செய்திகள் :

BREAKING: கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது!

post image

மாவட்ட பெண் ஆட்சியருக்கு கள்ளக்குறிச்சி த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்திகள் அனுப்பியதாக வெடித்த விவகாரம், விஜய் தலைமையிலான அரசுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. நீதிமன்றம் வரை சென்ற இந்த விஷயத்தில் பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியும் புகாரளித்து, தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்திருந்தார்.

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ்

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில் அருள் விக்னேஷ் எப்போது வேண்டுமானாலும் கைதுசெய்யப்படலாம் எனப் பேசப்பட்டு வந்தது. இன்று மாலை தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷின் வீட்டுக்கு முன்பு குவிந்திருந்த அக்கட்சித் தொண்டர்களை, காவல்துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த நிலையில், எம்.எல்.ஏ அருள் விக்னேஷை சற்று முன்பு காவல்துறையினர் கைதுசெய்திருக்கின்றனர். இவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட மொத்தம் 5 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

`21-ம் நூற்றாண்டு எட்டப்பர்கள்' Vs `மனநோயாளிகளுக்கு பதில் சொல்ல மாட்டோம்' திமுக - காங் வார்த்தை போர்

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் அறிவிப்பைத் தொடர்ந்து, 'தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு அளிக்கத் தயாராகிவரும் எட்டப்பர்கள், கைப்புள்ள, வீர வசனம் பேசியவர்களின் அந்தர் பல்டி' என்று தி.மு.க-வை மாணிக்கம் தாக... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி: நீதிமன்றம் வரை சென்ற விவகாரம்; இறுகிய பிடி... தவெக எம்எல்ஏ கைதில் நடந்தது என்ன?!

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ், மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பியதாக கூறப்படும் விவகாரம், தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரத்தில் தேசிய ... மேலும் பார்க்க

'ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்; வேறு வழியின்றி TVK MLA கைது செய்யப்பட்டிருக்கிறார்'- ஸ்டாலின்

மாவட்ட பெண் ஆட்சியருக்கு கள்ளக்குறிச்சி த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்திகள் அனுப்பியதாக வெடித்த விவகாரம், விஜய் தலைமையிலான அரசுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. நீதிமன்றம் வர... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: "தவெக அரசின் சர்வாதிகார ஆணவத்திற்கு உச்ச நீதிமன்றம் சம்மட்டி அடி"- நயினார்

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த மறுத்த திருப்பரங்குன்றம் முருகன் கோயில் அறங்காவலர் குழுவைக் கலைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மே... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: "சமூக நல்லிணக்கத்தைவிடவும் உச்ச நீதிமன்றத்தின் ஈகோ தான் முதன்மையானதா?" - திருமா

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்த மறுத்த திருப்பரங்குன்றம் முருகன் கோயில் அறங்காவலர் குழுவைக் கலைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: `சனாதன விரோத மனநிலையை உச்ச நீதிமன்றம் அம்பலப்படுத்தியுள்ளது' - பாஜக

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த மறுத்த திருப்பரங்குன்றம் முருகன் கோயில் அறங்காவலர் குழுவைக் கலைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மே... மேலும் பார்க்க