செய்திகள் :

Hi Movie: "நன்றி தெரிவிக்கும் விழாவுக்கு நயன்தாரா ஏன் வரவில்லை.!"- கிண்டலடித்த ராதிகா

post image

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில், நயன்தாரா, கவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘Hi’.

இந்தப் படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நேற்று (செப்.2) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய ராதிகா, " நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் ‘Power Couple’. அவர்கள் வெற்றியைப் பார்த்து நான் நிறைய முறை சந்தோஷப்பட்டிருக்கிறேன்.

Hi movie
Hi movie

நன்றி தெரிவிக்கும் விழாவுக்கு நயன்தாரா ஏன் வரவில்லை. பிறகு நன்றி சொல்வார்களா? அவர் சார்பாக நானே நன்றி சொல்லிக்கொள்கிறேன்" என்று கிண்டலாக பேசினார்.

தொடர்ந்து, "நயன்தாரா பார்ப்பதற்கு மென்மையானவர் போல தெரிந்தாலும், மனதளவில் மிகவும் கடினமானவர். உங்களைப் பார்க்கும்போது நீங்கள் எப்படி இவ்வளவு சக்சஸாக இருக்கிறீர்கள் என்று புரிந்துகொள்ள முடிகிறது என்று அவரிடமே கூறியிருக்கின்றேன்.

மிகவும் பொறுமையானவர். இந்தப் படத்தின் பயணத்தில் எல்லோரும் சிறப்பாக நேரத்தை செலவிட்டு சந்தோஷமாக இருந்தோம்" என்று பேசியிருக்கிறார்.

Sherif: "இன்னொருத்தருடைய உழைப்புல அவங்க பெயரை போட்டுக்கிறாங்க!" - நடன இயக்குநர் ஷெரிஃப்

'கனிமா', 'பவள மல்லி' உள்ளிட்ட பல பாடல்களுக்கு நடன இயக்கம் செய்தவர் நடன இயக்குநர் ஷெரிஃப். அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் அவர் சமீபத்தில் பதிவிட்ட காணொளி, பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்தக் காணொள... மேலும் பார்க்க

Mandaadi: "தமிழரின் கதையை உலகம் பேசுமாறு செய்வதே பெருவெற்றி!" - 'மண்டாடி'க்கு சீமான் பாராட்டு!

சூரியின் 'மண்டாடி' படத்திற்கு வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் மகிமா நம்பியார், சத்யராஜ், சுஹாஸ் ஆக... மேலும் பார்க்க

Venkat Prabhu: "இதுனாலதான் நான் லண்டனுக்கு போகல!"- 'லெனின் பாண்டியன்' பட நிகழ்வில் வெங்கட் பிரபு

அறிமுக இயக்குநர் டி.டி. பாலசந்திரன் இயக்கத்தில் தர்ஷன் கணேசன், கங்கை அமரன், ரோஜா ஆகியோர் நடித்திருக்கும் 'லெனின் பாண்டியன்' திரைப்படம் இந்த மாதம் 25-ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்தப் படத்தின் ப்ரீ ரி... மேலும் பார்க்க

Ilaiyaraaja: "இவன் என்கிட்டயே நடிப்பான்" - 'கங்கை அமரன்' பற்றி இளையராஜா கலகல

அறிமுக இயக்குநர் டி.டி. பாலசந்திரன் இயக்கத்தில் தர்ஷன் கணேசன், கங்கை அமரன், ரோஜா ஆகியோர் நடித்திருக்கும் 'லெனின் பாண்டியன்' திரைப்படம் இந்த மாதம் 25-ஆம் தேதி திரைக்கு வருகிறது. தர்ஷன் கணேசன், மறைந்த ந... மேலும் பார்க்க

Dorothy: 'தும்சக்கு தும்சக்கு தும்சக்கு!' - டொராண்டோ திரைப்பட விழாவில் ‘டோரதி' படக்குழு| Photo Album

சாலமன் பாப்பையா: "அனாதை பிள்ளைகளாக நாங்கள் நிற்கிறோம்"- மனமுடைந்து அழுத பாரதி பாஸ்கர் மேலும் பார்க்க

DC Exclusive: "லோகேஷை நடிக்க வச்சதுக்கு காரணம் இதுதான்!" - அருண் மாதேஸ்வரன் பேட்டி

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், லோகேஷ் கனகராஜ் நடிப்பில் வெளியான 'டிசி' படத்திற்கு வசூலாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இப்போது சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்திற்கு படம் வந்திருக்கிறத... மேலும் பார்க்க