செய்திகள் :

மூக்குத்தி அம்மன் 2: "20 நிமிஷ க்ளைமாக்ஸிற்காக 1 வருடம் வேலை பார்த்திருக்கிறோம்" - சுந்தர்.சி

post image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை (அக்.6) 'மூக்குத்தி அம்மன்- 2' படம் வெளியாக இருக்கிறது. சுந்தர்.சி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா, ரெஜினா கசாண்ட்ரா, அபிநயா, ஊர்வசி, யோகிபாபு, மைனா நந்தினி, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சுந்தர்.சி, "ஆணாதிக்கம் நிறைந்த இன்டஸ்ரியில் கதாநாயகி, வில்லி என இரண்டு பெண்கள் நடித்திருக்கிறார்கள். லேடி பவர் கொண்ட ஒரு படம் இது. திருவிழாவிற்கு எப்போதும் ஒரு கொண்டாட்டமான படத்தையே எதிர்பார்ப்போம்.

மூக்குத்தி அம்மன் 2 படத்தில்...
மூக்குத்தி அம்மன் 2 படத்தில்...

அந்தவகையில் 'மூக்குத்தி அம்மன்' ஒரு கொண்டாட்டப் படமாக இருக்கும். இந்தப் படத்தை முழுக்க முழுக்க ஒரு பக்தி படம் என்று சொல்ல மாட்டேன். இது ஒரு என்டர்டெயினர் படம். இரண்டு மணி நேரம் கலகலப்பாக ஜாலியாக இருக்கும்.

பக்தி நிறைந்த ஒரு ஆக்ஷன் படமாக இருக்கும். படத்தில் க்ளைமாக்ஸ் 20 நிமிடங்கள். அந்த க்ளைமாக்ஸிற்காக ஒரு வருடம் வேலை பார்த்திருக்கிறோம். தியேட்டரில் இந்தப் படத்தைப் பார்க்கும்போது ஒரு புதுவிதமான அனுபவமாக இருக்கும்" என்று பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Exclusive: 6 ஏக்கரில் பிரமாண்ட வீடு; இணையும் நடிகர்கள்... `கார்த்தி 30', `மார்ஷல்' Shoot Update!

படத்திற்கு படம் வித்தியாசமான ஜானர்களில் நடித்து வரும் கார்த்தி, அடுத்தும் ஆச்சர்யங்கள் கொடுக்க காத்திருக்கிறார். அண்ணன் சூர்யாவைத் தொடர்ந்து கார்த்தியும் நேரடி தெலுங்கில் கால் பதித்திருக்கிறார்.. 'விஸ... மேலும் பார்க்க

``'பத்தா' படத்தை இரண்டாவது முறையாகப் பார்த்து ரொம்பவே அழுதேன்..!" - அனுராக் காஷ்யப்

விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் வெளியானப் படம் 'பத்தா'. மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தத் திரைப்படம், நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி-யில் வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்தில் லிஜோ மோல்... மேலும் பார்க்க

நூறு கோடி வானவில்: "இந்தப் படம் இவ்வளவு நாள் வெளியாகாமல் இருந்தது வருத்தம்" - ஹரிஷ் கல்யாண்

இயக்குநர் சசி எழுதி இயக்​கி​யிருக்கும் படம் ‘நூறு கோடி வானவில்'. இந்தப் படத்​தில் ஹரிஷ் கல்யாண், சித்தி இத்​னானி, கோவை சரளா, தம்பி ராமையா, சின்னி ஜெயந்த், மூர்த்தி உட்​பட பலர் நடித்​துள்ளனர். இதன் படப... மேலும் பார்க்க

Special Show: டிக்கெட் விலையை உயர்த்த கோரிக்கை; காலை 6 மணி காட்சிகளுக்கு அனுமதி; யாருக்கு லாபம்?

சிறப்புக்காட்சிகளுக்குத் தமிழக அரசு தற்போது அனுமதி வழங்கியிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு, தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கமும், தயாரிப்பாளர்கள் சங்கமும், திரையரங்க உரிமையாளர்கள் சங்கமு... மேலும் பார்க்க

'சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி' - திரைத்துறையினரின் கோரிக்கைக்கு அனுமதியளித்த தமிழக அரசு!

திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியாகும் நாளிலிருந்து ஒரு வாரத்திற்குத் தினமும் 6 காட்சிகள் காலை 6 மணி முதல், அடுத்த நாள் இரவு 2.30 மணி வரை திரையிட்டுக் கொள்ளத் தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறத... மேலும் பார்க்க