செய்திகள் :

Elon Musk செலவளித்த $50 கோடி வீண்; டெக்சாஸில் தோற்ற ட்ரம்ப் கட்சி; இது Elon-க்கு பெர்சனல் பின்னடைவு

post image

2024-ம் ஆண்டு அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடந்தபோது, ட்ரம்ப் வெற்றி பெற வேண்டும் என்று உலகின் டாப் பணக்காரர் எலான் மஸ்க் கிட்டத்தட்ட 25 கோடி டாலரைச் செலவளித்தார்.

அவருடைய இந்தச் செலவு வீணாகவில்லை. ட்ரம்ப்பே அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றார்.

ட்ரம்ப் மற்றும் எலான் மஸ்க் நட்பு 2025-ம் ஆண்டு மே மாதம் வரைக்கும் மிக நன்றாகச் சென்றுகொண்டிருந்தது. அப்போது ட்ரம்ப் புதிய வரிச் சட்டம் ஒன்றைக் கொண்டுவர, இருவரின் உறவில் விரிசல் உண்டானது.

ஆனால், சில மாதங்களாக, எலான் - ட்ரம்ப் உறவு ஓரளவு சுமுகமாகவே இருக்கிறது.

எலான் மஸ்க்
எலான் மஸ்க்

எலான் மஸ்க் செலவு

இந்த நிலையில்தான், அமெரிக்காவில் மிட் டேர்ம் தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் டெக்சாஸ் மாகாணத்தில் குடியரசுக் கட்சி (ட்ரம்ப் கட்சி) வேட்பாளர்தான் வெற்றி பெற வேண்டும் என்று கிட்டத்தட்ட ஐம்பது கோடி டாலர்களைச் செலவழித்துள்ளார்.

இதற்கு ட்ரம்பின் நட்பு அல்ல. டெக்சாஸ்தான் எலான் மஸ்க்கின் பிசினஸ் மையம்.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் கார்ப்பரேட் தலைமையகம் டெக்சாஸில்தான் உள்ளது. டெக்சாஸில்தான் எலான் மஸ்க் வசிக்கிறார். காரணம், டெக்சாஸில் பெர்சனல் வரி இல்லை.

எலான் மஸ்க் நிறுவனங்களின் சட்டப்பூர்வ தலைமையகம் டெக்சாஸில்தான் உள்ளன. இதனால், தனக்குச் சாதகமான கட்சி டெக்சாஸில் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தார். ஆனால், அது நடக்கவில்லை.

டெக்சாஸில் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. அதுவும் முப்பது ஆண்டுகளுக்குப் பின் டெக்சாஸில் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதில் எலான் மஸ்க்கிற்கு நிச்சயம் ஏமாற்றம்தான்.

"போராட்டம் எங்களைப் பாதிக்கிறது; 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்.!" - ராகுலுக்கு வணிகர் சங்கம் கடிதம்

தேர்தல் மற்றும் சிறப்புத் தீவிரத் திருத்தக் குளறுபடிகளை எதிர்த்தும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் டெல்லியில் தொடர்ந்து போராட்டம் ந... மேலும் பார்க்க

"துரைமுருகனுக்கு பாராட்டுக்கள்; ஜோசப் விஜய்னு நான் சொன்னப்போ தப்பா நினைச்சீங்க, இப்போ.!" - ஹெச்.ராஜா

வேலூரில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். " தமிழகத்தில் இந்துக்களை நாங்கள் அடிமைப்படுத்திவிட்டோம் என்று சில கட்சிகள் மக்கள் மனதில் பதிய வைத்திருக... மேலும் பார்க்க

"தேர்தல் தோல்விக்கு ஈரான் போர் தான் காரணம்; இந்த 4 விஷயங்களை செய்தால் எல்லாம் சரியாகும்" - JD வான்ஸ்

அமெரிக்காவில் நேற்று முன்தினம் (நவம்பர் 3) நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்தத் தேர்தலில் கீழ்சபை (பிரதிநிதிகளின் சபை), மேல்சபை (செனட்) இரண்டிலுமே ட்ரம்ப் கட்சி (குடியரசுக் கட்சி) பெரும் ... மேலும் பார்க்க

தீபாவளி பேருந்து: சென்னையில் எந்தப் பேருந்து நிலையத்திலிருந்து எந்த ஊருக்குச் செல்லலாம்? முழு விவரம்

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் எந்தப் பேருந்து நிலையத்தில் இருந்து எந்தெந்த ஊர்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்று போக்குவரத்து துறை அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. எந்தப் பேருந்து... மேலும் பார்க்க

'ஹார்முஸ் நீர்ச்சந்தி வழியாக இந்தியக் கப்பல்கள் பயணிக்கலாம்' - ஈரான் அனுமதிக்க காரணம் என்ன?

போர் தொடங்கியதும் ஹார்முஸ் நீர்ச்சந்தியை மூடியது ஈரான். கடந்த பிப்ரவரி மாதத்தின் இறுதியில் அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது போரைத் தொடங்கியது. ஏற்கெனவே தடைகளால் பொருளாதாரப் பிரச்னையைச் சந்தித்து வந... மேலும் பார்க்க