செய்திகள் :

Doctor Vikatan: உயிரைப் பறிக்குமா மஞ்சள் காமாலை... உயிர் காக்கும் சிகிச்சைகள் இல்லையா?

post image

Doctor Vikatan: என்னுடைய உறவினர்களில் இருவர் மஞ்சள் காமாலை பாதிப்பில் உயிரிழந்து விட்டனர். மருத்துவம் இவ்வளவு முன்னேறியுள்ள இந்தக் காலத்திலும் மஞ்சள் காமாலை பாதிப்புக்கு உயிர் காக்கும் சிகிச்சைகள் இல்லையா?

அதை முழுமையாகக் குணப்படுத்த வாய்ப்பில்லையா? கண்கள் மஞ்சளாக மாறுவது தவிர, இது வேறெப்படிப்பட்ட அறிகுறிகளைக் காட்டும்?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, இரைப்பை, குடல் அறுவை சிகிச்சை மருத்துவர் பி.செந்தில்நாதன்.

மருத்துவர் பி.செந்தில்நாதன்
மருத்துவர் பி.செந்தில்நாதன்

மஞ்சள் காமாலை என்பதைப் பொதுவாகப் பலரும் ஒரு நோயாக நினைக்கிறார்கள். அது நோய் அல்ல; நோயின் அறிகுறி என்பதை முதலில் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். எப்படி நமக்குக் காய்ச்சல், தலைவலி, வயிற்றுவலி போன்ற தொந்தரவுகள் வருகின்றனவோ, அவற்றைப் போன்றதுதான் மஞ்சள் காமாலை. 

மஞ்சள் காமாலை வருவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அது சாதாரண மருந்து மாத்திரையிலேயே சரிசெய்யக்கூடிய காரணமாக இருக்கலாம் அல்லது உயிருக்கு ஆபத்தான நிலைமைக்குக் கொண்டு செல்லக்கூடிய காரணமாகவும் இருக்கலாம். பொதுவாக மஞ்சள் காமாலையை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.

ஒன்று, கல்லீரல் பழுதடைந்து அதனால் ஏற்படக்கூடிய மஞ்சள் காமாலை. அதை கல்லீரல் சார்ந்த மஞ்சள் காமாலை, ஹெப்படோசெல்லுலார் ஜாண்டிஸ் (Hepatocellular Jaundice) என்று சொல்வோம். பல்வேறு காரணங்களால்... உதாரணத்துக்கு, மதுப் பழக்கத்தாலும், வைரஸ் கிருமித் தொற்று போன்று பல்வேறு விதமான கல்லீரல் நோய்கள் ஏற்பட்டும், கல்லீரலில் பித்தம் சரியாக உற்பத்தி செய்யப்படாமல் இருப்பதால் வரக்கூடிய மஞ்சள் காமாலையை 'ஹெப்படோசெல்லுலார் ஜாண்டிஸ்' என்று சொல்வோம்.

பித்தம் உற்பத்தியாகக்கூடிய கல்லீரலில் இருந்து குடலுக்குச் செல்லும் பாதையில் அடைப்பு ஏற்பட்டால், அதனாலும் மஞ்சள் காமாலை ஏற்படலாம்.

மற்றொரு வகை மஞ்சள் காமாலைக்கும் கல்லீரலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. கல்லீரல் நன்றாக வேலை செய்யும், பித்தம் உற்பத்தியாகும். ஆனால், பித்தம் உற்பத்தியாகக்கூடிய கல்லீரலில் இருந்து குடலுக்குச் செல்லும் பாதையில் அடைப்பு ஏற்பட்டால், அதனாலும் மஞ்சள் காமாலை ஏற்படலாம்.

இதை 'அப்ஸ்ட்ரக்டிவ் ஜாண்டிஸ்' (Obstructive Jaundice) என்று சொல்வோம். பித்தப்பையில் கல், பித்தநாளத்தில் கல், பித்தநாளச் சுருக்கம் அல்லது கணையத்திலோ, பித்தப்பையிலோ, பித்தநாளத்திலோ புற்றுநோய் ஏற்பட்டு அதனால் கூட மஞ்சள் காமாலை வரலாம். 

டெங்கு காய்ச்சல் (Dengue fever) வரும்போது, அதற்குரிய சிகிச்சையைக் கொடுத்துக் காய்ச்சலைச் சரிசெய்வதுபோல மஞ்சள் காமாலை எதனால் ஏற்படுகிறது என்ற மூலக் காரணத்தைக் கண்டறிந்து, அதனைச் சரிசெய்தாலே மஞ்சள் காமாலை தானாகச் சரியாகிவிடும்.

யாரும் பயப்படத் தேவையில்லை. சரியான நேரத்தில் மருத்துவரை அணுகி, இது எந்த வகையான மஞ்சள் காமாலை, அதற்கு என்ன காரணம் என்று பார்த்து அதனைச் சரிசெய்தாலே இதற்கான முழுமையான தீர்வு  நிச்சயமாகக் கிடைக்கும்.

டாக்டர்  பி. செந்தில்நாதன்:

சென்னை,  ஜெம் மருத்துவமனையின் குடல்-இரைப்பை அறுவை சிகிச்சை மருத்துவர்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

Doctor Vikatan: ஷர்மிளா தாகூருக்கு நுரையீரல் புற்றுநோய்! புகைப்பழக்கம் இல்லாமலும் வருமா?

Doctor Vikatan: பாலிவுட் நடிகை ஷர்மிளா தாகூருக்கு நுரையீரல் புற்றுநோய் பாதித்து அதிலிருந்து அவர் மீண்டதாக சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன். புகைப் பழக்கம் உள்ளவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் வருவதாகக் ... மேலும் பார்க்க

மீனாட்சி மிஷன் மருத்துவமனை: 500 ரோபோட்டிக் அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து வரலாற்றுச் சாதனை!

மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் (MMHRC) மற்றும் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை (MSSH) ஆகியவை கடந்த 10 ஆண்டுகளில் 500 ரோபோட்டிக் அறுவைசிகிச்சைகளைச் செய்து புதிய மைல்கல்லை ... மேலும் பார்க்க

விலங்குகளிடம் காணப்படும் Shamonda வைரஸ்... மனிதரிடம் முதன்முறையாகக் கண்டறியப்பட்டதால் அதிர்ச்சி!

விலங்குகளிடம் மட்டுமே கண்டறியப்பட்டு வந்த Shamonda வைரஸ், மனிதரிடம் முதன்முறையாகக் கண்டறியப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .பிரான்ஸின் லியோன் (Lyon) நகரி... மேலும் பார்க்க

Doctor Vikatan: சேலை கட்டினால் கேன்சர் வருமா? அதிர்ச்சி... ஆனால், உண்மை!

Doctor Vikatan: நீண்ட காலமாக சேலை கட்டுவோருக்கு, இடுப்புப் பகுதியில் புண்கள் ஏற்பட்டு, காலப்போக்கில் புற்றுநோயாக மாறலாம் எனச் சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன். அது எந்த அளவுக்கு உண்மை... சேலை கட்டும் எ... மேலும் பார்க்க

Doctor Vikatan: முன்பக்க மண்டையில் முடி உதிருதா... இந்த 9 விஷயங்களில் கவனமா இருங்க!

Doctor Vikatan: என் வயது 33. இப்போதே எனக்கு முன்பக்கத் தலையில் முடி உதிர்வுஆரம்பித்துவிட்டது. எனக்குத் தெரிந்த பெண்கள் சிலருக்கும் இந்தப் பிரச்னை இருப்பதைப் பார்க்கிறேன். பெண்களுக்கு ஏற்படும் இத்தகைய ... மேலும் பார்க்க

Doctor Vikatan: மீன் எண்ணெய் மாத்திரைகள்... சைவ உணவுக்காரர்கள் எடுத்துக்கொள்ளலாமா?

Doctor Vikatan: மீன் எண்ணெய் மாத்திரை என்றால் என்ன... இது மீனிலிருந்துதான் தயாரிக்கப்படுகிறதா... சைவ உணவுக்காரர்கள் இதைச் சாப்பிடலாமா... இம்மாத்திரையின் பயன்கள் என்னென்ன?-அ. யாழினி பர்வதம் சென்னை பதில... மேலும் பார்க்க