செய்திகள் :

Doctor Vikatan: அடிக்கடி ஷவர்மா சாப்பிடும் பிள்ளைகள்... வெஜிடேரியன் ஷவர்மா ஆரோக்கியமானதா?

post image

Doctor Vikatan: என் மகனுக்கு 23 வயதாகிறது. அவன் வாரத்துக்கு 3-4 நாள்கள் ஷவர்மா சாப்பிடுகிறான்.  இது அவனது ஆரோக்கியத்தை பாதிக்குமா... வெஜிட்டேரியன் ஷவர்மா சாப்பிடலாம், அது ஆரோக்கியமானதுதான் என்கிறார்கள் சிலர். அது உண்மையா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த,  ஊட்டச்சத்து ஆலோசகர் நிரோஷா.

ஊட்டச்சத்து ஆலோசகர் நிரோஷா

ஷவர்மா என்பது மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து நமக்கு அறிமுகமான ஓர் உணவு. கோதுமை அல்லது மைதாவில் தயாரித்த ரோலில் நிறைய காய்கறிகள், சிக்கன், மட்டன் , கொண்டைக்கடலையை அரைத்துச் செய்யப்படுகிற ஹம்மஸ் ஆகியவை சேர்த்துச் செய்யப்படுகிற உணவு.

ஷவர்மா சாப்பிடுவோர் அது ஆரோக்கியமானதா, சுத்தமாகத் தயாரிக்கப்படுவதா என  இரண்டு விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.    மத்திய கிழக்கு நாடுகளில் ஃப்ரெஷ்ஷான காய்கறிகள், சிக்கன், மட்டன் மற்றும் புரதச்சத்து நிறைந்த ஹம்மஸ் என எல்லாம் சேர்வதால் அங்கெல்லாம் ஷவர்மா என்பது ஆரோக்கியமான உணவாகவே இருந்தது. ஆனால், நம்மூரில் விற்கப்படும் ஷவர்மா அப்படியில்லை. இங்கே அதில்  மயோனைஸ்தான் பிரதானமாகச் சேர்க்கப்படுகிறது.  ஷவர்மா கடைகளில் அதைச் சமைக்கும்போது  வெளிப்புறம் மட்டுமே வெந்து, உள்ளே அசைவ உணவுகள் அப்படியே வேகாமல் இருப்பதை கவனிக்கலாம். அதாவது முழுமையாகச் சமைக்கப்படாத உணவாகவே இருக்கும். 

விற்காத ஷவர்மாவை மீண்டும் மீண்டும் பதப்படுத்தி, அடுத்தடுத்த நாள்களில் பயன்படுத்துவார்கள்.  அசைவ உணவுகளை முறையாகப் பதப்படுத்தி, குளிரூட்டப்பட்ட நிலையில் வைக்காவிட்டால் அவை ஆரோக்கியக் கேட்டை ஏற்படுத்தும்.  இ கோலை, சால்மனெல்லா போன்ற பாக்டீரியா கிருமிகளை உருவாக்கி, ஃபுட் பாய்சனை ஏற்படுத்தலாம். 

ஷவர்மா சாப்பிட நினைத்தால் முதலில் அந்தக் கடையின் சுகாதாரத்தை கவனியுங்கள்.

ஷவர்மா சாப்பிட நினைத்தால் முதலில் அந்தக் கடையின் சுகாதாரத்தை கவனியுங்கள். தினமும் எவ்வளவு தயாரிக்கிறார்கள், எவ்வளவு  விற்பனையாகிறது என்று பாருங்கள். திறந்தவெளியில் வைத்துச் சமைக்கும் கடைகளைத் தவிருங்கள். சுகாதாரமாகத் தயாரிக்கப்பட்டாலும் ஷவர்மாவை மாதத்தில் ஒருநாள் சாப்பிட்டால் பிரச்னையில்லை. சிலர் வெஜிடேரியன் ஷவர்மா நல்லது என்ற எண்ணத்தில் அதைச் சாப்பிடுகிறார்கள். அதிலும் மயோனைஸ், தரமற்ற பனீர், சுத்தம் செய்யப்படாத முட்டைகோஸ் போன்றவையே பிரதானமாக இருக்கும்.  அடிக்கடி ஷவர்மா சாப்பிட்டால் உடல் எடை கூடும். பெண்களுக்கு பீரியட்ஸ் தொடர்பான பிரச்னைகள் வரலாம். செரிமானம் பாதிக்கப்படலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 

Doctor Vikatan: இனி வாரம் ஒருமுறை ஊசி போட்டால் போதும்; இன்சுலின் போடுவோருக்கு குட் நியூஸ்!

Doctor Vikatan: என் வயது 52. கடந்த ஒரு வருடமாக சர்க்கரைநோய்க்கு இன்சுலின் போட்டுக்கொண்டிருக்கிறேன். தினமும் ஊசி குத்திக்கொள்வது வலியைத் தருகிறது. தவிர, சில நாள்களில் மறந்துவிடுகிறேன். இந்நிலையில்தான் ... மேலும் பார்க்க

Doctor Vikatan: தோள்பட்டையிலிருந்து விரல்களுக்கு இறங்கும் வலி... எப்படிப்பட்ட சிகிச்சை தேவை?

Doctor Vikatan: எனக்கு தோள்பட்டையில்வலி இருக்கிறது. தவிர வலது கை மற்றும் விரல்களிலும் வலி இருக்கிறது. மொபைல் பார்க்க முடியாத அளவுக்கு வலி இருக்கிறது. இதற்கு எப்படிப்பட்ட சிகிச்சை எடுக்க வேண்டும்... பி... மேலும் பார்க்க

Doctor Vikatan: எந்த க்ரீமும் ஹெல்ப் பண்ணலையா... உங்க ஸ்கின் இன்ஸ்டன்ட்டா Glow ஆகணுமா?

Doctor Vikatan: என் வயது 40. மாநிறமாக இருப்பேன். நான் மாதம் தவறாமல் ஃபேஷியல் செய்துகொள்வேன். காஸ்ட்லியான காஸ்மெட்டிக்ஸ்தான் உபயோகிக்கிறேன். என்ன செய்தும் என் சருமத்தில் மாற்றம் தெரியவில்லை. சருமத்தை இ... மேலும் பார்க்க

Doctor Vikatan: காரணமே இல்லாம திடீர்னு உடல் எடை குறையுதா... இதையெல்லாம் கவனிச்சீங்களா?

Doctor Vikatan: என் வயது 43. எனக்குக் கடந்த சில மாதங்களாக உடல் எடை மெள்ள மெள்ள குறைந்து வருகிறது. எடையைக் குறைப்பதற்காக நான் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. இப்படி திடீரென உடல் எடை குறைய என்ன காரணம்.... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஒருமணி நேரத்துக்கொருமுறை சிறுநீர்... உடனே வெளியேறாத சிறுநீர், தீர்வென்ன?

Doctor Vikatan:எனக்கு வயது 26. எனக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு வருகிறது. குறிப்பாக, பயணம் செய்யும்போது இந்த உணர்வு அதிகமாக இருக்கிறது. ஆனால், தற்போது சில நாள்களாக வீட்டில் இருக்கு... மேலும் பார்க்க

Doctor Vikatan: தலையில் கைவைத்தாலே கொத்துக்கொத்தா முடி கொட்டுதா... உடனே நிறுத்த 10 டிப்ஸ்!

Doctor Vikatan: என் வயது 40. எனக்கு கடந்த ஒரு மாதமாக எக்கச்சக்கமாக முடி உதிர்கிறது. எண்ணெய், ஷாம்பூ போன்றவற்றை மாற்றிப் பார்த்தும் முடி உதிர்வது நிற்கவில்லை. முடி உதிர்வை ஒரே வாரத்தில் நிறுத்தலாம் என்... மேலும் பார்க்க