செய்திகள் :

BRICS 2026 மாநாடு: ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் உட்பட 20 உலகத் தலைவர்கள் பங்கேற்பு

post image

பொருளாதார வலிமை கொண்ட உலகின் முக்கிய வளர்ந்து வரும் நாடுகள் ஒன்றிணைந்து, வர்த்தகம், நிதி மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக ஆண்டுதோறும் நடத்தும் சர்வதேச உச்சிமாநாடு BRICS.

2026-ம் ஆண்டுக்கான BRICS உச்சி மாநாடு இன்று டெல்லியில் நடைபெறுகிறது. பிரதமர் மோடி தலைவகிக்கும் இந்த மாநாட்டில் சுமார் 20 நாடுகளின் தலைவர்கள் நேரில் பங்கேற்கின்றனர்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா, இந்தோனேசிய அதிபர் பிராபோவோ சுபியாந்தோ, எகிப்து அதிபர் அப்துல் பத்தா அல்-சிசி, எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சையத் அல் நஹ்யான் ஆகியோர் இந்த மாநாட்டில் பங்கேற்கும் முக்கியத் தலைவர்கள்.

BRICS 2026
BRICS 2026

பிரேசில் நாட்டின் சார்பில் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் மௌரோ வியாரா கலந்துகொள்கிறார். மேலும், BRICS கூட்டாண்மை நாடுகளின் பிரதிநிதிகளாக பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, கஜகஸ்தான் அதிபர் காசிம்-ஜோமார்ட் தோகாயேவ், மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், தாய்லாந்து பிரதமர் அனுதின் சர்ன்விராகுல், கியூபா அதிபர் மிகுல் டயஸ்-கானெல், நைஜீரிய அதிபர் போலா அகமது தினுபு, உஸ்பெக்கிஸ்தான் அதிபர் ஷவ்காத் மிர்சியோயேவ் மற்றும் உகாண்டா துணை அதிபர் ஜெசிகா அலுப்போ ஆகியோரும் மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

இவர்கள் தவிர, ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸும் இந்த உச்சிமாநாட்டில் நேரில் பங்கேற்கிறார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் BRICS உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று அதிகாலை இந்தியா வந்தடைந்தார். டெல்லி விமான நிலையத்தில் அவரது அதிகாரப்பூர்வ விமானம் தரையிறங்கியது. இந்தப் பயணத்தின் போது, அதிபர் புதின் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள உரையாடல்களுடன், பல்வேறு இருதரப்பு சந்திப்புகளிலும் பங்கேற்க திட்டமிட்டுள்ளார்.

பிப்ரவரி 2022-ல் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு, BRICS உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக புதின் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இது என்பது குறிப்பிடதக்கது.

TVK: "மதுராந்தகத்தில் திமுக வென்றால் தவெக ஆட்சி ஜனவரி மாதத்தில் கவிழும்" - ஆர்.எஸ்.பாரதி

செங்கல்பட்டு மாவட்டத்தின் மதுராந்தகம் (தனி), திருப்பூர் மாவட்டத்தின் தாராபுரம் (தனி) ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிற... மேலும் பார்க்க

9/11 Anniversary: `குப்பைத் தொட்டி டு புல்லட்' பின் லேடனை அமெரிக்கா கண்டுபிடித்துக் கொன்றது எப்படி?

இதே நாளில் 25 ஆண்டுகளுக்கு முன்பாக அந்தக் கொடூரத் தாக்குதல் நிகழ்ந்தது. அமெரிக்காவின் உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரங்கள் மீது தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதல், உலகத்தின் போக்கையே மாற்றியது. அந... மேலும் பார்க்க

NIA: `டெல்லி செங்கோட்டை டார்கெட் இல்ல...' - கார் குண்டுவெடிப்பு குறித்த குற்றப்பத்திரிக்கை தாக்கல்

கடந்த ஆண்டு நவம்பர் 10-ம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. அதில் 11 பேர் பலியான நிலையில், 29 பேர் காயமடைந்தனர். இந்தக் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு ... மேலும் பார்க்க

கோவை: ‘வீடும் இல்ல... மின்சாரமும் இல்ல’ - அடர்வனத்தில் அவதிப்படும் கூமாட்டி பழங்குடி கிராமம்

கோவை மாவட்டத்தில் மின்சார வசதி இல்லாத கிராமங்கள் இருக்கிறது என்றால், உங்களால் நம்ப முடியுமா?... ஆம், இருக்கிறது என்பதே கசப்பான உண்மை. ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சில பழங்குடி கிராமங்கள் இத்த... மேலும் பார்க்க

லண்டனில் அஜித் கலந்துகொள்ளும் Car Race; தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்!

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இன்று பிரிட்டன் செல்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய். இன்று முதல் வருகிற 17-ம் தேதி வரை நீளும் விஜய்யின் பயணப் பட்டியலில், இங்கிலாந்தில் இருக்கும் புகழ்பெற்ற 'சில்வர்ஸ... மேலும் பார்க்க