செய்திகள் :

Mecca, Medina-ல் ஹூதி ஏவிய ஏவுகணையின் சிதறல்கள்? சவூதி பகிர்ந்த போட்டோ; ஹூதி சொல்வது என்ன?

post image

மத்தியக் கிழக்கில் சவூதி அரேபியா மற்றும் ஏமனின் ஹூதிப் படைக்கு இடையே கடுமையான தாக்குதல்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.

மக்கா, மதீனா...

தற்போது சவூதியின் பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்...

"பயங்கரவாத ஹூதிப் படையினரால் மக்கா அல்-முகர்ரமா மற்றும் மதீனா அல்-முனவ்வரா பிராந்தியங்களை நோக்கி வீசப்பட்ட இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளின் சிதைவுகள் (ஷெல் துண்டுகள்) கீழே விழுந்துள்ளன" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்கா மற்றும் மதீனா முஸ்லிம்களின் புனிதத் தளங்களாகும்.

இதற்கு முன்பும், இந்த இரு தளங்களிலும் ஹூதிப் படை தாக்குதல் நடத்தியதாக சவூதி குற்றம்சாட்டியது.

புனிதத் தளங்களை வைத்து தங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சவூதி புனைகிறது என்று தொடர்ந்து ஹூதி கூறிவருகிறது.

சவூதி பகிர்ந்த போட்டோ
சவூதி பகிர்ந்த போட்டோ

ஹூதி மறுப்பு

இப்போதும் சவூதியின் குற்றச்சாட்டை, "புனிதப் பகுதிகளான மக்கா மற்றும் மதீனாவைக் குறிவைத்து எங்கள் படைகள் தாக்குதல் நடத்தியதாக சவூதி பரப்புவது முற்றிலும் மிகப்பெரிய பொய்யாகும்" என்று ஹூதி அமைப்பின் ராணுவச் செய்தித்தொடர்பாளர் யாஹ்யா சரீ மறுத்துள்ளார்.

ஆனால், மக்கா மற்றும் மதீனாவில் விழுந்ததாகக் கூறப்படும் பாலிஸ்டிக் ஏவுகணைகளின் சிதைவுகளின் புகைப்படங்களைத் தங்கள் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது சவூதி பாதுகாப்புப் படை.

"கட்டணமில்லா அரிசியை பாலிஷ் போட்டு ரூ.30-க்கு விற்றுக் கொள்ளை அடிப்பதுதான் மாற்றமா?" - உதயநிதி சாடல்

ரேஷன் கடைகளில் வழங்கப்படும் கட்டணமில்லா அரிசியை பாலிஷ் போட்டு சன்னரகப் பொன்னி அரிசியாக த.வெ.க. அரசு விற்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக... மேலும் பார்க்க

திட்டம் தீட்டிய தனுஷ்? களத்தில் இறங்கிய நிர்வாகிகள் - மகளிரணி சந்திப்பின் பின்னணி என்ன?

சென்னை OMR இல் உள்ள தனியார் கல்லூரியில் நடிகர் தனுஷ் தனது நற்பணி இயக்கத்தின் மகளிரணி நிர்வாகிகளை இன்று சந்திக்கிறார். 'தனுஷ் அரசியலுக்கு வருகிறாரா?' எனும் கேள்வி அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியிருக... மேலும் பார்க்க

தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா, நீதி தவறும் மத்திய அரசு; பறிக்கப்படும் தமிழக விவசாயிகளின் உரிமைகள்!

அனைவருக்கும் பசுமை வணக்கம்!கர்நாடக அரசு, தமிழ்நாட்டுக்குச் சட்டப்படி தரவேண்டிய தண்ணீரைத் திறந்துவிடாததால், காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு குறுவை நெல் சாகுபடி பொய்த்துப்போனது. தற்போது மேட்டூர் ... மேலும் பார்க்க

"திருமாவளவனை முதல்வராக்க நானும் எடப்பாடியும் முயன்றோம்" - என்ன சொல்கிறார் டிடிவி தினகரன்?

அதிமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று (அக்.24) செய்தியாளர்களைச் சந்திருக்கிறார். அப்போது, 'தனுஷ் அதிமுகவிற்கு வருகிறாரா?' என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "ஒரு நடிகர் வந்துதான் அதிமுகவ... மேலும் பார்க்க

தனுஷ் ரசிகர்கள் சந்திப்புக் கூட்டம்: இடம் கொடுத்த CM விஜய்க்கு நெருக்கமான கல்லூரி? விவரம் என்ன?

நடிகர் தனுஷ் தமிழக அரசியலில் பேசுபொருளாகியிருக்கிறார். தவெக, அதிமுக, அமமுக எனப் பல கட்சியினரும் தனுஷின் அரசியல் வருகை குறித்து பேசியிருக்கின்றனர். இந்நிலையில், நாளை சென்னையில் தன்னுடைய பெண் ரசிகைகளுக்... மேலும் பார்க்க

'நீலாங்கரை வீட்டை காலி செய்து அரசு பங்களாவில் குடியேறுகிறாரா முதல்வர் விஜய்?' - உண்மை என்ன?

முதல்வர் விஜய் அவர் வசிக்கும் நீலாங்கரை வீட்டை காலி செய்து பசுமைவழிச் சாலையில் உள்ள அரசு பங்களாவில் குடியேறவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தத் தகவலின் உண்மைத்தன்மையை அறிய தலைமைச் செயலக அதிகார... மேலும் பார்க்க