செய்திகள் :

Dare Devil: தயாரிப்பாளராகும் ஷாலினி அஜித்குமார்; நீண்ட காத்திருப்புக்குப் பிறகு AK64 அப்டேட்!

post image

நடிகர் அஜித்குமாருக்குக் கடந்தாண்டு 'குட் பேட் அக்லி' படம் வெளியாகியிருந்தது. ஆனால், அந்தப் படத்திற்குப் பிறகு அஜித் நடிக்கும் படங்கள் எதுவும் தொடங்கப்படவில்லை.

ரேஸிங் பக்கமே முழு கவனம் செலுத்தி வந்தார். தற்போது அஜித்தின் 64-வது படத்தின் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

அஜித்குமார்
அஜித்குமார்

அஜித்தின் 64-வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கப்போகிறார் என்பதை அவரே பல பேட்டிகளில் உறுதிப்படுத்தியிருந்தார்.

தற்போது அந்தப் படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பையும், படத்தின் தலைப்பையும் வெளியிட்டிருக்கிறார்கள்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்தப் படத்திற்கு 'டேர் டெவில்' எனத் தலைப்பிட்டிருக்கிறார்கள். இதுமட்டுமல்ல, இந்தப் படத்தின் மூலம் அஜித்குமாரின் மனைவி ஷாலினி தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.

'பிரேவ் ஹார்ட்ஸ்' என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, முதல் தயாரிப்பாக இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு 'மார்க் ஆண்டனி', 'குட் பேட் அக்லி' போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப் படம் பற்றிய அறிவிப்பைப் பகிர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், "34 ஆண்டுகாலத் தடைகளைத் தகர்த்து, கோடிக்கணக்கான மக்களுக்கு ஊக்கமளித்து, நட்சத்திர அந்தஸ்திற்குப் புதிய இலக்கணம் வகுத்த பயணம்! பேரார்வம், விடாமுயற்சி மற்றும் நிகரற்ற வசீகரத்தால் செதுக்கப்பட்ட ஒரு பயணம்!

இந்தப் படம் சிறப்பான ஒன்றாக இருக்கப்போகிறது. என் மீதான நம்பிக்கைக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி அஜித்குமார் சார்! தயாரிப்பாளர் ஷாலினி மேமிற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்" எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.

Vishwanath & Sons: "குழந்தைகள் என் காமெடி காட்சிகளைக் கொண்டாடும்போது..." - நெகிழும் மமிதா பைஜூ

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. Vishwanath & Sons வெங்கி அட்லூரி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார், மமிதா பைஜூ, ரவீனா டாண்டன் ஆகியோர்... மேலும் பார்க்க

Paris Cafe: `பாரிஸ் நகரில் சிரமத்தைப் பொருட்படுத்தாமல் படப்பிடிப்பு நடத்தினோம்' - குரு சோமசுந்தரம்

கண்மணி ரங்கநாதன் தயாரிப்பில் சரஜ் சீலன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம், அனுமோல், அர்ச்சனா குமார், விஜய் விஷ்வா, சாய் விக்கி, நயனா உள்ளிட்டோர் நடித்துள்ள 'பாரிஸ் கபே' திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறத... மேலும் பார்க்க

Paris Cafe: ``நம் யாராலும் தவிர்க்க முடியாத முக்கியமான விஷயம்" - நடிகை அனுமோல் பேச்சு

கண்மணி ரங்கநாதன் தயாரிப்பில் சரஜ் சீலன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம், அனுமோல், அர்ச்சனா குமார், விஜய் விஷ்வா, சாய் விக்கி, நயனா உள்ளிட்டோர் நடித்துள்ள 'பாரிஸ் கபே' திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறத... மேலும் பார்க்க

Arun Vijay: "பலத்தோடு மீண்டும் வருவேன்" - 'இருளன்' படப்பிடிப்பில் அருண் விஜய்க்கு ஏற்பட்ட காயம்

நடிகர் அருண் விஜய், இப்போது இயக்குநர் முத்தையா இயக்கத்தில் 'இருளன்' படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தென் மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. எப்போதுமே அருண் விஜய் ஆக்ஷன் காட்சிகளுக்குச் சி... மேலும் பார்க்க

பருத்திவீரன் : தெற்கின் வெக்கை! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 16

கடந்த கால் நூற்றாண்டாக தமிழ் சினிமாவில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 50 திரைப்படங்கள் குறித்து பேசுகிறது `சினி'ஸ்கோப் தொடர்!`சினி'ஸ்கோப் 16பருத்திவீரன்வெட்டுக்குத்துக்குப் பயப்படாத, சிறைக்குச் செல்ல அஞ... மேலும் பார்க்க

Sai Abhyankar: "கிறிஸ்டோபர் நோலன் படத்திற்கு இசையமைப்பது என் கனவு" - சாய் அபயங்கர்

சுயாதீன இசைக்கலைஞராகத் தனது கரியரைத் தொடங்கிய சாய் அபயங்கர், இன்று சென்சேஷனல் இசையமைப்பாளராக உருவெடுத்திருக்கிறார். Sai Abhyankar'இந்தியா டுடே' ஊடகத்தின் தமிழ்ப் பதிப்புத் தொடக்க விழாவில் கலந்துகொண்டவ... மேலும் பார்க்க