செய்திகள் :

Deva: "அஜித்தை பாட வைக்க முயற்சி பண்ணினேன்!" - தேனிசை தென்றல் தேவா ஷேரிங்ஸ்

post image

இசையமைப்பாளர் 'தேனிசைத் தென்றல்' தேவா இன்று திடீர் உடல்நலக் குறைவால் காலமானார். அவருடைய மறைவுக்குத் திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Music Director Deva
Music Director Deva

ஆனந்த விகடனுக்கு அவர் வெவ்வேறு சமயங்களில் அளித்த பேட்டிகளில் பல விஷயங்களை அவர் பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் அஜித்தைப் பாட வைக்க முயற்சித்ததாகவும் முன்பு அளித்த பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.

அவர், ``எஸ்.ஏ.சி சாரின் படங்களுக்கு நான் இசையமைத்தபோது விஜய் அடிக்கடி ரெக்கார்டிங்கிற்கு வருவார். அப்போதிருந்தே அவரை எனக்கு நல்லாத் தெரியும். அவர் ஹீரோ ஆனதுக்கு அப்புறம் அவருடைய படங்களுக்கு இசையமைக்கும்போது, அவரைப் பாட வைத்தேன். அவரையும் அவரின் அம்மா ஷோபாவையும் சேர்த்து டூயட் பாடல்களையும் பாட வைத்திருக்கிறேன்.

Music Director Deva
Music Director Deva

அதேமாதிரி அஜித்துக்கும் 'ஆசை’ படத்தில் ஆரம்பித்து 'ரெட்’ படம் வரைக்கும் பல படங்கள் பண்ணியிருக்கேன். விஜய்யைப் பாட வைத்த மாதிரி அஜித்தையும் பாட வைக்க முயற்சி செய்தேன். ஆனால், அவர் அதுக்குப் பிடி கொடுக்கவே இல்லை'' எனப் பகிர்ந்திருக்கிறார்.

Jailer 2: "திரையில் அவருடைய காட்சிகள் குறைக்கப்பட்டதைக் கண்டு..." - மோகன்லாலின் ஆடை வடிவமைப்பாளர்

ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2' திரைப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லாலின் காட்சிகள் குறைக்கப்பட்டது குறித்து ஆவேசமாகப் பதிவிட்டிருந்த ஆடை வடிவமைப்பாளர் ஜிஷாத் சம்சுதீன், தற்போது தனது கருத்துக்கு விளக்கமளித்த... மேலும் பார்க்க

Deva: "‘மீசைய முறுக்கு-2’-வுக்காக அவருடன் உரையாடிய அனுபவங்கள் மறக்க முடியாதவை!"- ஹிப் ஹாப் தமிழா ஆதி

இசையமைப்பாளர் 'தேனிசைத் தென்றல்' தேவா இன்று திடீர் உடல்நலக் குறைவால் காலமானார். அவருடைய மறைவுக்குத் திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவர் கடைசியாக 'மீசைய முறுக்கு 2' படத்தின் வெற... மேலும் பார்க்க

Deva: "கள்ளம், கபடம், வஞ்சகம் இல்லாத 'சொக்கத்தங்கம்' தேவா!" - ரஜினி இரங்கல்

இசையமைப்பாளர் 'தேனிசைத் தென்றல்' தேவா திடீர் உடல்நலக் குறைவு காரணமாக இன்று இயற்கை எய்தினார். அவருடைய மறைவுக்குத் திரைத்துறையினர், அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினி... மேலும் பார்க்க

சூப்பர் ஸ்டார் Title Card முதல் சிங்கப்பூர் கௌரவம் வரை: தேனிசை தென்றல் தேவா 'Not an Easy Job'!

வொயிட் அன்ட் வொயிட் ஜிப்பா - பேண்ட் இவருடைய நிரந்தர உடை. கானா, குத்து, மெல்லிசை எனத் திரையிசையில் ஆல்-ரவுண்டர் இவர். கரகரக் கட்டைக் குரல் இவருடைய ப்ளஸ். எப்போதுமே மெல்லிய புன்னகையை இவரது முகத்தில் காண... மேலும் பார்க்க