செய்திகள் :

Chef Damu: "தங்குறதுக்கு இடமில்லாம ரயில்வே ஸ்டேஷனில் தூங்குவேன்" - செஃப் தாமு பகிர்வு | Rewind

post image

பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு இன்று காலமானார். இவருக்கு வயது 72. சமையல் கலைஞரான இவர் ஜெயா டிவி, விஜய் டிவி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் பெரியளவில் மக்களிடையே பரிச்சயமானார்.

Chef Damu
Chef Damu

கடந்த குக் வித் கோமாளி 7வது சீசனிலும் இவர் நடுவராகக் கலந்துகொண்டார். இவருடைய மறைவுக்கு, இவருடன் பயணித்த பலரும் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். விகடனுக்கு அவர் முன்பு அளித்த பேட்டியில் அவருடைய கரியரின் தொடக்க காலம் குறித்து அவர் பகிர்ந்திருக்கிறார்.

அந்தப் பேட்டியில் அவர், "ஆரம்பத்தில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிக்கப் போறேன்னு சொன்னப்ப அம்மா விடல. எவ்ளோ சொல்லியும் கேட்காம பிஎஸ்ஸி கெமிஸ்ட்ரியில் சேர்த்தாங்க.

அது எனக்குப் பிடிக்கலைங்கிறதனால ஒழுங்கா காலேஜுக்குப் போகாம, படிக்காம இருந்தேன். பிறகு என் விருப்பப்படி ஹேட்டல் மேனேஜ்மென்ட்ல சேர்த்தாங்க.

மூன்று வருஷமும் கிச்சனில் கவனம் செலுத்தி கோல்டு மெடல் வாங்கினேன். படிக்கும்போதே சுதர்ஷன் இன்டர்நேஷனலில் டிரெயினிங்கிற்கும் போயிட்டு இருந்தேன்.

Chef Damu
Chef Damu

படிப்பு முடியும்போது கேம்பஸ் இன்டர்வியூ மூலமா பாம்பே தாஜ் ஹோட்டலில் வேலை கிடைச்சது. அங்க போகும்போது எனக்கு இந்தி தெரியாது. தங்குறதுக்கு இடமில்லாம ஹோட்டலில் ஒர்க் முடிச்சிட்டு வந்து ரயில்வே ஸ்டேஷனில் தூங்கிட்டு அங்கேயே குளிச்சி கிளம்பி மறுநாள் தாஜுக்கு வேலைக்குப் போவேன்.

இப்படியேதான் கொஞ்ச நாட்கள் இருந்துச்சு. மொழி தெரியாததனால அதுவும் சிரமமாக இருந்துச்சு. எல்லாவற்றுக்கும் பழகினேன்.

கொஞ்ச வருஷம் கழிச்சு சென்னைக்கு வேலைக்காக வரும்போது ஏற்கெனவே நிறைய அடி வாங்கிப் பழகிட்டதால இங்க எல்லாமே சுலபமாகிடுச்சு. அந்த இன்டஸ்ட்ரியில் கிட்டத்தட்ட 14 வருஷம் இருந்தேன். இன்னைக்குக் கவனிக்கப்படுற இடத்துல இருக்கேன்னா ஆரம்ப காலகட்டத்தில் அதுக்காக ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கேன்'' என்று பேசியிருந்தார்.

Chef Damu: ''இனி அந்த வார்த்தைகளைக் கேட்க முடியாது என்பதை எப்படி ஏற்றுக்கொள்ளவது" - ரம்யா பாண்டியன்

பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு இன்று காலமானார். இவருக்கு வயது 72. சமையல் கலைஞரான இவர் ஜெயா டிவி, விஜய் டிவி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் பெரியளவில் மக்களிடையே பரிச்சயமானார். Chef Damuகடந்த குக் வித் கோமா... மேலும் பார்க்க

Chef Damu: "என்னவொரு கைபக்குவம் என்று எத்தனையோ முறை பாராட்டியிருக்கிறீர்கள்!" - திவ்யா துரைசாமி

பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு இன்று காலமானார். இவருக்கு வயது 72. சமையல் கலைஞரான இவர் ஜெயா டிவி, விஜய் டிவி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் பெரியளவில் மக்களிடையே பரிச்சயமானார். Chef Damuகடந்த குக் வித் கோமா... மேலும் பார்க்க

BB Tamil 10: `ஒரு பொண்ணு கணவரை நினைச்சு ஃபீல் பண்ணா கூட தப்பா பேசுவீங்களா?' - சாந்தினி தமிழரசன்

"நான் பர்சனலா ரொம்ப ஜாலியான பர்சன். ஆனா, வீட்டுல ஆரம்பத்துல லீடர் எக்சிட் இந்த முறை புதுசா வச்சிருந்தாங்க. எனக்கு ஹவுஸ்மெட்ஸ் என்னை வீட்டை விட்டு வெளியில அனுப்பக் கூடாதுன்னு இருந்தது. நான் சினிமாவை வி... மேலும் பார்க்க

`பலரும் விமர்சனம் செய்த என் செய்தி வாசிப்புதான் முதல்வர் முன் நிற்க வைத்தது!' - 'பாலிமர்' ரஞ்சித்

'பார்ப்பதற்கு அப்பாவி போலிருக்கும் இவர்தான்..'- டிவியில் இந்த வார்தைகளைக் கேட்டாலே இப்போதெல்லாம் எந்த வேலையிலிருந்தாலும் ஒரு நிமிடம் டிவி முன் ஓடி வந்து விடுகின்றனர் பலரும். இந்த வார்த்தைகளுக்குச் சொந... மேலும் பார்க்க

"இப்படியான ஒரு டிவி நிகழ்ச்சிக்கு வரவேண்டும் என்பது என்னுடைய ஆசை!"-'மாஸ்டர் செஃப்' குறித்து சமந்தா

தமிழில் புதிய பொழுதுபோக்கு தொலைக்காட்சி சேனலாக, 'சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா' நிறுவனத்தின், 'சோனி விழா' அக்டோபர் 19 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கப்பட்டது. இதில் பிரபலமான 'செலிப்ரிட்டி மாஸ்டர் செஃப... மேலும் பார்க்க

BB Tamil 10: கடவுள் பாதி, மிருகம் பாதி ஜேசன்; வாசன் செய்த சம்பவம்! - 6வது வார ஹைலைட்ஸ்!

‘ஒண்ணுமே தெரியாதவனும் கிடையாது, எல்லாம் தெரிஞ்சவனும் கிடையாது’ என்கிற பழமொழி மீண்டுமொருமுறை நிரூபணமாகிறது. வாசனின் இந்த வெற்றி ‘ஒன் டைம் வொண்டரா?’ அல்லது மேலும் தொடருமா?ஒரேயொரு டாஸ்க்கில் வென்றவருக்கு... மேலும் பார்க்க