செய்திகள் :

Doctor Vikatan: கையை உயர்த்தவே முடியாத அளவுக்கு தோள்பட்டை வலி... அறுவை சிகிச்சைதான் தீர்வா?

post image

Doctor Vikatan: என் நண்பனுக்கு 55 வயதாகிறது. கடந்த சில மாதங்களாகக் கடுமையான தோள்பட்டை வலியால் அவதிப்படுகிறான். மருத்துவர்களைப் பார்த்து வலி நிவாரணிகள் எடுத்துக்கொண்டும் எந்தப் பயனும் இல்லை.

இந்நிலையில் இதற்கு அறுவை சிகிச்சைதான் தீர்வு என்கிறார்கள் சிலர். இதென்ன பிரச்னை... அறுவை சிகிச்சை தவிர்த்து வேறு தீர்வுகள் கிடையாதா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, எலும்பியல்  சிகிச்சை மருத்துவர் ரமேஷ்பாபு.

லும்பியல் சிகிச்சை மருத்துவர் ரமேஷ்பாபு
லும்பியல் சிகிச்சை மருத்துவர் ரமேஷ்பாபு

உங்கள் நண்பருக்கு இருப்பதாகச் சொல்லும் அறிகுறிகள் 'ஃப்ரோஸன் ஷோல்டர்' (frozen shoulder) எனப்படும் பிரச்னையாகத் தெரிகிறது.

தோள்பட்டையின் பந்து கிண்ண மூட்டைச் சுற்றியுள்ள தசைகள் இறுகிப்போவதால்தான் (Tightness) ஃப்ரோஸன் ஷோல்டர் என்கிற பிரச்னையே வருகிறது. இதனால் தோள்பட்டையை உயர்த்தவோ அல்லது சுழற்றவோ முடியாத அளவுக்குக் கடுமையான வலியும் இயக்கம் முடக்கமும் ஏற்படும்.

ஃப்ரோஸன் ஷோல்டர் பிரச்னைக்கான பிரதான காரணங்கள், சர்க்கரைநோய், தைராய்டு மற்றும் கொலஸ்ட்ரால் ஆகியவைதான். ஃப்ரோஸன் ஷோல்டர் பாதிப்புக்கு எடுத்த உடனேயே அறுவை சிகிச்சை செய்யப்படுவதில்லை. முதலில் பிசியோதெரபி சிகிச்சையே பரிந்துரைக்கப்படும்.

அதில் எந்த முன்னேற்றமும் இல்லாத பட்சத்தில் எக்ஸ்ரே, எம்.ஆர்.ஐ பரிசோதனைகள் செய்யச் சொல்வோம். ரத்தப் பரிசோதனை மூலம் சர்க்கரை நோய் (Diabetes), தைராய்டு (thyroid) மற்றும் கொலஸ்ட்ரால் (cholesterol) பிரச்னைகள் உள்ளனவா என்று உறுதிசெய்ய வேண்டும்.

பிசியோதெரபியில் பலன் இல்லையெனில், மயக்க மருந்து கொடுத்துத் தோள்பட்டையைத் தளர்வாக்கும் சிகிச்சை (Manipulation under anesthesia) செய்யப்படும்.

பிசியோதெரபியில் பலன் இல்லையெனில், மயக்க மருந்து கொடுத்து, தோள்பட்டையைத் தளர்வாக்கும் சிகிச்சை (Manipulation under anesthesia) செய்யப்படும். இதிலும் முன்னேற்றம் இல்லையெனில், நுண்துளை அறுவை சிகிச்சை (Key-hole surgery) செய்யப்படும். ஃப்ரோஸன் ஷோல்டர் பிரச்னையானது  இரண்டு தோள்பட்டைகளிலும் வரக்கூடும்.

பொதுவாக நாம் அதிகம் பயன்படுத்தும் கையில் இது முதலில் ஏற்படும். ஒருவேளை இடது தோள்பட்டையில் வலி ஏற்பட்டால், அது இதயப் பிரச்னை (Heart problem) காரணமாக இருக்கலாம் என்பதால் அதையும் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். தோள்பட்டை வலி என அலட்சியமாக இருப்பது ஆபத்தாகலாம். 

டாக்டர் ரமேஷ்பாபு:

சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள ஸ்பாட் மருத்துவமனையின் இயக்குநர். எலும்பியல் மருத்துவத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் மிக்கவர்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

Doctor Vikatan: மெனோபாஸ் காலத்தில் அதிகரிக்கும் எடை... இனிமேல் வாக்கிங் பலன் தராதா?

Doctor Vikatan:என் வயது 52. நான் இத்தனை வருடங்களாக சரியான எடையில்தான் இருந்தேன். தினமும் 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்கிறேன். இப்போது மெனோபாஸ் வந்துவிட்டதால், எடை அதிகரித்துக்கொண்டே போகிறது. அதே உணவ... மேலும் பார்க்க

Doctor Vikatan: நள்ளிரவில் சிறுநீர், கலையும் தூக்கம்... விடியும்வரை விழிப்பு... தீர்வு உண்டா?

Doctor Vikatan:என்னுடைய வயது 56. நள்ளிரவில் சிறுநீர் கழிக்கச் செல்வது வழக்கமாகி விட்ட நிலையில் மீண்டும் படுக்கைக்கு வந்து படுத்தால் தூங்க முடிவதில்லை. விடியற்காலை வரை விழித்திருக்கிறேன். இதற்குத் தீர்... மேலும் பார்க்க

Doctor Vikatan: திடீரென குறையும் உடல் எடை... ஆரோக்கியத்தின் அறிகுறியா... நோய் பாதிப்பா?

Doctor Vikatan: என் வயது 34. எனக்கு கடந்த சில மாதங்களாக உடல் எடை குறைந்து கொண்டே வருவதை உணர்கிறேன். எடைக்குறைப்பு என்பது ஒருவகையில் சந்தோஷமாகத் தோன்றினாலும், இன்னொரு பக்கம் இந்தத் திடீர் எடையிழப்பு ஏத... மேலும் பார்க்க

`வாரத்திற்கு ஒருமுறை போதும்!' – நீரிழிவு நோயாளிகளுக்கான புதிய இன்சுலின்!

உலகின் முதல் வாரத்திற்கு ஒருமுறை செலுத்தப்படும் நீண்டகால இன்சுலின் மருந்தான அவிக்லி (Awiqli), சர்க்கரை நோய் சிகிச்சையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நீரிழிவு மருத்துவர்சத்யன் ராகவன... மேலும் பார்க்க

SIMS: சர்வதேச நோயாளிகளுக்கு புதிய தலைமுறை ‘இடுப்பு எலும்பை பாதுகாக்கும் வெற்றிகர அறுவை சிகிச்சை’

இடுப்பு மாற்று அறுவைசிகிச்சையில் புதிய மைல்கல்லை எட்டும் வகையில், சிம்ஸ் மருத்துவமனை ஆசியாவிலேயே முதல் முறையாக புதிய தலைமுறை 'எலும்பை பாதுகாக்கும் இடுப்பு அறுவை சிகிச்சையை' (Bone-Sparing Hip Procedure... மேலும் பார்க்க

2,000 ரோபோடிக் எலும்பியல் அறுவை சிகிச்சைகளைக் கடந்து அப்போலோ மருத்துவமனை சாதனை!

சென்னை, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனை, முழுமையான மற்றும் பகுதி மூட்டு மாற்று அறுவைசிகிச்சைகள், மற்றும் முழுமையான இடுப்பு மாற்று அறுவைசிகிச்சைகள் உட்பட 2,000-க்கும் மேற்பட்ட ரோபோடிக் உதவிய... மேலும் பார்க்க