செய்திகள் :

Hello Kadhal: "இருவரும் சேர்வதற்கு நானும் ஒரு காரணமாக இருந்தேன்" - சதீஷ் கலகல

post image

ஆர்யா, நிகிலா விமல், வைஷ்ணவி சைதன்யா ஆகியோர் நடித்திருக்கும் 'ஹலோ காதல்' திரைப்படம் டிசம்பர் 4-ம் தேதி வெளியாகிறது.

மலையாளத்தில் 'பிரணய விலாசம்' படத்தை இயக்கிய இயக்குநர் நிகில் முரளி, இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

Arya - Hello Kadhal Movie
Arya - Hello Kadhal Movie

இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நேற்றைய தினம் நடைபெற்றது. அந்த நிகழ்வில் கலந்துக் கொண்ட நடிகர் சதிஷ், ஆர்யா குறித்து பேசியிருக்கிறார்.

"திரையுலகில் யாருக்கு என்ன நிகழ்வு என்றாலும் முதல் ஆளாக ஆர்யா வந்து நிற்பார். ஆனால், இன்று ஆர்யாவுக்காக யாரும் வரவில்லை (சிரித்துக்கொண்டே...). ஆர்யாவின் வாழ்க்கையில் நடந்த சில முக்கிய விஷயங்களில் நானும் சம்பந்தப்பட்டிருக்கிறேன்.

குறிப்பாக, அவருக்குத் திருமணம் நடந்து முடிந்ததில் நானும் ஒரு முக்கியக் காரணமாக இருந்திருக்கிறேன். 'கஜினிகாந்த்' திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதுதான், 'சரி, வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம். இதைவிட ஒரு நல்ல பெண் கிடைக்க மாட்டார், இதையே ஓகே செய்துவிடலாம்' என ஆர்யா முடிவு செய்து, காதலுக்கான வேலைகளை ஆரம்பித்தார்.

நடிகர் சதீஷ்
நடிகர் சதீஷ்

அப்போது என்னிடம் வந்து, 'டார்லிங், போய் என்னைப் பற்றி ஏதாவது நல்லவிதமாக சாயிஷாவிடம் சொல்' என்றார். எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

பிறகு அவர், 'நீ சாயிஷாவிடம் பேசிச் சம்மதிக்க வைப்பது கஷ்டம். அவருடைய தாயார் படப்பிடிப்புத் தளத்திற்கு வருவார். நீ நேராக அவர் அம்மாவிடம் போய் முதலில் நல்லவிதமாகப் பேசு' என்று ஐடியா கொடுத்தார்.

நானும் நேராக சாயிஷாவின் அம்மாவிடம் சென்று, 'ஆர்யா எல்லோருக்கும் பயங்கரமாக உதவி செய்வார், ரொம்ப நல்ல டைப். எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது. இப்படியொரு மாப்பிள்ளை யாருக்காவது கிடைத்தால் சூப்பராக இருக்கும்' என அரை மணி நேரம் புகழ்ந்து தள்ளிவிட்டேன்.

அனைத்தையும் கேட்டுவிட்டு அவர், 'எனக்குத் தமிழ் தெரியாது' என இந்தியில் சொல்லிவிட்டார். அதன்பிறகு எனக்குத் தெரிந்த இந்தியில் அதையெல்லாம் அவருக்குப் புரிய வைத்து, ஒருவழியாக இருவரையும் சேர்த்து வைப்பதில் நானும் ஒரு காரணமாக இருந்தேன்" என நகைச்சுவையாகப் பேசினார்.

"அவர் உயிரோடு இருந்திருந்தால் 10 ஹீரோக்களை அறிமுகப்படுத்தியிருப்பார்" - நினைவுகளைப் பகிரும் ஆர்யா

ஆர்யா, நிகிலா விமல், வைஷ்ணவி சைதன்யா ஆகியோர் நடித்திருக்கும் 'ஹலோ காதல்' திரைப்படம் டிசம்பர் 4-ம் தேதி வெளியாகிறது. மலையாளத்தில் 'பிரணய விலாசம்' படத்தை இயக்கிய இயக்குநர் நிகில் முரளி, இப்படத்தை இயக்கி... மேலும் பார்க்க

"அந்த நபரின் வாழ்க்கை கருதி... அவரை எந்தக் கடவுள் வந்தாலும் காப்பாற்ற முடியாது!" - இயக்குநர் சேரன்

ஜெயா டி.வி-யில் இயக்குநர் மற்றும் நடிகர் சேரன் 'யார் சரி' என்கிற விவாத நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார். அந்த நிகழ்ச்சியின் சமீபத்திய எபிசோட் 'பாப்புலாரிட்டி எதில் அதிகம் கிடைக்கிறது? சினிமாவா?... மேலும் பார்க்க

"பாலிவுட்டை விடத் தென்னிந்தியத் திரையுலகம் பல மடங்கு சிறந்தது" - நடிகை சமீரா ரெட்டி கூறியதென்ன?

நடிகை சமீரா ரெட்டி பாலிவுட்டை விட தென்னிந்தியத் திரையுலகமே சிறந்தது என்று தெரிவித்திருக்கிறார்.'Hindustan Times' ஊடகத்திற்கு பேட்டி அளித்திருக்கும் சமீரா ரெட்டி, "தென்னிந்தியத் திரையுலகில் பணியாற்றியத... மேலும் பார்க்க

அனிருத் - காவியா திருமண வரவேற்பு: பங்கேற்ற பல மாநில முதல்வர்கள் டு திரை நட்சத்திரங்கள் | Photo Album

அனிருத் - காவ்யா மாறன் திருமண வரவேற்பு நிகழ்வு! - முதல்வர் விஜய், திரை பிரபலங்கள் பங்கேற்பு!சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglRசினிமா தொடர்பான எக்ஸ... மேலும் பார்க்க

அனிருத் - காவ்யா மாறன் திருமண வரவேற்பு நிகழ்வு! - முதல்வர் விஜய், திரை பிரபலங்கள் பங்கேற்பு!

அனிருத் ரவிச்சந்தர் - காவ்யா மாறன் திருமணம் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிரீஸ் நாட்டில் நடைபெற்றது. நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். View this post on I... மேலும் பார்க்க

Scene: "எங்களை விட நீங்கள் இந்த வெற்றியை அதிகமாக கொண்டாடி மகிழ்ந்திருக்கிறீர்கள்!" - நெகிழும் சூர்யா

இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா, நஸ்ரியா, நஸ்லென் நடிப்பில் வெளியான 'சீன்' திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. சீன் திரைப்படம்படத்திற்குக் கிடைத... மேலும் பார்க்க