் மத்தியப் பகுதி, கோரிப்பாளையம் - செல்லூர் பகுதியில் "செல்லூர் கண்மாயின்" வடிகால் தூர்வாரும் பணிகள் கடந்த மூன்று மாதமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் வடிகால் பணி காரணமாக கா... மேலும் பார்க்க